சனிப்பெயர்ச்சி 2020-2023: சனியால் விபரீத ராஜயோகம் பெறும் மிதுனம், சிம்மம், கும்பம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: விகாரி வருடம் தை மாதம் 10ஆம் தேதி ஜனவரி 24, 2020ஆம் ஆண்டு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு நகர்கிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் தனுசு மகரம் கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும். விருச்சிக ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து விடுபடுகிறார்கள். இந்த சனிப்பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கும் சில பாதிப்புகள் ஏற்படும். மிதுனம் அஷ்டமத்து சனி, சிம்மம் ஆறாமிட சனி, கும்பம் விரைய சனி என்றாலும் விபரீத ராஜயோகத்தையும் தரப்போகிறார்.

நவ கிரகங்களும் தினசரியும் ஒவ்வொரு ராசிகளில் மெதுவாக நகர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. தனுசு ராசியில் இருந்து மகரத்திற்கு போகிறார். சனிபகவான் நீதிமான். கெட்டவர்களை தண்டிப்பார் நல்லவர்களை சோதிப்பார் ஆனால் கைவிட மாட்டார். கெட்டவன் கெட்டிடில் கிட்டிடிடும் ராஜயோகம் என்பது போல பாவ கிரகமான சனி மறைவு ஸ்தானங்களான 6, 8,12ல் மறையும் போது சிலருக்கு விபரீத ராஜயோகத்தையும் தரப்போகிறார்.

அதென்ன விபரீத ராஜயோகம் என்று கேட்க வேண்டாம். மறைவு ஸ்தானங்களில் கிரகங்கள் சஞ்சரிப்பதைப் பொறுத்து ஒருவருக்கு விபரீத ராஜயோகம் அமையும். எதிர்பாராத நேரத்தில் அதிகாரம், அந்தஸ்து, செல்வாக்கு, வருமானம் வரும். திடீர் எதிர்ப்புகள் பிரச்சினைகள் ஏற்பட்டு கடைசியில் வெற்றியில் முடியும். சிலருக்கு இந்த கால கட்டத்தில் அரசாளும் வாய்ப்பு கூட கிடைக்கும்.

விபரீத ராஜயோகம் பெறும் ராசிகள்

விபரீத ராஜயோகம் பெறும் ராசிகள்

ஜோதிடத்தில் 6,8,12ஆம் வீடுகள் மறைவு ஸ்தானங்கள். இந்த வீடுகளின் அதிபதிகள் தங்களுக்கு கூட்டணி அமைத்தோ அல்லது பரிவர்த்தனை பெற்றோ அல்லது அந்தந்த வீட்டு அதிபதிகள் அதே வீடுகளில் ஆட்சி பெற்று அமர்வது அம்சமான விபரீத ராஜயோகமாகும். ஆறுக்குடையவன் ஆறில் ஆட்சி பெற்றாலோ எட்டுக்குடையவன் எட்டில் ஆட்சி பெற்றாலோ 12க்கு உடையவன் 12ல் ஆட்சி பெற்றாலோ அது விபரீத ராஜயோகம். மிதுனம் ராசிக்கு சனி எட்டுக்கு உடையவன். எட்டில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். அதேபோல சிம்மம் ராசிக்கு சனி ஆறுக்கு உடையவன் ஆறில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். அதேபோல கும்பம் ராசிக்கு சனி 12க்கு உடையவன் ஆட்சிக்காரனும் கூட 12ல் ஆட்சி பெற்று அமரப்போகிறார். இதனால் மிதுனம், சிம்மம்,கும்பம் ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் கிடைக்கப் போகிறது.

அஷ்டமத்து சனி

அஷ்டமத்து சனி

சனிபகவான் எட்டாம் வீட்டில் அமரப்போவது அஷ்டமத்து சனி என்று அஞ்ச வேண்டாம். எட்டுக்குடையவன் எட்டாம் வீட்டில் செல்கிறார் விபரீத ராஜயோகத்தை தருகிறார். தொழிலில் மாற்றம் வேலையில் மாற்றம் ஏற்படும். சிறு தடைகள் ஏற்படுத்தி பின்னர் நன்மையை தருவார் சனி.

சந்திரனுக்கு எட்டில் சனி வந்தால் சிறு குழப்பம்தான் வருமே தருமே பிரச்சினையில்லை. சுய ஜாதகத்தில் சனி வலுவாக இருந்தால் நல்ல பலன்தான் தரும். பிறந்த ஜாதகத்தில் சனி வலு குறைந்து இருந்தால் பாதிப்பு வரும். கடன் பிரச்சினை, வண்டி வாகனத்தில் செல்லும் போது போது கவனம்.

அப்பா உடனான உறவில் கவனம் தேவை. உங்களின் பலத்தை சனி வெளிப்படுத்துவார்.

பணத்தில் ஜாக்கிரதை

பணத்தில் ஜாக்கிரதை

சனி பார்வை 10ஆம் வீட்டில் விழுவதால் வேலையில் மாற்றம் வரும் சவால்களை சந்திக்கும் காலம். வாக்கில் கவனம் தேவை. விட்டுக்கொடுத்து போங்க. அமைதியாக இருங்க. குடும்பத்தில் கவனம். பிள்ளைகளால் செலவு வரும். திருமணம், கல்வி, வேலைக்காக செலவு செய்ய வேண்டியிருக்கும். வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனம். நிதானமாக செல்லுங்கள். பாதத்தில் அடிபடும். பத்திரமாக போங்க. ஒன்பதாம் அதிபதி எட்டில் வருவதால் அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பணம் கடன் கேட்டு வந்தால் ஜாக்கிரதையாக இருங்கள் அவசரப்பட்டு கொடுத்து விட்டு அவதிப்பட வேண்டாம். சனிக்கிழமையன்று ஏழைகள் முதியவர்களுக்கு அன்னதானம் கொடுங்க. புதன்கிழமை பெருமாள் ஆஞ்சநேயரை வணங்க நன்மைகள் நடைபெறும்.

விபரீத ராஜயோகம்

விபரீத ராஜயோகம்

இந்த சனிப்பெயர்ச்சி சிம்ம ராசிக்கு அற்புதங்களை தரப்போகிறது. ஆறுக்கு அதிபதி ஆறில் ஆட்சி பெற்று அமர்கிறார். ருணம் ரோகம் சத்ரு ஸ்தானம். சனி ஆறில் அமரும் காலம் எதிர்ப்புகளை வென்று பகையை முறியடிப்பீர்கள். நோய்கள் தீரும். கடன்கள் அடைபடும். ஆறுக்கு உடையவன் ஆறில் அமரும் போது ஒரு வேகத்தை தருவார். எட்டாம் வீட்டில் சனி பார்வை விழுவதால் நோய்களை வெளியே கொண்டு வந்து அதை தீர்க்க வழியை ஏற்படுத்துவார். எதிரிகளை அடையாளம் காட்டுவார். பிரச்சினைகளை நிவர்த்தி செய்வார்.

திருமணம் குழந்தை பாக்கியம்

திருமணம் குழந்தை பாக்கியம்

மூன்றாம் வீட்டில் சனி பார்வை விழுவதால் இளைய சகோதரிகள் சகோதரர்களுக்கு உதவி செய்வீர்கள். போட்டி பந்தயங்களில் ஜெயிப்பீர்கள். விரைய ஸ்தானத்தில் சனி பார்வை விழுகிறது. பயணங்களில் வெற்றி கிடைக்கும் வெளிநாடு செல்வீர்கள். ஆறுக்கு அதிபன் ஆறாம் வீட்டில் அமர்ந்து விபரீத ராஜயோகத்தைக் கொடுப்பார். திருமணம், குழந்தை பாக்கியத்தில் இதுநாள் வரை தடை இருந்தது. இந்த சனிபெயர்ச்சியால் தடைகள் விலகும் காலம் வந்து விட்டது.

 விரைய சனி விபரீத ராஜயோகம்

விரைய சனி விபரீத ராஜயோகம்

12ஆம் வீட்டில் சனி வரும் காலம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சுப விரையங்களாக செய்து கொள்ளுங்கள். லாப சனியாக இருந்து கும்பத்திற்கு விரைய சனியாக வருகிறார். செலவு அதிகரிக்கும் சுப விரையமாக செய்யுங்கள். சொத்துக்கள், நகைகளாக வாங்குங்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. முதல் சுற்றில் இருப்பவர்களுக்கு ஜாக்கிரதை. சொந்த ராசியான 12ஆம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால் விபரீத ராஜயோகத்தை தருகிறார். இரண்டாம் சுற்றில் இருப்பவர்களுக்கு சனி பொங்குசனியாக வளர்ச்சியை தருவார்.

திருமணம் செய்யாதீங்க

திருமணம் செய்யாதீங்க

இந்த கால கட்டத்தில் கும்ப ராசிக்காரர்கள் திருமணம் செய்ய முயற்சி செய்யாதீர்கள். இழுபறியாகும். புதிய வேலைக்கு முயற்சி செய்யாதீர்கள். கசப்பான அனுபவங்கள் ஏற்படும். வார்த்தைகளில் கவனம் தேவை. திருமணம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் ஜாக்கிரதையாக இருங்க. எச்சரிக்கையும் விழிப்புணர்வும் அவசியம். ஜாதகத்தில் சனி யோகமாக இருந்து தசாபுத்தியும் நன்றாக இருந்தால் சனி அள்ளிக்கொடுப்பார்.

சாலையில் கவனம்

சாலையில் கவனம்

சனி திசை நடப்பவர்களுக்கு நன்மைகள் அதிகம் நடக்கும். முதலீடுகள் செய்யும் போது கவனம் தேவை. வண்டி வாகனங்களில் செல்லும் போது விழிப்புணர்வோடு போகனும் ஹெல்மெட் போட்டுக்கங்க. செல்போன் பேசிட்டு வண்டி ஓட்டாதீங்க. விரைய சனி மருத்துவ செலவை இழுத்து விட்டு விடுவார். தான தர்மங்கள் செய்யுங்கள். மற்றவர்களுக்கு தானம் செய்தால் வாழ்த்துக்கள் நம்மை வாழவைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+