சனி பெயர்ச்சி பலன் 2023: தேடி வரும் வசந்த காலம்.. மகிழ்ச்சியும் மன நிம்மதியும் யாருக்கு கிடைக்கும்?
சென்னை: கன்னி ராசிக்காரர்களுக்கு 2024ஆம் ஆண்டு வசந்தகாலம் பிறக்கப்போகிறது. ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது என்று பாடப்போகிறீர்கள். ஆறாம் வீட்டில் பயணம் செய்யும் சனியால் எதிரிகளின் தொல்லைகள் ஒழியும். மகிழ்ச்சியும் மன நிம்மதியும் அதிகரிக்கும். கும்ப ராசியில் பயணம் செய்யும் சனி பகவான் கன்னி ராசிக்காரர்களுக்கு என்ன பலன்களை தரப்போகிறார்
கன்னி ராசி: சனிபகவான் கன்னி ராசிக்கு 5 மற்றும் 6ஆம் வீட்டிற்கு அதிபதி அவர் 6ஆம் இடத்தில் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பு. 30 மாதங்கள் உங்களுக்கு ராஜயோகம்தான். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்ற நிலை உருவாகப்போகிறது. ஆறாம் வீட்டிற்கு அதிபதி 6ல் ஆட்சி பெற்று அமர்வது விபரீத ராஜயோகம்தான்.

எதிரி தொல்லை தீரும்: 6ஆம் இடம் என்பது ருண ரோக சத்ரு ஸ்தானம். நோய்களை அடையாளம் கண்டு தீர்ப்பீர்கள். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சனிபகவான் உங்கள் ராசிக்கு ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் அமர்ந்து கொண்டு உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3ஆம் இடம், ஆயுள் ஸ்தானமான 8ஆம் இடம், மற்றும் உங்கள் ராசிக்கு 12ஆம் இடமான விரைய ஸ்தானத்தையும் சனிபகவான் பார்வையிடுகிறார்.
நல்ல காலம்: இதுவரை போராட்டமே வாழ்க்கை என்று வாழ்ந்து வந்தீர்கள். இனி வெற்றிக்கனியை ருசிக்கப் போகிறீர்கள். உங்களுக்கு வந்த சோதனைகளை எல்லாம் தாங்கிக் கொண்டு வைரம் பாய்ந்த மனதுடையவராக மாறியிருக்கிறீர்கள். இனி தொட்டதெல்லாம் ஜெயமே. தடைபட்ட காரியங்கள் எளிதில் கைகூடும். நண்பர்களால் எதிர்பார்த்த அளவு அன்பும் ஆதரவும் கிடைக்கும். வெளிநாடு செல்ல சந்தர்ப்பமும் சூழ்நிலையும் ஒரு சிலருக்கு அமையும். விசா, பாஸ்போர்ட் எளிதாக வந்து சேரும்.
மகிழ்ச்சி அதிகரிக்கும்: வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வுடன் கூடிய புதிய வேலை அமையும். வேலைக்கு ஏற்ற சம்பளமும் கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதிலும் முதலீடு செய்வதிலும் கவனமாக இருக்கவும். பங்குச்சந்தை முதலீடுகளும் இப்போதைக்கு தேவையில்லை. சிறு தொழில் உற்பத்தி சார்ந்த துறைகள் சற்று சுமாராக இருக்கும். ஆடை, ஆபரணம், ஜவுளி துறைகள் லாபகரமாகவும் இருக்கும். பத்திரிக்கை, தொலைகாட்சி, சினிமா துறைகளில் வேலை செய்பவர்களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும்.
பணமும் புகழும் கூடும்: இதுநாள்வரை வராமல் இருந்த பணமெல்லாம் தேடி வரும். சமுதாயத்தில் கவுரவம், புகழ் அந்தஸ்து அதிகரிக்கும். சொத்து சேர்க்கை அதிகரிக்கும். பெண்களுக்கு நகை, ஆடை ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும். புதிய தொழில்கள் தொடங்க சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அமையும். கூட்டுதொழில் சாதகமாக இருந்து வரும். முன்னோர்கள் சொத்து மூலம் எதிர்பாராத தனவரவு பொருள் வரவு அமையும்.
சுப காரியம்: குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்வுகள் நடக்க வாய்ப்புகள் தானாக வந்து சேரும். அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும். குழந்தைகளின் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். அவர்களால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். தாயாரால் எதிர்பாராத உதவிகள் கிட்டும். அதே சமயம் தாயாரின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை.
நல்ல செய்தி: குழந்தைகளின் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். அவர்களால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் ஏற்பட வாய்ப்பு அமையும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். கடன்கள் அதிகரிக்கும், எதிரிகள் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். புது புதுப் பிரச்சனைகள் வந்தாலும் எளிதில் தீர்வு காண்பீர்கள்.
ஆரோக்கியத்தில் அக்கறை: உணவு விசயத்தில் கவனமாக இருக்கவும். சரிவிகித சத்தான உணவுகளை சாப்பிடுங்கள். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. உடலில் தேமல், அரிப்பு, கட்டி போன்ற நோய்கள் ஏற்படும். ஒரு சிலருக்கு அறுவை சிகிச்சை செய்யும் சூழ்நிலை அமையும். எட்டாம் வீட்டை சனி பார்வையிடுவதால் போக்குவரத்து வண்டி வாகனங்களில் அதிகக் கவனம் தேவை. எப்பொழுதும் எச்சரிக்கையுடன் சென்று வருதல் வேண்டும். வேகத்தை குறைத்து நிதானத்தை கடைபிடியுங்கள்.
மாணவர்கள்: மாணவர்களுக்கு எதிர்பார்த்த கல்லூரிகளில் படிக்க இடம் கிடைக்கும். நல்ல மதிப்பெண்களுடன் உயர்கல்விக்கு செல்வீர்கள். விளையாட்டு, கலைத்துறை என ஆர்வத்தோடு செயல்பட்டு பரிசுகளை வெல்வீர்கள். சிலருக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். கல்விக்கடன்கள் எளிதாக கிடைத்து வெளிநாட்டிற்கு படிக்கச் செல்வீர்கள். சாமர்த்தியமும் அதிகரிக்கும்.

பெண்களுக்கு மரியாதை: பெண்களுக்கு வேலை செய்யும் இடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சிலர் வெளிநாடு, வெளியூர் செல்ல வாய்ப்பு ஏற்படும். சமுதாயத்திலும் வீட்டிலும் வேலை செய்யும் இடத்திலும் மதிப்பும், மரியாதையும் கூடும். விருந்து, சுற்றுலா என உற்சாகமாக இருப்பீப்கள். பெண்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். வீட்டையும், அலுவலகத்தையும் கவனிப்பதைப் போல உங்கள் உடம்பையும் கவனியுங்கள்.
பரிகாரம் என்ன: உடம்பில் உள்ள நோய்களை சனிபகவான் காட்டிக்கொடுப்பார். சிலருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும் எனவே லேசான உடல்நலப்பிரச்சினை ஏற்பட்டாலும் மருத்துவரிடம் சென்று உடலை கவனியுங்கள். கணவன் மனைவியின் உறவில் சில உரசல்கள் வரும். பாதிப்புகள் குறைய குச்சனூர் சென்று சனிக்கிழமைகளில் சனிபகவானை வணங்கவும். பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications