Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனி பெயர்ச்சி பலன் 2023: ஏழரை சனி என்றாலும் விபரீத ராஜயோகம்தான்! அகலக்கால் வைக்காதீர்கள்!!

Subscribe to Oneindia Tamil

மதுரை: சனி பெயர்ச்சி 2023 ஜனவரி 17ஆம் தேதி திருக்கணித பஞ்சாங்கப்படியும் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வாக்கிய பஞ்சாங்கப்படியும் நிகழப்போகிறது. சனிபகவான் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை வரை சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்யப்போகிறார். மீனம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியில் விரைய சனியாக பயணம் செய்யப்போவதால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

மீன ராசியில் பிறந்தவர்களுக்கு ஏழரை ஆரம்பிக்குதே என்று அஞ்ச வேண்டாம் இந்த ஏழரை ஆண்டு காலம் பொங்கு சனி ஆரம்பிப்பவர்களுக்கு ஏற்றங்கள் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது. சனிபகவான் உங்கள் ராசிக்கு 12 ஆம் வீட்டு அதிபதி, லாப ஸ்தான அதிபதியுமாவார். 12ஆம் வீட்டு அதிபதி 12ஆம் வீட்டில் ஆட்சி பெற்று சஞ்சரிப்பது விபரீத ராஜயோகம்.

மீன ராசிக்கு விரைய சனி ஆரம்பிக்கிறது. ஏழரை சனி காலத்தில் சில பல சோதனைகளை சந்திப்பீர்கள் அந்த சோதனைகளில் இருந்து படிப்பினைகளை கற்றுக்கொள்வீர்கள்.

ஏழரை ஆரம்பிக்கிறது கவனம்

ஏழரை ஆரம்பிக்கிறது கவனம்

ஏழரை சனியின் தாக்கம் தொடங்குவதால் எதிலும் கவனமும் விழிப்புணர்வும் அவசியம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். திருமணம் சுப காரியங்கள் செய்யும் போது ஆலோசனை செய்வது அவசியம். வண்டி வாகனத்தில் செல்லும் போது நிதானமும் கவனமும் அவசியம். சுப விரைய செலவுகளாக மாற்றுங்கள். பணத்தை வீண் விரையம் செய்யாதீர்கள்.

மருத்துவ செலவுகள் கவனம்

மருத்துவ செலவுகள் கவனம்

மீன ராசியில் பிறந்தவர்களுக்கு 12ஆம் வீடான அயன சயன ஸ்தானத்தில் 12ஆம் வீட்டு அதிபதி சனி அமர்வதால் ஏழரை ஆரம்பிக்கிறது. பணம் விரையங்கள் வரும் அதை மருத்துவ செலவுகள் வருவதை தடுக்க சுப செலவாக மாற்றுங்கள். நோயாளிகளுக்கு உதவி செய்யலாம். சனி பகவான் மகரம் ராசியில் அமர்ந்து உங்களின் தனம், குடும்ப வாக்கு ஸ்தானமான இரண்டாவது ஸ்தானத்தை பார்க்கிறார் சனி. வாயினால் வம்பு வழக்குகள் வரலாம். நாவடக்கம் தேவை.

பதவி உயர்வு கிடைக்கும்

பதவி உயர்வு கிடைக்கும்

விபரீத ராஜயோக காலம் வரப்போகிறது. எதிர்பார்த்த இடத்தில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். வேலையில் ஊதிய உயர்வு கிட்டும். பதவி உயர்வு ஒரு சிலருக்கு அமையும். குடும்ப ஸ்தானத்தை சனிபகவான் பார்வையிடுவதால் பிரச்சினைகள் வராமல் இருக்க விட்டுக்கொடுங்கள். விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை. ராசிக்கு 6வது ஸ்தானத்தை சனி பகவான் பார்க்கிறார். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். செலவு செய்ய நோய் நொடிகள் எட்டிப்பார்க்கும். மருத்துவ ஆலோசனைகளை பெறலாம். எதிரிகளால் மறைமுகத் தொல்லைகள் அதிகரிக்கும்.

வெளிநாட்டு வேலை கிடைக்கும்

வெளிநாட்டு வேலை கிடைக்கும்

பாக்கிய ஸ்தானத்தை சனி பகவான் பார்ப்பதால் உங்கள் தந்தைக்கு நன்மை ஏற்படும். வெளிநாட்டு பயணங்கள் நன்றாக அமையும். பலருக்கு வெளிநாடுகளில் வேலை கிடைக்கும் யோகம் கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் சிக்கலை தரும். போட்ட முதலீடு ,கொடுத்த பணம் திரும்பி வருதல் கடினம் என்பதால் நிதானித்து செயல்படவும். அகலக்கால் வைக்க வேண்டாம். பணம் கொடுக்கல் வாங்கலால் உறவுகள்,நட்புகள் பகையாகும். மருத்துவ செலவுகள் வரலாம். தாய்,தந்தைக்கு மருத்துவ செலவு வைக்கும் என்பதால் அவர்களை நன்கு கவனித்துக்கொள்ளவும்.

படிப்பில் கவனம் தேவை

படிப்பில் கவனம் தேவை

மாணவர்கள் படிப்பில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். அடிக்கடி மறதி வரலாம் ஞாபகசக்தி குறைவினால் சிக்கல்கள் ஏற்படும். தேவையற்ற விஷயங்களில் கவனத்தைத் திசை திருப்பாமல் படிப்பில் கவனம் தேவை. கல்விக் கடன்கள் எளிதாக கிடைக்கும். பெற்றோர்கள் சொல் பேச்சு கேட்டு நடப்பது அவசியம். வீண் வம்பு வழக்குகளுக்கு செல்லாதீர்கள்.

பரிகாரம் என்ன?

பரிகாரம் என்ன?

பொங்குசனி காலத்தில் இருப்பவர்களுக்கு நிறைய நல்லது நடக்கும். வெளியூர், வெளிநாடு பயணங்களுக்கு செல்வீர்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. அதிக கவனமாக இருந்தால் ஏழரை சனியை எளிதாக கடந்து விடுங்கள். அதிக கடன் வாங்காதீர்கள். அகலக்கால் வைக்காதீர்கள். குடும்பத்தில் சின்னச் சின்ன கலகங்கள் வந்து போகும். அதிக இறை நம்பிக்கை அவசியம். இயலாதவர்களுக்கு தானம் செய்யுங்கள். சனி பகவானை சனிக்கிழமை நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வணங்கினால் பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+