சனி பெயர்ச்சியும் ராகு கிரகஹஸ்த சூரிய கிரகணமும்...யாருக்கெல்லாம் ஆபத்து - பரிகாரம் என்ன?
சூரிய கிரகணம் ஏப்ரல் 30 ம் தேதி நிகழ்கிறது. இந்திய நேரப்படி, நள்ளிரவு 12:15 மணிக்கு துவங்கி அதிகாலை 4: 08 மணி வரை நீடிக்கும்.
சென்னை: சனி பெயர்ச்சியும் சூரிய கிரகணமும் அடுத்தடுத்து நிகழ உள்ளது. சூரிய கிரகணத்தை ஒட்டி நிகழும் சனி பெயர்ச்சியால் மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசிக்காரர்களுக்கும் என்ன மாதிரியான பலன்கள் ஏற்படும் பாதிப்பும் ஏதேனும் ஏற்படுமா? என்ன மாதிரியான பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.
நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவான் 2022 ஏப்ரல் 29 அம் தேதி தனது சொந்த ராசியான கும்ப ராசிக்கு அதிசாரமாக இடப்பெயர்ச்சி அடைகிறார். சூரிய கிரகணம் ஏப்ரல் 30 ம் தேதி நிகழ்கிறது. இந்திய நேரப்படி, நள்ளிரவு 12:15 மணிக்கு துவங்கி அதிகாலை 4: 08 மணி வரை நீடிக்கிறது. மேஷ ராசி பரணி நட்சத்திரத்தில் நிகழும் இந்த சூரிய கிரகணம் ராகு கிரஹஸ்த சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரிய வாய்ப்பில்லை.
நவகிரகங்களில் சூரியனும் சனியும் பகை கிரகங்கள் என்பதால் சூரிய கிரகணத்தை ஒட்டி நிகழும் இந்த சனி பெயர்ச்சி கவனம் பெற்றுள்ளது. கிரகங்களின் அணிவகுப்பும் நிகழ்கிறது. ஒரே ராசியில் சுக்கிரனும் குருவும் இணைந்துள்ளதால் அருகருகே அமைந்துள்ளன. இந்த கிரகங்களின் கூட்டணியாலும் சனி பெயர்ச்சியாலும் எந்த ராசிக்காரர்களின் வாழ்வில் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படும் என்று பார்க்கலாம்.

மேஷம்
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு சூரிய கிரகணத்தை ஒட்டி நிகழும் சனி பெயர்ச்சி நன்மையாக இருக்கும். காரம் சனி பகவான் தொழில் காரகன், லாப ஸ்தான அதிபதி. சனி லாப ஸ்தானத்தில் அமர்வதால் தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வேலையில் மாற்றம் ஏற்படும். ராசியில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. சூரியன் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு திடீர் முன்னேற்றம் உண்டாகும். மன குழப்பங்கள் நீங்கும். பண வரவு திருப்தியாக இருக்கும். பங்கு வர்த்தகம் லாபம் தரும். குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். ஞாயிறு அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.

ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு சூரிய கிரகணத்தை ஒட்டி நிகழும் சனி பெயர்ச்சி வெற்றியை தரும். விரைய ஸ்தானத்தில் கிரகணம் நிகழ்கிறது. குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பத்தாம் வீட்டு சனியால் தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்.

மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு கிரகணம் லாப ஸ்தானத்தில் நிகழ்கிறது. சனிபகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார். வேலையில் கவனம் தேவை. அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். உங்களுடைய நேர்மைக்கு உரிய மதிப்பீடு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உங்களுடைய திறமைகளை பிறருக்கு காட்டுவீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. சனி பகவான் அஷ்டம ஸ்தானத்தில் அமர்கிறார். குருவின் பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைப்பதால் சனி பெயர்ச்சியால் பாதிப்பு ஏற்படாது. குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். இதுவரை இருந்த குழப்பமான மனநிலை மாறும். எந்த விசயத்திலும் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

சிம்மம்
சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே. உங்கள் ராசிக்கு பாக்ய ஸ்தானத்தில் சூரிய கிரகணம் நிகழ உள்ளது. அதே போல சனி பெயர்ச்சி ஏழாம் வீடான களத்தில் ஸ்தானத்தில் நிகழ்கிறது. எந்த விசயத்திலும் தலையிடாமல் அமைதியாக இருப்பது நல்லது. வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. குடும்பத்தில் கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவுகள் வந்து போகும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்து அமைதி காப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் அதிகரிக்கும்.

கன்னி:
புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு எட்டாவது வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. சனிபகவான் ஆறாம் வீட்டில் அமர்கிறார். வாகன பயணங்களில் கவனம் தேவை. குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். ஒற்றுமை பிறக்கும். கணவன்-மனைவி இடையே புதிய புரிதல் ஏற்படும். ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசிக் கொள்வது நல்லது. புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு.
மறைந்திருந்து தொல்லை கொடுத்த எதிரிகளின் பிரச்சினை நீங்கும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications