சனி பெயர்ச்சி பலன் 2023: அள்ளித்தரப்போகும் சனி பகவான்... லிஸ்ட் ரொம்ப பெருசா இருக்கே
சென்னை: சனி கொடுத்தால் யார் தடுப்பார் என்பார்கள்.. கும்ப ராசியில் பயணம் செய்யும் சனிபகவான் சில ராசிக்காரர்களுக்கு சந்தோஷத்தை தரப்போகிறார். சிலருக்கு சங்கடத்தை தரப்போகிறார். சனி கொடுத்தாலும் அதை தாங்குவதற்கு சக்தி வேண்டும். சனி பெயர்ச்சியால் யாரெல்லாம் பரிகாரம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
மேஷம்: லாப ஸ்தானமான 11ஆம் வீட்டில் சனி சஞ்சரிக்கும் காலத்தில் நிறைய லாபங்கள் கிடைக்கும். சாதகமான நிலையில் சஞ்சரிப்பதால் அசையும் அசையா சொத்துக்கள் மூலம் அமோக லாபம் வரும். திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் வரும். வெளிநாடு போகும் யோகம் வரும். வியாபாரம் தொழிலில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். புதிய கவுரவம் அந்தஸ்து கிடைக்கும்.

ரிஷபம்: சனி பகவான் ரிஷபம் ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செய்யும் தொழில் வளர்ச்சியடையும். பட்டம், பதவி, புகழ் தேடி வரும். சுய தொழில் தொடங்கலாம். மிகப்பெயர் வளர்ச்சியும் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரமும் கிடைக்கும். ஆட்சி பெற்ற சனியின் பார்வை ராசிக்கு 12ஆம் வீட்டில் விழுவதால் இறை வழிபாட்டில் அதிக கவனம் செலுத்துங்கள். வெளிநாட்டு யோகம் செல்வதற்கு நேரம் கூடி வந்துள்ளது. நான்காம் வீட்டின் மீது சனியின் பார்வை விழுவதால் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

லிஸ்ட் ரொம்ப பெருசு: சனி பார்வை உங்க ராசிக்கு ஏழாம் வீட்டின் மீது விழுவதால் கணவன் மனைவி உறவில் கவனமாக இருங்க. விட்டுக்கொடுத்து போங்க. சனியால் கொடுக்கும் பதவி, சொத்துக்களை யாராலும் அசைக்க முடியாது. திருமணம் நடக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். தசாபுத்தியும் அற்புதமாக சேர்ந்தால் கோடீஸ்வரயோகம் தேடி வரும் காலம். நிறைய தான தர்மங்கள் செய்யுங்கள் சனிபகவான் அள்ளிக்கொடுப்பார். லிஸ்ட் ரொம்ப பெருசா இருக்கே என்று ஜோதிடர்கள் மீம்ஸ் பதிவிட்டுள்ளனர்.
மிதுனம்: பாக்ய சனி காலம் என்பதால் குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். இனி வரும் சனிபகவான் உங்களுக்கு யோகங்களை அள்ளித்தரப்போகிறார். காரணம் குரு பகவானும் 11ஆம் வீட்டில் அமர்ந்து லாபத்தை தருகிறார். சனி பகவான் மிகச்சிறந்த தன யோகத்தை தரப்போகிறார். லாப ஸ்தானத்தின் மீது சனியின் பார்வை விழுவதால் பொருளாதார தடைகள் நீங்கும். நிறைய பணவரவும், அசையா சொத்துக்கள் மூலம் எதிர்பாராத லாபமும் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வுடன் கூடிய புரமோசன் கிடைக்கும். தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கும். தர்ம சனியால் நிறைய வருமானம் கிடைக்கும். நிறைய தர்மகாரியங்களுக்கும் செலவு செய்வீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வந்து சேரும்.
கடகம், சிம்மம்: அஷ்டமத்து சனி சிலருக்கு தேவையில்லாத சங்கடங்களை கொடுக்கும். கடலில் மூழ்கிப்போனது போல எல்லாம் சிலர் மீம்ஸ் போட்டிருப்பார்கள். அதே நேரத்தில் விபரீத ராஜயோகத்தையும் தரப்போகிறார் சனி பகவான். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும். சிம்ம ராசிக்காரர்களுக்கு

கன்னி: உங்களுடைய ராசிக்கு ஆறாம் வீட்டில் சனி சஞ்சரிக்கும் பொன்னான காலம். கன்னி ராசிக்காரர்களுக்கு முழு அதிகாரத்தையும் சனி தருவார். இதுவரை நிறைய சறுக்கலை சந்தித்திருப்பீர்கள். சனி தனது சொந்த வீட்டில் ஆட்சி பெற்று பயணம் செய்யும் இந்த கால கட்டத்தில் கடன் நோய் எதிர்ப்பு போன்றவை கட்டுப்படும். விபரீத ராஜயோகம் கிடைக்கப்போகிறது. வெற்றிகள் தேடி வரும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். முழு ராஜயோகம் கிடைக்கப் போகிறது. திடீர் அதிர்ஷ்டங்கள் வீடு தேடி வரும். நிஜமாகவே இது ராஜயோக காலமாகும்.
தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு இதுநாள் வரை இருந்த ஏழரை சனி காலம் முடிவுக்கு வருகிறது. டிசம்பர் மாதம் முதல் முழுமையான ராஜயோகம் தேடி வரப்போகிறது. இது நாள் வரை கஷ்டங்களை அனுபவித்தவர்கள் இனி நல்லவைகளை அனுபவிக்கப் போகிறீர்கள். பட்ட கஷ்டங்களுக்கு விடிவு காலம் பிறக்கப் போகிறது. திருமண விசயங்கள் கைகூடி வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உயர் பதவி யோகம் வரும். புதிய தொழில் அமையும். இனி ராஜ யோகம் தேடி வரப்போகிறது புகழின் உச்சிக்கு செல்லப்போகிறீர்கள்.
மகரம்: சனி பகவான் பாத சனியாக பயணம் செய்வதால் அடிக்கடி தடுக்கி விழுவீர்கள். கால்களில் கவனம் தேவை. சில நேரங்களில் பிரச்சினைகள் தேடி வரும். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. யாருக்கும் வாக்கு கொடுத்து மாட்டிக்கொள்ளாதீர்கள்.

ஏழரை சனி: கும்ப ராசியில் பயணம் செய்யும் சனிபகவான் ஏழரை சனியில் ஜென்ம சனியாக பயணம் செய்யப்போகிறார். எத்தனையோ சங்கடங்கள் வரலாம். சுப காரியங்கள் நடைபெறுவதில் தடைகளும் தாமதங்களும் உண்டாகும். எங்கும் எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது.
மீனம்: விரைய சனி ஆரம்பிக்கிறது. மீன ராசிக்காரர்கள் தொழில் முதலீடுகளில் அகலக்கால் வைக்க வேண்டும். பணத்தை செலவு செய்யும் போது கவனம் தேவை. சுப விரைய செலவுகளாக மாற்றுங்கள். ஏழரை சனியால் பாதிக்கப்பட்டவர்கள் சனிக்கிழமை நாளில் சனிஹோரையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்க வேண்டும். எள் தயிர் கலந்த சாதத்தை சனிக்கிழமை நாளில் காகத்திற்கு வைத்து விட்டு சாப்பிடுவது நல்லது. நீல நிற சங்குபூக்களும் வன்னி மர இலை, வில்வ இலை மாலை கட்டி சனிபகவானை வணங்கலாம்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications