சனிப்பெயர்ச்சி 2020-2023: ஏழரை சனி, அஷ்டம சனியா... கவலைப்படாதே சகோதரா
சனிபகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு ராசியில் தங்குவார். மெதுவாக நகரும் கோள் என்பதால் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி நிகழும். அடுத்த ஆண்டு ஜனவரியில் சனிப்பெயர்ச்சி நிகழ்கிறது.
மதுரை: சனி பார்க்கும் இடம் பாழ் என்பார்கள். சனிபகவான் பார்வை அத்தனை கொடூரமானது என்பார்கள். சனிபகவானால் சிவபெருமானும், ராவணனும் பாதிக்கப்பட்டிருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. நவகிரகங்களில் சனியைப் பார்த்து பயப்படாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். ஒருகால் முடமான சனிபகவான் மெதுவாக நகர்ந்து செல்வார் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு செல்ல இரண்டரை ஆண்டுகள் ஆகிறது.
தனுசு ராசியில் உள்ள சனிபகவான் மகரம் ராசிக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி செல்கிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் மிதுனம் ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனியும், கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரைசனியில் விரைய சனியும் தொடங்குகிறது. இந்த சனிப்பெயர்ச்சியால் பாதிப்பு எதுவும் இருக்காது காரணம் சனிபகவான் தனது ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார்.
விகாரி வருடம் தை மாதம் 10ஆம் தேதி ஜனவரி 24, 2020ஆம் ஆண்டு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு நகர்கிறார். விருச்சிக ராசிக்காரர்கள் கடந்த ஏழரை ஆண்டுகாலம் சனியில் பிடியில் சிக்கியிருந்தார்கள். அவர்களுக்கு ஏழரை சனி முடிகிறது. அதேபோல ரிஷப ராசிக்காரர்களுக்கு அஷ்டமத்து சனி முடிகிறது.
அதே நேரத்தில் கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்குகிறது. சனி 12ஆம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்கிறார். 12ஆம் அதிபதி 12ஆம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வது யோகமாகும். இதேபோல மிதுனம் ராசிக்கு எட்டாம் அதிபதியான சனிபகவான் எட்டாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்கிறார். இந்த அமைப்புகளால் மிதுனம் ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு, செய்யும் தொழிலில் உயர்வும் கிடைக்கும்.

மிதுனம்
அஷ்டமத்து சனி வரப்போகிறதே என்று அச்சமடையவேண்டாம். காரணம் மிதுனம் ராசிக்காரர்களுக்கு நிகழப்போகிற சனிப்பெயர்ச்சி அற்புதங்களை நிகழ்த்தப்போகிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக குடும்பத்தில் கணவன் மனைவி இடையே பிரச்சினையை ஏற்படுத்தியது. சனி பகவான் எட்டாம் வீட்டில் அமர்வதால் நன்மையே செய்வார். எனவேதான் அஷ்டமத்து சனி வரப்போகிறது என்று அஞ்சவேண்டாம் என்று கூறுகிறோம். அவர் உங்க ராசிக்கு எட்டு ஒன்பதாம் அதிபதி. பாக்ய ஸ்தான அதிபதி நல்லதே செய்வார்.

பேராசை பெரும் நஷ்டம்
பணமுதலீடுகளை செய்ய வேண்டாம். வேலைகளை விடும் முன்பு ஒருமுறை இருமுறை யோசிக்கவும். புதிய தொழில் எதுவும் தொடங்கவேண்டாம். பேராசை படவேண்டாம். பங்குச்சந்தை முதலீடு தேவையே இல்லை. இருக்கிறதை வைத்துக்கொண்டு சிறப்புடன் வாழுங்கள். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

குடும்பத்தில் கவனம்
உங்க குடும்ப ஸ்தானத்தை சனி பார்க்கிறார் எனவே குடும்பத்தில் கவனம் தேவை. அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பணம் கடன் கேட்டு வந்தால் ஜாக்கிரதையாக இருங்கள் அவசரப்பட்டு கொடுத்து விட்டு அவதிப்பட வேண்டாம். சனிக்கிழமையன்று ஏழைகள் முதியவர்களுக்கு அன்னதானம் கொடுங்க. புதன்கிழமை பெருமாள் ஆஞ்சநேயரை வணங்க நன்மைகள் நடைபெறும்.

சுப விரைய செலவுகள்
சனிபகவான் கும்ப ராசிக்கு அதிபதி. எப்போதுமே தனது வீட்டிற்கு சனிபகவான் எப்போதுமே சங்கடங்களைத் தரமாட்டார். விரைய சனி நிறைய செலவுகளை கொடுப்பார் எனவே சுப விரைய செலவுகளாக மாற்றுங்கள். பணத்தை பத்திரப்படுத்தாமல் சொத்துக்கள், நகைகளாக வாங்குங்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. சனிபகவான் உங்களுக்கு 12ஆம் வீட்டு அதிபதி, 12ஆம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால் ராஜயோக அமைப்பை தருவார்.
ஜாதகத்தில் சனி யோகமாக இருந்து தசாபுத்தியும் நன்றாக இருந்தால் சனி அள்ளிக்கொடுப்பார்.

தானம் செய்யுங்கள்
உங்க ராசிக்கு 12ஆம் வீட்டில் அமரும் சனிபகவான் உங்க ராசிக்கு இரண்டாம் வீடு ஆறாம் வீடு, ஒன்பதாம் வீடுகளைப் பார்க்கிறார் சனிபகவான். சனியின் சஞ்சாரம் பார்வையால் பத்திரமாக இருங்கள் நோய்களை வெளிப்படுத்துவார். மருத்துவ செலவுகள் வரும் காரணம் நோய் ஸ்தானத்தை சனி பார்வையிடுவதால் நோய்களை வெளிப்படுத்துவார். கடன்கள் அடைபடும். வம்பு வழக்குகள் தீரும்

வெளிநாடு யோகம்
லாப சனிபகவான் இருந்த சனி இனி விரைய சனியாக சஞ்சரிக்கப் போவதால் வருமானத்தை அதிகம் தருவார் காரணம் உங்க ராசிக்கு இரண்டாம் வீடான தன ஸ்தானத்தை பார்க்கிறார். சம்பாதித்தாலும் அதை சேமித்து வைக்க முடியாது எல்லாமே விரையமாகத்தான் போகும் எனவே முன்னெச்சரிக்கையா சொத்துக்களாக மாற்றி சேமித்து வையுங்கள். இருக்கிற இடத்தை விட்டு நல்ல இடத்திற்கு மாறுவீர்கள். வெளிநாடு செல்லும் யோகம் வரும். எந்த அளவிற்கு பணத்தை சேமிக்க முடியுமோ அந்த அளவிற்கு பணத்தை சொத்துக்களாக மாற்றி பத்திரப்படுத்துங்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications