சனி பெயர்ச்சி பலன் 2023: நேர் கொண்ட பார்வை.. வேலை, புரமோசன்.. 2024ல் யாருக்கு கிடைக்கும்
சென்னை: சனி பகவான் தொழில் காரகன். உழைப்பின் அதிபதி. சனிபகவானின் அருள் இருந்தால் நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருந்த சிக்கல்கள் பிரச்சினைகள் நீங்கும். வக்ரமடைந்திருந்த சனி வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் பயணம் செய்கிறார். சனி பெயர்ச்சியால் சனிபகவானின் பார்வையால் யாருக்கு புது வேலை கிடைக்கும். யாருடைய வேலையில் மாற்றம் ஏற்படும். புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
மேஷம்: சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைந்து நேராக பயணம் செய்வதால் உங்களுக்கு நல்ல காலம் பிறந்து விட்டது. லாப சனி தொழில் வியாபாரத்தில் நிறைய லாபத்தை தரப்போகிறது. வேலையில் புரமோசனை தரப்போகிறது. வெளிநாடு வேலை, கல்வி வாய்ப்பினை தரப்போகிறது. அனுபவங்களை பாடங்களாக வைத்து முன்னேற்றம் காண்பீர்கள். உடலில் ஏற்பட்ட நோய் பாதிப்புகள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். ஏழைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுங்கள் 2024ஆம் ஆண்டில் நன்மைகள் அதிகரிக்கும்.

ரிஷபம் : உங்கள் ராசிக்கு பத்தாம் வீடான தொழில் வியாபார ஸ்தானத்தில் சனி பகவான் நேராக பயணம் செய்யும் காலத்தில் உங்களுக்கு வேலையில் புரமோசன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சொந்த வீடு வாகனம் வாங்குவீர்கள். பெண்களுக்கு மகிழ்ச்சியும் மன நிறைவும் அதிகரிக்கும். சனிக்கிழமை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி சனிபகவானை வழிபடுங்கள் 2024 ஆம் ஆண்டில் நல்லதே நடக்கும்.
மிதுனம்: பாக்ய சனி நிறைய பாக்கியங்களை அள்ளித்தரப்போகிறது. விடிவுகாலம் பிறக்கப்போகிறது. வேலை இழந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் பிரச்சினையை சந்தித்து வந்தவர்களுக்கு இனி எல்லாம் ஜெயமாகப்போகிறது. உழைப்பு உயர்வை தரப்போகிறது. வேலையில் இடமாற்றம் கிடைக்கும்.. உயரதிகாரிகளின் ஆதரவுடன் நல்ல புரமோசன் கிடைக்கும். சுப செலவுகள் அதிகரிக்கும். மன உளைச்சல் நீங்கி நிம்மதி அதிகரிக்கும். 2024ஆம் ஆண்டு சிறப்பான ஆண்டாக அமையப்போகிறது.
கடகம்: சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே.. அஷ்டமத்து சனி காலம் என்றால் கஷ்டங்கள் வருமே கவலை பட வேண்டாம். எதையும் யோசித்து தெளிவாக முடிவு எடுங்கள். சனி பகவான் அவ்வப்போது தனது வேலையை காட்டுவார். பயணங்களில் கவனம் தேவை. வேகத்தை குறைத்து விவேகத்துடன் செயல்படுவது நல்லது. வேலை செய்யும் இடத்தில் பொறுமையும் நிதானமும் தேவை. இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கு வேலை செய்யும் இடத்தில் ஏற்படப்போகும் சவால்களை சமாளியுங்கள்.
சிம்மம்: உங்கள் ராசிக்கு ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் சனி பகவான் பயணம் செய்கிறார். நேரடியாக சனிபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். கூடவே கணவன் மனைவி இடையேயான பேச்சுவார்த்தையில் நிதானமும் கவனமும் தேவை. குரு பகவானின் பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைப்பதால் நல்ல வேலை கிடைக்கும். வேலையில் புரமோசன் கிடைக்கும். பண வருமானம் அதிகரிக்கும். ஞாயிறுக்கிழமை சூரியனை வணங்கி வழிபட்டு வர அரசு தேர்வு எழுதியவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும்.
கன்னி: ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சனி பகவான் பயணம் செய்கிறார். பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது போன இத்தனை ஆண்டுகாலம் கஷ்டங்களை பொருத்துக்கொண்டு இருந்தீர்கள். உங்களுக்கு இனி எல்லாம் சுகமே என்பது போல சனி பகவான் நல்லதை தரப்போகிறார். இனி தொட்டதெல்லாம் பொன்னாகும். நல்ல வேலை கிடைக்கும் உங்களின் வருமானம் இரட்டிப்பாகும். கடன்களை அடைபடுவதற்கான நேரம் வந்து விட்டது. சொந்த தொழில் செய்பவர்கள் தொழிலை விரிவுபடுத்தலாம். சனிக்கிழமை சனி ஹோரையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.
துலாம்: 5ஆம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்யும் சனி பகவான் உங்களுக்கு சந்தோஷத்தை தரப்போகிறார். வேலை செய்யும் இடத்தில் இருந்த மன உளைச்சல் நீங்கப்போகிறது. நல்ல வேலை கிடைக்கப்போகிறது. புரமோசன் இல்லை சம்பள உயர்வு இல்லை என்று புலம்பியவர்களுக்கு கை நிறைய சம்பளத்தில் நல்ல புரமோசன் கிடைக்கப்போகிறது. 2024ஆம் ஆண்டு முதல் புதிய தொழில் தொடங்கலாம். கால பைரவரை மிளகு தீபம் ஏற்றி வணங்க நன்மைகள் இரட்டிப்பாகும்.
விருச்சிகம்: சனி பகவான் உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். நான்காம் வீட்டிற்கு அதிபதி நான்கில் அமர்வது சச மகா யோகத்தை தரப்போகிறது. அர்த்தாஷ்டம சனி காலத்தில் இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்படாதீர்கள். கையில் இருக்கும் வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு முயற்சி செய்தால் அதுவே ஆபத்தாக முடிய வாய்ப்பு உள்ளது. கவனம் தேவை. செவ்வாய்கிழமை அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி வணங்கவும். சிவ ஆலயத்திற்கு அர்ச்சனைக்கு வில்வம் வாங்கித்தர நன்மைகள் நடைபெறும்.
தனுசு: ஏழரை சனியின் தாக்கத்தில் இருந்து முழுவதும் விடுபடுகிறீர்கள். 2024ஆம் ஆண்டில் உங்களுக்கு வெற்றிகள் தேடி வரப்போகிறது. மன குழப்பங்கள் நீங்கி நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். உங்களுடைய காட்டில் இனி பண மழை பொழியப்போகிறது. வேலையை இழந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். விநாயகருக்கு அருகம்புல் சாற்றி வழிபட நன்மைகள் அதிகம் நடைபெறும்.
மகரம்: சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசி நேயர்களே.. குடும்ப சனியாக இரண்டாம் வீட்டில் பயணம் செய்வதால் வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை விசயமாக செல்லும் பயணம் வெற்றியைத் தரும். நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்க திருநள்ளாறு சென்று நள தீர்த்தத்தில் நீராடி சனி பகவானை வழிபட்டு வர நன்மைகள் அதிகரிக்கும்.
கும்பம்: சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசி நேயர்களே. ஜென்ம சனியாக உங்கள் ராசியில் அமர்ந்து பயணம் செய்வதால் வேலை செய்யும் இடங்களில் கவனமும் நிதானமும் தேவை. வேலை செய்யும் இடங்களில் அலுவலகத்தில் பொறுமையும் நிதானமும் தேவை. உடன் வேலை செய்பவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. சரியான நேரத்திற்கு சாப்பிடுவது நல்லது. பண விசயங்களில் கவனம் தேவை. வேலை, தொழிலில் ஏற்படும் சிக்கல்கள் தீர சனிக்கிழமை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்கி வர நன்மையைத் தரும்.
மீனம்: உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சனிபகவான் பயணம் செய்கிறார். ஏழரை சனியில் ஜென்ம சனி ஆரம்பமாகிறது. ஜென்ம ராகுவும் தலைமேல் அமர்ந்துள்ளார். வேலையில் சில சிரமங்களை ஏற்படுத்தும். வேலையில் பொறுப்புகள் அதிகரிக்கும். உழைப்பின் அருமையை தெரிந்தவர்கள் நீங்கள். புதிய வீடு, சொத்து சேர்க்கை ஏற்படும். புது வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசனும் கிடைக்கும். சனிக்கிழமை நல்லெண்ணெய் தேய்த்து குளித்து சனி பகவானுக்கு விளக்கேற்று வணங்குங்கள் 2024 ஆம் ஆண்டில் நல்லதே நடக்கும்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications