சனி பெயர்ச்சி 2023: லாப சனியால் கோடிகளை குவிக்கப்போகும் ராசிக்காரர் நீங்கதான்! ஆனாலும் கவனம்!!
சென்னை: சனி பெயர்ச்சியால் கோடி கோடியாக குவிக்கப் போகிறார்கள் ஒரு ராசிக்காரர்கள். காரணம் லாப ஸ்தானத்திற்கு வரப்போகும் சனிபகவான் தனது அருளால் அள்ளி வழங்கப்போகிறார். நல்ல எண்ணமும் நற் சிந்தனையும் கொண்ட மேஷ ராசி, லக்னத்தில் பிறந்தவர்களுக்கு நிகழப்போகும் சனி பெயர்ச்சி எண்ணற்ற நன்மைகளைத் தரப்போகிறது. மேஷ ராசிக்காரர்கள் இன்னும் இரண்டரை ஆண்டுகாலத்திற்கு சனிபகவானின் பார்வையில் இருக்கப்போகிறார்கள். என்னென்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என்று விரிவாக பார்க்கலாம்.
சனி பெயர்ச்சி 2023 ஜனவரி 17ஆம் தேதி திருக்கணித பஞ்சாங்கப்படியும் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வாக்கிய பஞ்சாங்கப்படியும் நிகழப்போகிறது. சனிபகவான் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை வரை சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்யப்போகிறார்.
சனி பகவான் விதியை நிர்ணயம் செய்வார் மகரம், கும்பம் ஆட்சி வீடு, துலாம் உச்ச வீடு, மேஷம் நீச்ச வீடு. சனிபகவான் உங்கள் ஜாதகத்தில் எப்படி இருக்கிறார் என்று பாருங்கள். இது பொதுவான பலன்தான் உங்களின் தசாபுத்தியைப் பொறுத்து பலன்கள் சற்று மாறுபட வாய்ப்பு உள்ளது.

மேஷம்
லாப ஸ்தானத்தில் சனி பயணம் செய்வதால் கோடிகள் தேடி வரும். லாபத்தையும் உயர்வையும் தரப்போகிறது. மூத்த சகோதரர் உதவி கிடைக்கும். வளர்ச்சி அதிகரிக்கும். செய்யும் முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். சனிபகவான் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. நல்ல வேலை கிடைக்கும். வெளிநாடு செல்ல யோகம் வந்துள்ளது.

அதிகார பதவி
புதிய வேலை கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிளில் வெற்றி கிடைக்கும். அதிகார பதவி தேடி வரும். பொறியியல், மருத்துவம் படித்தவர்களுக்கு நல்ல காலம். முன்னேற்றகரமான கால கட்டம். சனியின் பார்வை ஐந்தாவது வீடான சிம்ம ராசியின் மீது விழுகிறது. பிசினஸ் முதலீடுகள் லாபத்தை தரும். தடைபட்ட காரியங்கள் மளமளவென நடைபெறும். திருமண தடைகள் நீங்கும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனியின் பார்வை விழுகிறது. பிள்ளைகளால் சுப செலவுகள் ஏற்படும்.

கோடீஸ்வர யோகம்
சனிபகவான் பார்வை உங்க ராசியில் விழுவதும் கூடுதல் பலம். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்களின் செல்வாக்கும் சொல்வாக்கும் உயரும். சிலர் விமானம் ஏறி வெளிநாடு செல்வீர்கள். அந்நிய தேசத்து வருமானம் உங்களை கோடீஸ்வரர் ஆக்கும். சனி பகவான் நல்ல இடத்தில் லாப ஸ்தானத்தில் அமர்ந்து கோடிகளை கொட்டித்தரப்போகிறார் அனுபவிக்கத் தயாராகுங்கள். அதே நேரத்தில் அதிக பணம் வருகிறதே என்று ஆணவத்தோடு இருக்கக் கூடாது அப்புறம் சனிபகவான் தனது தண்டனையை படிப்பினைகளை தர ஆரம்பித்து விடுவார்.

பணம் நகை பத்திரம்
மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும். பொருள் வரவும் ஆதாயமும் அதிகரிக்கும். பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும். சனிபகவான் பார்வை உங்கள் ராசிக்கு எட்டாவது பார்வையின் மீது விழுகிறது. வாகன பயணங்களில் கவனம் தேவை. பணம் நகைகளை இரவல் தர வேண்டாம். வாக்குறுதிகளை தர வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போட்டு பணம் கடனாக வாங்கி தராதீர்கள். பங்குச்சந்தை முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. சின்னச் சின்ன உடல் ஆரோக்கியங்கள் வந்து நீங்கும். வயிறு பிரச்சினைகள் வரலாம் கவனமாக இருப்பது அவசியம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications