கும்ப ராசியில் வக்ர நிவர்த்தியாகும் சனி.. தீபாவளிக்குப் பின் யாருடைய வாழ்க்கையில் அதிரடி சரவெடி
சென்னை: கும்ப ராசியில் வக்ர நிலையில் பயணம் செய்த சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். யாருக்கெல்லாம் பாதிப்பாக இருந்ததோ அவர்களுக்கு சில நன்மைகளையும் யாருக்கெல்லாம் சாதகமாக இருந்ததோ அவர்களுக்கு பாதிப்பு உண்டாக வாய்ப்புகள் அதிகம். நவம்பர் 4 முதல் சனிபகவான் வக்ரநிவர்த்தி அடைவதால் யாருடைய வாழ்க்கையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படப்போகிறது என்று பார்க்கலாம்.
சனி பகவான்: சனிதான் ஆயுள் காரகன். சனிதான் தொழில் காரகன். சனிதான் நீதி,நேர்மை,தெய்வீக ஞானத்துக்கும் அதிபதி. ஒருவன் சுறுசுறுப்பாக செயல்படுவதற்கும் சோம்பேறியாக தூங்குவதற்கும் காரணம் அவன் ஜாதகத்தில் சனியின் பலமே ஆகும். ஒரு ராசியில் அதிக காலம் தங்கியிருந்து பலன்கள் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய கிரகம் சனி. இரண்டரை ஆண்டுகாலம் ஒரு ராசியில் தங்குகிறார். சூரியனுக்கு 251 டிகிரியில் சஞ்சரிக்கும் போது வக்ரம் பெற்று 109 இருக்கும் போது வக்ர நிவர்த்தியடைவார். சுமார் 140 நாட்கள் வக்ரகதியில் சஞ்சரிக்கும். இதனை எளிதாக அறிய சூரியனுக்கு 9ல் சனி வரும் போது வக்ரம் பெறுகிறார் சூரியனுக்கு 5ல் சனி வரும் போது வக்ர நிவர்த்தியடைவார்.

சனி வக்ர பெயர்ச்சி: சனி வக்கிரம் பெற்றால் தான் தர வேண்டிய பலன்களை தர தடையும், தாமதம், இழப்பும் எற்படும். ஆயுளைக்குறைப்பார். ஆதிபத்ய சிறப்பில்லாத சனி சுப பலனைத் தருவர். சுப பலன் தர வேண்டிய சனி வக்கிரம் பெற்றால் சுப பலனை தரமாட்டார். உடல் முழுவதும் விதவிதமான பிரச்சனைகள் எற்படும். நவம்பர் 4 முதல் வக்ர நிவர்த்தி அடையும் சனிபகவான் கும்ப ராசியில் நேர்கதியில் பயணம் செய்வார். இந்த வக்ர நிவர்த்தியால் இதுநாள் வரை துன்பங்களை அனுபவித்த சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படப்போகிறது.
மேஷம்: லாப ஸ்தானத்தில் சனி சஞ்சரிக்கிறார். ஜூன் முதல் வக்ர கதியில் பயணம் செய்த சனிபகவான் ராகுவின் நட்சத்திரமான சதயம் நட்சத்திரத்திற்கு மாறுகிறார். சுப காரியங்கள் நடைபெறும். கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டுக்கு மாறுவீர்கள். தடைபட்ட பல வேலைகள் நடைபெறும். முடங்கிக் கிடந்த வேலைகள் முழுமையடையும். அரைகுறையாக நின்ற பல வேலைகளை முடிப்பீர்கள். நோய்கள் குணமடையும், வெளியூர் பயணங்கள் வெற்றிகரமாக நிறைவேறும்.
ரிஷபம்: சனிபகவான் உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் சஞ்சரிக்கிறார். இது தொழில் ஸ்தானமாகும். இது கரும ஸ்தானம். வேலையில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். தாயாரால் எதிர்பாராத உதவிகள் கிட்டும். பார்க்கும் வேலையை அவசரப்பட்டு விட்டு விடக் கூடாது. காலி மனை, விடு, வண்டி வாகனங்கள் வாங்க வாய்ப்பு அமையும். அதே சமயம் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.
மிதுனம்: சனிபகவான் பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் பதற்றங்கள் நீங்கும். மன நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும். நினைத்த காரியம் நிறைவேறும். தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி வெற்றி பெறுவீர்கள். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம். மன குழப்பங்கள் நீங்கி தெளிவடையும். கண்டச்சனி, அஷ்டமத்து சனியை கடந்து விட்டீர்கள் இனி உங்களுக்கு பொற்காலம்தான்.
கன்னி: தற்போது ஆறாம் வீட்டில் உள்ள சனியால் அபரிமிதான யோகங்களை பெறப்போகிறீர்கள். கடன் பிரச்சினைகள் நீங்கும். பண வருமானம் சீராக இருந்து வரும். எதிர்பாராத தனவரவு, பொருள் வரவு கிட்டும். நோய்கள் நீங்கும். எதிரிகள் பிரச்சினை முடிவுக்கு வரப்போகிறது. பணம் கடனாக வாங்கி விட்டு தரமுடியாது என்று ஏமாற்றியவர்கள் இனி வீடு தேடி வந்து பணத்தை கொடுத்து விட்டு செல்வார்கள்.
தனுசு: சனி தற்போது மூன்றாவது வீட்டில் இருக்கிறார். ஏழரை சனி முடிவுக்கு வந்து விட்டது. சனி பகவான் மூன்றாவது வீட்டிற்கு செல்வது யோகம். வேலை கிடைக்கும் புரமோசன் கிடைக்கும். அபரிமிதமான வருமானத்தினால் வீடு நிலம் வாங்குவீர்கள். மனைவிக்கு வேலை கிடைக்கும். உங்களை எதிரிகளாக நினைத்தவர்கள் கூட இனி நண்பர்களாக வந்து பழகுவார்கள். ஒதுக்கி வைத்தவர்கள் தேடி வருவார்கள். பிரிந்து சென்ற தம்பதியர் கூட இனி ஒற்றுமையாக வாழ்க்கை நடத்த வாய்ப்பு உள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications