சனி பெயர்ச்சி 2023: வக்ரமடையும் சனியால் சச மகா யோகம் யாருக்கு?..விபரீத ராஜயோகம் யாருக்கு
சென்னை: சனிபகவான் சில தினங்களில் வக்ரமடையப்போகிறார். சனி வக்ரம் அடைதல் என்பது அவர் பின்னோக்கி சஞ்சாரம் செய்வது ஆகும். சனி வக்கிரமடைவதால் சனிப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் பாதிப்பாக இருந்ததோ அவர்களுக்கு சில நன்மைகளையும் யாருக்கெல்லாம் சாதகமாக இருந்ததோ அவர்களுக்கு சில பாதிப்பு உண்டாக வாய்ப்புகள் அதிகம். கும்பம் ராசியில் உள்ள சனிபகவான் இந்த ஆண்டு ஜூன் 17ஆம் தேதி வக்ரமடைகிறார் நவம்பர் 4ஆம் தேதி வக்ர நிவர்த்தியாகி நேர்கதியில் பயணம் செய்வார். சனிபகவான் வக்ர பெயர்ச்சி பார்வையால் யாருக்கு பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
ஒரு ராசியில் அதிக காலம் தங்கியிருந்து பலன்கள் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய கிரகம் சனி. இரண்டரை ஆண்டுகாலம் ஒரு ராசியில் தங்குகிறார். சூரியனுக்கு 251 டிகிரியில் சஞ்சரிக்கும் போது வக்ரம் பெற்று 109 இருக்கும் போது வக்ர நிவர்த்தியடைவார். சுமார் 140 நாட்கள் வக்ரகதியில் சஞ்சரிக்கும். இதனை எளிதாக அறிய சூரியனுக்கு 9ல் சனி வரும் போது வக்ரம் பெறுகிறார் சூரியனுக்கு 5ல் சனி வரும் போது வக்ர நிவர்த்தியடையும். சனி பெயர்ச்சியால் பாதிப்பு ஏற்பட்ட ராசியினருக்கு தொழிலில் இருந்து வந்த பாதிப்புகள் குறையும். பணக்கஷ்டம் தீரும். பகை விலகி நிம்மதி உண்டாகும்.

மிதுனம்:
சனிபகவான் இப்போது கும்பம் ராசியில் அமர்ந்துள்ளார். இது ஒன்பதாவது இடம். பாக்கிய சனியால் எந்த தடையும் இன்றி செயல்கள் ஜரூராக நடந்து கொண்டிருக்கின்றன. ஜூன் 17 முதல் சனிபகவான் வக்கிரகாலமாகும். வேலை கிடைப்பதில் தடைகள் ஏற்படும். வேலை கிடைத்தாலும் அலைச்சல்களும் நிம்மதியற்ற சூழ்நிலையும் ஏற்படும். கொடுக்கல் வாங்கல்கள் சுமூகமாக இருக்காது. ஜாமீன் கையெழுத்து போட்டு பணம் யாருக்கும் கடனாக தர வேண்டாம். மேலும் தகப்பனாரின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. சிலருக்கு கடன்கள் பெருகி வட்டி கட்ட வேண்டிய சூழ்நிலை அதிகரிக்கும். தேவையற்ற வகையில் நம்மை பற்றிய வீண் வதந்திகள் உலவும். அரசாங்கத்தால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். சனிக்கிழமைகளில் சனி பகவானை எள் தீபம் ஏற்றி வழிபடவும்.
கடகம்: கடக ராசிக்காரர்களே உங்களை அஷ்டமத்து சனி ஆட்டிப்படைக்கிறார். சனி பகவான் வக்ரமடைவதால் தடைபட்ட வேலைகள் மளமளவென முடியும் கணவன் - மனைவி இடையே பிரச்சினை நீங்கி மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். வழக்குகள் சாதகமாகும். எடுக்கும் முயற்சிகள் ஆரம்பத்தில் தடையேற்பட்டாலும் இறுதியில் எதிர்பாராத வெற்றிகள் கிடைக்கும். ஆட்சி பெற்ற சனி வக்ரமடைவதால் விபரீத ராஜயோகம் கிடைக்கப்போகிறது. காதல் விஷயங்கள் திருப்திகரமாக இருக்கும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக அமையும். குழந்தை பாக்யத்தில் சற்று தடையேற்பட்டு பின் விருப்பம் பூர்த்தியாகும். கிடைத்த வேலையை திருப்திகரமாக செய்து வரவும். வேறு வேலை மாறும் முன் நன்கு ஆலோசித்து செய்யவும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்களும் வேதனைகளும் ஏற்படும். பெண்கள் தங்கள் உடல் நலனில் அக்கறை காட்டவும். கடன் பிரச்னை தீரும். கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன தகராறுகள் வந்து போகும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.
விருச்சிகம்:
தற்போது அர்த்தாஷ்டம சனியாக பயணம் செய்கிறார். ஜூன் 17ஆம் தேதிக்கு மேல் எடுக்கும் முயற்சிகள் சாதகமாக இருக்கும். புதிய விஷயங்களைக் கற்க சந்தர்ப்பம் அமையும். எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக வந்து சேரும். புதிய ஆடை, ஆபரணங்கள், வண்டி வாகனங்கள் வந்து சேரும். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கவும். வேலைக்கு ஏற்ற ஊதிய உயர்வும் கிடைக்கும். கையில் பணப்புழக்கம் சரளமாக இருக்கும். புதிய தொழில் தொடங்க வாய்ப்பு கிடைக்கும். சசமகா யோகம் கைகூடி வந்துள்ளது. வியாபாரத்தில் லாபமும் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி, தகவல் தொடர்பு துறைகளில் லாபம் அதிகரிக்கும். தங்க நகைகளை கவனமாகக் கையாளுங்கள். குழந்தைகளின் வருங்காலம் குறித்து ஒரு வித பயம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களைக் ஆலோசிக்காமல் எந்த ஒரு முக்கிய முடிவும் எடுக்க வேண்டாம்.
தனுசு:
சனிபகவான் தற்போது மூன்றாவது வீட்டில் பயணம் செய்கிறார். சனி பகவானின் வக்ர சஞ்சாரத்தினால் சிலருக்கு உயர்கல்வி பயிலவும் வெளிநாடு செல்லும் யோகமும் அமையும். பெற்றோர்கள் வயதானவர்களின் உடல் நலத்தில் அதிக கவனமும் அக்கறையும் செலுத்த வேண்டும். இருத்தல் வேண்டும். தேவையற்ற கடன் வாங்குதல் கூடாது. உடல் ஆரோக்யத்தில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும். புது முயற்சிகளில் அதிக கவனமுடன் இருக்கவும். அடிக்கடி பிரயாணங்கள் ஏற்படும். அதனால் அலைச்சல்களும் அசதியும்தான் அதிகரிக்கும். மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால் வீடு நிலம் வாங்குவீர்கள். மனைவிக்கு வேலை கிடைக்கும். வீண் விமர்சனங்களைத் தவிர்க்கவும். பாதிப்புகள் குறைய திருநள்ளாறு நள தீர்த்தக்குளத்தில் நீராடி சனிபகவானை வணங்கலாம்.
மகரம்:
சனி தற்போது இரண்டாவது வீட்டில் ஆட்சி பெற்று பயணம் செய்கிறார். வக்ரமடைந்து பின்னோக்கி செல்லும் போது எதிர்பாராத தனவரவும் பொருள் வரவும் கிடைக்கும். முன்னோர்கள் சொத்து கணவன் அல்லது மனைவி மூலம் வருமானம் வந்து சேரும். கொடுத்த பணம் வட்டியுடன் வந்து சேரும். கைக்கு வராத பணம் வந்து சேரும். ஏற்றுமதி இறக்குமதி நல்ல லாபகரமாக அமையும். தாய் மாமன்களால் எதிர்பாராத நன்மை ஏற்படும். எதிர்பார்த்த வேலையாட்கள் வந்து சேர்வார். குடும்பத்தோடு புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். பணியிடங்களில் வேலைப்பளு ஏற்படும். சுப காரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடக்க சந்தர்ப்பம் அமையும். திடீர் திருப்பங்கள் ஏற்படும். பழைய நண்பர்களை சந்திப்பார்கள்.
கும்பம்:
உங்கள் ராசி அதிபதி சனிபகவான் உங்கள் ராசியில் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கிறார். சனி வக்ரமடைவதால் சிறு தொழில்கள் வருமானம் தரும். ஒரு சிலருக்கு கூட்டுத் தொழில் செய்ய வாய்ப்பு அமையும். சச மகா யோகம் கைகூடி வரப்போகிறது. முதலாளி என்ற அந்தஸ்தை ஒரு சிலருக்கு கொடுக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் வெளிநாடு செய்திகள் சாதகமாக இருந்து வரும். மாணவர்களுக்கு உயர்கல்வி பயில வாய்ப்பும் வேலை நிமித்தமாக வெளியூர் வெளிநாடு செல்ல சந்தர்ப்பங்கள் அமையும். தாய்மாமன்களால் எதிர்பாராத நன்மை ஏற்படும். உறவினர்களிடம் இதுவரை இருந்த வந்த கருத்து வேறுபாடு நீங்கி நட்பும் நேசமும் உருவாகும். பிள்ளைகளுக்கு திருமணம் நடைபெறும் காலமாகும். விலையுயர்ந்த பொருள்களை கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். வேலை, தொழிலில் யாரையும் நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.
மீனம்:
சனி உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் இருக்கிறார். இது உங்களுக்கு விபரீத ராஜயோக காலமாகும். ஏழரை சனியில் விரைய சனியாக இருக்கும் இந்த கால கட்டத்தில் சனி பகவான் பின்னோக்கிச் செல்வதால் இதுவரை வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு அமையும். கேட்ட இடத்தில் பணம் கடன் கிடைக்கும். கொடுத்துள்ள பணம் பொருள்கள் தவணை முறையில் வந்து சேரும். வேலை விசயமாக வெளியூர் மற்றும் வெளிநாடு செல்ல சந்தர்ப்பங்கள் வந்து சேரும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபகரமாக அமையும். உறவினர்களால் நன்மைகள் கிடைக்கும். வீண் விரைய செலவுகள் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி தினத்தில் விளக்கு ஏற்றி வழிபடலாம்.












Click it and Unblock the Notifications