சனி பெயர்ச்சி பலன் 2022: லாப சனியால் அதிர்ஷ்டம் அடையப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?
மேஷ ராசிக்காரர்களே இதுநாள் வரை உங்களுக்கு கரும சனியாக இருந்தவர் லாப சனியாக இடப்பெயர்ச்சி அடைகிறார். வருமானம் அதிகரிக்கும் சொத்துக்கள் சேரும்.
மதுரை: சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு அதிசாரமாக இடப்பெயர்ச்சி அடைகிறார். உங்கள் ராசிக்கு 11வது இடத்தில் சனி அமர்வதால் சனிக்கிழமை செய்யும் செயல்கள் வெற்றி கிட்டும். லாப ஸ்தானத்தில் வரும் சனிபகவானால் இனி நன்மையே நிகழும். இது அதிர்ஷ்டகரமான சனி பெயர்ச்சி. சனிபகவான் அனைத்தையும் அள்ளி வழங்குவார். இந்த கால கட்டத்தில் என்னென்ன பலன்களை அனுபவிக்கப் போகிறீர்கள் என பார்க்கலாம்.
மீனம் ராசிக்கு 11ஆம் வீட்டில் லாப சனியாக சஞ்சாரம் செய்யும் சனிபகவான் மகரம் ராசியில் இருந்து உங்கள் ராசியை மூன்றாம் பார்வையாக பார்க்கிறார். உங்கள் ராசிக்கு 5 வது இடம் மற்றும் 8 வது இடங்களைப் பார்வையிடுகிறார் சனிபகவான். இதுநாள் வரை மனதில் குழப்பமாக இருந்திருக்கும். இனி குழப்பம் நீங்கி நன்மையே நடக்கும். ஏற்கனவே பாக்ய ஸ்தானத்தினால் நன்மைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
சனிபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் கல்வியில் மேன்மை உண்டாகும். மாணவர்கள் நல்ல முறையில் தேர்ச்சி பெறுவீர்கள். 7வது பார்வையாக சனி பகவான் உங்களின் ராசிக்கு 5வது இடத்தை பார்வையிடுகிறார். எனவே குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சுப செய்திகள் தேடி வரும்.

பண வரவு அதிகரிக்கும்
லாப சனியால் தன லாபம்,வருமானம் அதிகரிக்கும்,தொழில் அபிவிருத்தி அடையும்,நண்பர்களால்,உறவுகளால் அதிர்ஷ்டம் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும். காதல் விஷயங்கள் சற்று மகிழ்ச்சியாகவும் ஒரு சிலருக்கு திருமணத்திலும் முடியும். இல்லத்தரசிகளுக்கு உறவுகளிடத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்.

பதவி உயர்வு தேடி வரும்
பதவி உயர்வு கிடைக்கும். பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும். எடுத்த காரியம் வெற்றி கிடைக்கும். தொட்ட காரியங்கள் துலங்கும். மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். கேட்ட இடத்தில் பணம் கடன் கிடைக்கும். வேலையின் நிமித்தமாக ஒரு சிலருக்கு இடமாற்றம் ஊர் மாற்றம் அமையும். உங்களின் ராசிக்கு 8வது இடத்தை சனி பார்வையிடுவதால் வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. விலை உயர்ந்த பொருட்களின் மீது கவனம் தேவை.

மாணவர்களுக்கு நன்மை
மாணவர்களே எதிர்பார்த்த பள்ளி கல்லூரிகளில் இடம் கிடைக்கும், நல்ல மதிப்பெண்கள் பெற கடுமையாகப் போராட வேண்டியது வரும். தேவையற்ற விஷயங்களில் மனதை செலுத்தாமல் படிப்பில் செலுத்துங்கள். கல்வி கடன் கிடைக்கும். விளையாட்டுகளில் அதிக எச்சரிக்கை தேவை.

ஆரோக்கியத்தில் கவனம் தேவை
உடல் ஆரோக்யத்தில் சற்று எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். உடலில் அடிக்கடி அசதி, சோர்வு மற்றும் அடிக்கடி மறதி ஏற்பட்ட வண்ணம் இருக்கும். சரியான நேரத்திற்கு சாப்பிடுங்கள். உங்களுக்கு நிறைய நன்மைகளைத் தரக்கூடிய சனி பெயர்ச்சி என்பதால் செலவு செய்வதற்கு ஏற்ற வருமானத்தையும் சனி வணங்குவார். தான தர்மம் செய்யுங்கள். பகைவர்களிடத்திலும் அன்பு பாராட்டுங்கள்.

அதிர்ஷ்டம் அதிகரிக்கும்
இது அதிர்ஷ்டகரமான சனி பெயர்ச்சி. லாபத்தில் அமர்ந்துள்ள சனிபகவான் அனைத்தையும் அள்ளி வழங்குவார். புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள்.சேமிப்பு உயரும்.பெண்களால் லாபம் அதிகரிக்கும். வெளியூர், வெளிநாடு செல்ல சந்தர்ப்பங்கள் வந்து சேரும். பார்க்கும் வேலையை அவசரப்பட்டு விட்டு விடக் கூடாது. உடன் பணி புரிபவர்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். சனிக்கிழமையன்று அனுமனை வணங்க மேலும் நன்மைகள் நடைபெறும்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications