சனி பெயர்ச்சி பலன் 2023: விலகிய சனி.. விடியல் பிறந்தது.. தொட்டதெல்லாம் பொன்னாகும் யாருக்கு?
சென்னை: ஏழரை ஆண்டு காலம் சனியின் பிடியில் சிக்கியிருந்த தனுசு ராசிக்காரர்கள் முழுவதும் விடுபடப்போகிறார்கள். 2024ஆம் ஆண்டு முதல் அற்புதமான யோகங்கள் கிடைக்கப்போகிறது. குரு பகவானின் பார்வையும் கிடைப்பதால் தனுசு ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது.
சனி பெயர்ச்சி: உங்கள் ராசிக்கு இரண்டு மற்றும் மூன்றாம் அதிபதியான சனிபகவான் மூன்றாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால் உங்களின் முயற்சிகள் வெற்றியடையும். தைரியம் அதிகரிக்கும். ஏழரை சனி காலம் முடிவுக்கு வந்து விட்டதால் உங்களின் தன்னம்பிக்கை கூடும். இளைய சகோதரர்களால் நன்மைகள் நடைபெறும். சிறு பயணங்களினால் பலன் கிடைக்கும்.

கும்ப சனியால் குதூகலம்: சனிபகவான் கும்பம் ராசியில் இருந்து உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானம், பஞ்சம ஸ்தானம், ஒன்பதாம் இடமான பாக்ய ஸ்தானத்தை பார்வையிடுகிறார். சமுதாயத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். வெளிநாட்டு யோகம் கைகூடி வரும் சனிபகவான் மகர ராசியில் சஞ்சரிக்கும் 30 மாதகாலமும் தனுசு ராசிக்காரர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், வருமானம் எப்படியிருக்கும் என்று பார்க்கலாம்.
சுப செய்தி தேடி வரும்: தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல செய்திகள் உங்களை தேடி வரப்போகிறது. இனி சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். கொண்டாட்டங்கள் அதிகரிக்கும். உங்கள் உழைப்புக்கு லாபம் கிடைக்கும். தொழிலில் படிப்படியாக முன்னேற்றம் கிடைக்கும். உங்களின் தசாபுத்தி எப்படியிருக்கிறது என்று பார்த்து அதற்கேற்ற தொழிலை தொடங்குங்கள். அவசரப்பட வேண்டாம். புதிய சொத்துக்கள் சேரும். வண்டி வாகனம் வாங்குவீர்கள்.
புதிய வேலை கிடைக்கும்: வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் ஏற்பட்டு வேலையில் திருப்தியான நிலை மற்றும் விருப்பமான வேலை, எதிர்பார்த்த வருமானத்துடன் கூடிய வேலை வந்து சேரும். வேலையில் சிலருக்கு இடமாற்றம், ஊர் மாற்றம் உண்டு. வேலையில் இதுவரை இருந்து வந்த இறுக்கமான நிலை தளர்ந்து நற்பலன் உண்டாகும். வெளியூர், அல்லது வெளிநாடு செல்ல வாய்ப்பு உண்டாகும். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை, வேலையில் உற்சாகம் பிறக்கும். வேலையில் முன்னேற்றம் ஊதிய உயர்வும் ஏற்படும்.
பண வருமானம்: உங்களுக்கு பணவரவு அதிகரிக்கப்போகிறது. எதிர்பாராத தன லாபம் கிடைக்கும். சிலருக்கு பழைய சொத்துக்களை விற்பதன் மூலம் பணம் கிடைக்கும். சிலர் புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். உடன் பிறந்தவர்களாலும், உறவினர்களாலும் நன்மைகள் ஏற்படும். பங்கு சந்தை மற்றும் ரேஸ், லாட்டரி, நல்ல லாபகரமாக அமையும். பொருட்களை அடகு வைக்கும் சூழ்நிலையும் ஒரு சிலருக்கு அமையும். வரும் பணத்தை முறையாக சேமித்தாலே கடனின்றி வாழலாம்.
உடல் ஆரோக்கியம்: பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிகக் கவனம் செலுத்துங்கள். நேரத்திற்கு சாப்பிடுங்கள். நீரிழிவு, ரத்தகொதிப்பு இருப்பவர்கள் சரியான நேரத்திற்கு சாப்பிடுங்கள். எதிரிகளால் தொல்லைகள் குறையும். எதையும் தைரியமாக சந்திக்கும் ஆற்றலும் சந்தர்ப்பமும் அமையும். யாருக்கும் பணம் கடனாகக் கொடுக்கும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை யோசித்து கொடுக்கவும். இல்லாவிட்டால் கொடுத்த பணம் திரும்ப வராது.
திருமணம் கைகூடி வரும்: காதல் இனிக்கும் சிலருக்கு கல்யாணத்தில் முடியும். கணவன் மனைவி உறவு சுமூகமாக சந்தோஷமாக இருக்கும். பிள்ளைபாக்கியம் இல்லையே என்று ஏங்கியவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மனதிற்கு மகிழ்ச்சி தரும் சுப காரியங்கள் நடைபெறும். அதற்காக சம்பாதிக்கும் பணத்தை சுப விரைய செலவுகளாக செய்வீர்கள். சம்பாதிக்கும் பணத்தை கொஞ்சம் சேமித்து வையுங்கள். குழந்தைகளால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். அவர்கள் படிப்பு, வேலை, வெளிநாடு இவைகள் சாதகமாக இருந்து வரும்.
மாணவர்கள் கவனம்: ஏழரை சனி விலகினாலும் மாணவர்களுக்கு படிப்பில் அதிகக் கவனம் தேவை. மூன்றாம் இடத்தில் சனி சஞ்சாரம் ஞாபக மறதியை ஏற்படுத்துவார். சோம்பலை அதிகபடுத்துவார். தேவையற்ற விஷயங்களில் மனதைச் செலுத்தக் கூடாது. எப்பொழுதும் சுறுசுறுப்பாக உற்சாகமாக இருக்கப் பழகுங்கள்.
விடியல் பிறந்தது: எங்களுக்கு விடிவு காலமே இல்லையே, கஷ்டத்திற்கு விமோசனமே கிடையாதா என்று கடந்த ஏழரை ஆண்டு காலம் தனுசு ராசிக்காரர்களை புலம்ப வைத்து விட்டார் சனிபகவான். அவர் வேலை முடிந்து விட்டது கிளம்பி விட்டார். இத்தனை ஆண்டுகாலமாக சோதனைகள் மூலம் பல பாடங்களை கற்றுக்கொண்டிருப்பீர்கள். சிலர் சாவின் விளிம்பு வரை சென்று மீண்டு வந்திருப்பீர்கள். உங்கள் கஷ்டங்கள் நீங்கி விட்டாலும் நீங்கள் படித்த பாடங்களைக்கொண்டு வாழ்க்கையை சந்தோஷமாக வாழுங்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications