சனி பெயர்ச்சி பலன் 2023: கொட்டிக்கொடுக்கப்போகும் லாப சனி.. கோடிகளை அள்ளப்போவது யார்?
சென்னை: சனி பகவான் லாப ஸ்தானத்தில் பயணம் செய்யும் காலத்தில் அந்த ஜாதகருக்கு கோடி கோடியாக செல்வங்களை கொட்டிக்கொடுப்பார். பண வருமானம் பல வழிகளிலும் வரும். லாப சனி காலத்தில் வரக்கூடிய பணத்தை பத்திரப்படுத்தி கோடீஸ்வரர் ஆகும் ராசிக்காரர் யார் என்று பார்க்கலாம்.
சனிபகவான் கும்பம் ராசியில் அவிட்டம், சதயம், பூரட்டாதி நட்சத்திரங்களில் பயணம் செய்யப்போகிறார். 2026ஆம் ஆண்டு வரைக்கும் சனிபகவான் கும்ப ராசியில் உள்ள நட்சத்திரங்களில்தான் பயணம் செய்வார். சனி பகவான் மேஷம் லக்னகாரர்களுக்கு தொழில் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதி. 11ஆம் வீட்டிற்கு அதிபதி 11ஆம் வீட்டிற்கு வருவது சிறப்பானது. தொழிலில் லாபம் கிடைக்கும். உங்களின் ஆசைகள் அபிலாஷைகள் நிறைவேறும். மேஷ லக்னத்திற்கு 11ஆம் வீட்டில் சனி பயணம் செய்வதால் இந்த கால கட்டத்தில் உங்களுடைய ஆசைகளை வெளியே சொல்ல வேண்டாம். மூத்த சகோதரர்கள் செய்யும் செயல்பள் பற்றி வெளியில் பேசாமல் தவிர்ப்பது நல்லது.

சனிபகவான் கும்பம் ராசியில் இருந்து மேஷ ராசியை, லக்னத்தை மூன்றாம் பார்வையாக பார்க்கிறார். மேஷ லக்னத்திற்கு 5 வது இடம் 8 வது இடங்களில் சனிபகவானின் பார்வை விழுகிறது. 2026 ஆண்டு வரை சனிபகவான் கும்ப ராசியில் பயணம் செய்கிறார். அடிக்கடி கோபப்பட வேண்டார். கோபத்தோடு பேசுவதை தவிர்ப்பது நல்லது. உணர்ச்சிகளை கட்டுப்படுத்துங்கள். பேச்சில் கவனம் தேவை. உங்களுடைய வேலை தொழில் பற்றி பெருமையாகக் கூட வெளியில் சொல்ல வேண்டாம். கண் திருஷ்டிபடும் கவனம் தேவை.
கும்ப ராசியில் அமர்ந்துள்ள சனி பகவான் மேஷ ராசி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு அற்புதமான மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது. சனிபகவான் 3வதுபார்வையாக உங்கள் ராசியை லக்னத்தை பார்ப்பதால் கல்வியில் மேன்மை கிடைக்கும். மாணவர்கள் நல்ல முறையில் தேர்ச்சி பெறுவீர்கள். லக்னத்தை சனி பார்ப்பதால் சோம்பேறித்தனம் ஏற்படும். சுறுசுறுப்பாக இருங்க எதையும் ஒத்திப்போடாதீங்க. உங்களுக்கு வெற்றிகள் தேடி வரும். சனிபகவான் உங்க லாப ஸ்தானத்தில் இருப்பது நல்லதாக இருந்தாலும் லக்னத்தை பார்ப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
சனி பகவான் ஏழாம் பார்வையாக 5ஆம் வீட்டை பார்க்கிறார். எதை பற்றியும் கவலைப்பட வேண்டாம். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு காதல் கனிந்து திருமணத்தில் முடியலாம். குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. கலைத்துறையில் உள்ளவர்களுக்கு சிறப்பான காலம், விருதுகள் கிடைக்கும். குழந்தைகளுக்கு செலவு பண்ணுங்க கெடுபலன்கள் குறையும். தொழிலில் உங்களுக்கு நல்லது நடக்கும் லாபம் அதிகரிக்கும். இந்த கால கட்டத்தில் நீங்கள் கடன் வாங்காமல் தவிர்ப்பது நல்லது. யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள்.
உங்களுடைய வேலையை நீங்கள் திருப்தியாக செய்தாலே போதும் . செய்யும் வேலையை சந்தோஷமாக செய்யுங்கள். அவசரப்பட்டு வேலையை விட்டு விட்டு அவதிப்படாதீர்கள். வெளிநாடு செல்லும் யோகம் தேடி வரும். விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்துக்கொள்வது நல்லது.
எட்டாம் வீட்டை சனி பார்ப்பதால் கவனம் தேவை கணவன் மனைவி பிரச்சினை ஏற்படும் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. மனைவியின் மூலம் வருமானம் வரும் எதிர்பாராத பணவரவு உண்டு. பெண்கள் விசயத்தில் கவனம் தேவை. ஆலய தரிசனம் செய்வது உங்களுக்கு வரும் அவமானங்களை நீங்கும்.
இந்த சனி பெயர்ச்சி காலத்தில் குரு பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாகவே உள்ளது. ராகு கேது பெயர்ச்சியும் நடைபெறும் பாதிப்புகளை சரியாக்கும். வண்டி வாகனத்தில் கவனமாக போங்க. உறவுகள் விசயத்தில் கவனமாக இருப்பது நல்லது. 2025ஆம் ஆண்டு சனி பகவானுடன் ராகு இணைகிறார். இது அற்புதமான யோகத்தை தரப்போகிறது. லாப ராகு லாப சனியோடு இணைவதால் வெகு விரைவில் கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது. கோடி கோடியாக சனியும் ராகுவும் கொட்டித்தரப்போகின்றனர்.
மாணவர்களுக்கு உயர்கல்வியில் நல்ல மதிப்பெண் பெற்று பாஸ் செய்வீர்கள். தேவையற்ற விஷயங்களில் மனதை செலுத்தாமல் படிப்பில் கவனம் செலுத்தினால் நல்ல வேலை கிடைக்கும். உயர்கல்வி பயில வெளிநாடு செல்வதில் தடையேற்பட்டு பின் அமையும். வெளிநாடு செல்ல பாஸ்போர்ட், விசா போன்ற விஷயங்கள் சுமூகமாக அமையும்.
புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள்.சேமிப்பு உயரும்.பெண்களால் லாபம் அதிகரிக்கும். ஏழை எளியவர்கள், மாற்றுத்திறனாளிக்கு உதவி பண்ணுங்க. வேலையாட்கள், கழிவு அகற்றுபவர்களுக்கு உதவுங்கள் நல்லது நடக்கும். இது அதிர்ஷ்டகரமான சனிப்பெயர்ச்சி. சனிபகவான் அனைத்தையும் அள்ளி வழங்குவார். தான தர்மம் செய்யுங்கள். பகைவர்களிடத்திலும் அன்பு பாராட்டுங்கள். சனி பெயர்ச்சி காலத்தில் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் அருள்பாலிக்கும் பாதாள சொர்ண சனீஸ்வரரையும், மங்கள சனீஸ்வரரையும் வழிபடுங்கள் நல்லது நடக்கும்.












Click it and Unblock the Notifications