சனி பெயர்ச்சி பலன் 2023: வக்ரமடையும் சனிபகவான்..6 ராசிக்காரர்களுக்கு விடியல்..வேலையில் இனி டாப்
சென்னை: நவ கிரகங்களில் சனிபகவான் மெதுவாக நகரும் கிரகம் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் பயணம் செய்யும் சனிபகவான் சில மாதங்கள் வக்ரமடைவார். ஜூன் 17ஆம் தேதி சனிபகவான் வக்ரமடைந்து நவம்பர் 4 ஆம் தேதி வக்ர நிவர்த்தியடைகிறார். சனி பகவான் தொழில் கர்ம காரகன், சனிபகவான் வக்ரமடைவதால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு வேலையில் சிக்கல்கள் ஏற்படும் நல்ல வேலையும் புரமோசனும் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

சனி வக்ர பெயர்ச்சி: சனி பகவான் சூரியனுக்கு 251 டிகிரியில் சஞ்சரிக்கும் போது வக்ரம் பெற்று 109 இருக்கும் போது வக்ர நிவர்த்தியடைவார். சுமார் 140 நாட்கள் வக்ரகதியில் சஞ்சரிக்கும். இதனை எளிதாக அறிய சூரியனுக்கு 9ல் சனி வரும் போது வக்ரம் பெறுகிறார் சூரியனுக்கு 5ஆம் இடத்திற்கு சனி வரும் போது வக்ர நிவர்த்தியடையும். சனி பெயர்ச்சியால் பாதிப்பு ஏற்பட்ட ராசியினருக்கு தொழிலில் இருந்து வந்த பாதிப்புகள் குறையும். பணக்கஷ்டம் தீரும். பகை விலகி நிம்மதி உண்டாகும்.
மேஷம்: சனி பகவான் உங்களுக்கு தொழில் கிரகம், லாப ஸ்தான அதிபதி. மேஷம் ராசிக்காரர்களுக்கு சனி வக்ர பெயர்ச்சி தொழில் வேலையில் புதிய மாற்றத்தை தரப்போகிறது. கர்ம ஸ்தான அதிபதி. சனி பகவான் வக்ரமடைவதால் உங்களின் ஆற்றல் வேகம் அதிகரிக்கும். நிறைய எனர்ஜி அதிகரிக்கும். மேஷத்தில் குருவும் ராகுவும் இணைந்திருக்கும் நேரத்தில் வக்ரமடைந்த சனிபகவானின் பார்வையும் கிடைக்கிறது. உங்கள் திட்டங்களை சனி பகவான் இப்போது நிறைவேற்றுவார். இந்த சனி வக்ர பெயர்ச்சி உங்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது. திடீர் மன உளைச்சல் உண்டாகும். வேகத்தை விட இந்த கால கட்டத்தில் விவேகம் அவசியம். ஆலய தரிசனம் மன அமைதியைத் தரும். சனி பகவானை சனிக்கிழமை சனி ஹோரையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்கலாம்.

ரிஷபம்: ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு சனி பகவான் யோக காரகர். பாக்யாதிபதி சனி பகவான். கும்ப ராசியில் அமர்ந்துள்ள சனிபகவான் வக்ரமடைகிறார். வேலையில் இருப்பவர்களுக்கு வேலையில் நல்ல இடமாற்றம் உங்களுக்கு கிடைக்கப்போகிறது. நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும். உங்களின் வேகம் அதிகரிக்கும். தொழில் ஸ்தானத்தில் சனி பகவான் வக்ரமடைவதால் உங்களின் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு அற்புதமான காலம். நினைத்த கல்லூரியில் படிக்க இடம் கிடைக்கும். அதோடு வேலையும் கிடைக்கும். பெண்களுக்கு வேலைகள் அதிகரிக்கும். பளு கூடுவதால் மனமும் உடலும் ஓய்வை எதிர்பார்க்கும். பிறந்த ஜாதகத்தில் சனிபகவான் எப்படி இருக்கிறார் என்று பார்த்து அதற்கேற்ப செயல்படுங்கள். உங்களுக்கு வரக்கூடிய நல்ல வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
மிதுனம்: சனி வக்ரமடைவதால் மிதுன ராசிக்காரர்களுக்கு நான்கரை மாத காலத்தில் என்னென்ன கொடுக்கப்போகிறார் என பார்க்கலாம். அஷ்டமாதிபதி சனி பாக்ய ஸ்தானத்தில் வக்ரமடைகிறார். சனிபகவானின் பார்வை ராகு குருவின் மீது விழுகிறது. சுப காரியங்களில் சில தடைகளை ஏற்படுத்தும் சனிபகவானின் வக்ர பார்வை. எந்த ஒரு செயலையும் நினைத்த நேரத்தில் செயல்படுத்த முடியவில்லையே என்ற ஏக்கம் இருக்கும். கவலை வேண்டாம். வக்ரமடைந்த சனியின் பார்வை லாப ஸ்தானத்தில் விழுவது சிறப்பு. சனி பகவான் வக்ரமடையும் நான்கரை மாதத்தில் என்ன நடைபெறப்போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சனிபகவான் வக்ரமடையும் இந்த கால கட்டத்தில் இருக்கும் வேலையை தக்க வைத்துக்கொள்ளுங்கள் அதுவே சிறப்பு.

கடகம்: உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் ஆட்சி பெற்ற சனிபகவான் வக்ரமடைகிறார். உங்களுக்கு விபரீத ராஜயோகத்தை சனி பகவான் தரப்போகிறார். தொழில் வியாபாரத்தில் இருந்த இடைஞ்சல்கள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியம். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. மாணவர்களுக்கு உயர்கல்வி படிக்க யோகம் உண்டாகும். நினைத்த காரியம் கைகூடி வரப்போகிறது. இல்லத்தரசிகளுக்கு இந்த கால கட்டத்தில் மன நிம்மதி கிடைக்கும். மன உளைச்சல்கள் நீங்கும். அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள்.
சிம்மம்: குரு பகவான் பார்வை உங்கள் ராசி மீது விழுகிறது. அதே நேரத்தில் வக்ரமடைந்த கண்டச்சனியின் பார்வையும் உங்களுடைய ராசியின் மீது விழுகிறது. வருமானத்தில் முன்னேற்றம் உண்டாகும். வேலையில் புரமோசன் கிடைக்கும். வீடு வண்டி வாகன சேர்க்கை ஏற்படும். வளமான வாழ்க்கையை சனி பகவான் தரப்போகிறார். புதிய வேலை வாய்ப்புகள் உண்டாகும். வேலையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றகரமான கால கட்டம். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். உயரதிகாரி சொல்வதை கேட்டு நடப்பது நல்லது. மாணவர்களுக்கு வெளியூர், வெளிநாடுகளில் சென்று படிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பார். பெண்கள் இல்லத்தரசிகளுக்கு உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பாராட்டும் பரிசும் தேடி வரும். கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறையும் கவனமும் தேவை. எதையும் அலட்சியம் வேண்டாம்.

கன்னி: சனி பகவான் வக்ரமடையும் இந்த கால கட்டத்தில் பெரிய அளவில் பாதிப்புகள் இருக்கப்போவதில்லை. வேலையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். எதிரிகளின் தொல்லை ஒழியும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். மாணவர்களுக்கு இது ஏற்ற கால கட்டம். புதிய படிப்புகள் படிக்க பெரிய பல்கலைக்கழகங்கள் வாய்ப்பு கிடைக்கும். பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வீட்டில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வக்ர காலத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகளை ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு எடுப்பது நல்லது.


Click it and Unblock the Notifications
