சனி பெயர்ச்சி பலன் 2023: காணும் இடமெங்கும் கண்ணி வெடி..கவனமாக இருக்க வேண்டியது யார்?
சென்னை: கும்ப ராசியில் பயணம் செய்யப்போகும் சனி பகவான் மிதுன ராசிக்காரர்களுக்கு பாக்ய சனியாக தர்ம சனியாக பயணம் செய்யப்போகிறார். சனிபகவான் தனது மூன்றாம் பார்வையால் மேஷ ராசியையும், ஏழாம் பார்வையால் சிம்ம ராசியையும், பத்தாம் பார்வையால் விருச்சிக ராசியையும் பார்வையிடுகிறார். சனிபகவானின் பார்வையும் பயணமும் மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமாக உள்ளது. கடந்த இரண்டரை ஆண்டு காலமாக கண்ட சனியாக பயணம் செய்த சனிபவான் இனி எட்டாம் வீட்டில் அஷ்டம சனியாக பயணம் செய்யப்போகிறார். இந்த சனி பெயர்ச்சியால் கடக ராசியில் புனர்பூசம் 4,பூசம், ஆயில்யம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
திருக்கணித பஞ்சாங்கப்படி ஜனவரி 17ஆம் தேதி தை 3ஆம் தேதி சனி பெயர்ச்சி நிகழப்போகிறது. சனி பகவான் தனது வீடான மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். சனி பகவான் மகர ராசியில் அவிட்ட நட்சத்திரம் 2ஆம் பாதத்தில் இருந்து அவிட்ட நட்சத்திரம் 3ஆம் பாதத்திற்கு இடம் மாறுகிறார் . 2025ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி வரைக்கும் சனிபகவான் கும்ப ராசியில் பயணம் செய்வார். அவ்வப்போது வக்ர கதியில் பின்னோக்கியும் சென்று வருவார் சனிபகவான்.

கடக ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு அஷ்டமத்து சனி காலம், எட்டாம் வீட்டில் சனிபகவான் சஞ்சாரம் செய்வது சற்று மனவருத்தங்களையும் போராட்டங்களையும் எடுத்த காரியத்தில் தடையும் உண்டு பண்ணுவார். தேவையற்ற விஷயங்களில் தலையிடக் கூடாது. எல்லாவற்றிலும் பொறுமையாக இருந்தால் நன்மையே நடக்கும். எதிலும் தலைமையேற்று நடத்துவதை சற்று தள்ளிப்போட்டு விட்டு, மற்றவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நன்மையை கொடுக்கும்.
அஷ்டமத்து சனி ஆரம்பிக்கிறதே என்று கவலை வேண்டாம் பணவரவு அதிகமாக இருக்கும். உங்களது ராசிக்கு 8ம் இடத்தில் அமரும் சனிபகவான் சில நேரங்களில் விபரீத ராஜயோகத்தை கொடுப்பார். சனிபகவான் மூன்றாவது பார்வையாக பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தை பார்க்கிறார். செய்யும் தொழிலில் எதிர்பார்த்த லாபம் ஓரளவு வந்து சேரும். கூட்டுத்தொழிலில் கூட்டாளிகள் நன்மை அடைவர்.
சனி பகவான் தனது ஏழாவது பார்வையால் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான தன, குடும்ப ஸ்தானத்தை பார்க்கிறார். இதுவரை வராமல் தடையாக இருந்த பணம் தடையின்றி வந்து சேரும். சக ஊழியர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.
கடக ராசியில் புனர்பூசம் நட்சத்திரம் 4ஆம் பாதங்களில் பிறந்தவர்களே..நீங்கள் அவசர முடிவுகளை தள்ளிப்போடவும். அரசாங்க வேலையில் இருப்பவர்கள் வேலையில் கவனம் தேவை. அரசாங்க விஷயங்களில் அதிக எச்சரிக்கை தேவை. எதையும் நிதானமாக கையாளுதல் வேண்டும். வேலையில் திருப்தியற்ற சூழ்நிலைக்காக அவசரப்பட்டு வேலையை விட்டுவிடுதல் கூடாது. பங்கு சந்தை முதலீடுகளில் அதிக கவனம் தேவை. சுய தொழிலில் ஓரளவு லாபம் ஏற்படும். கூட்டுத்தொழிலில் கூட்டாளிகளுக்குள் தேவையற்ற மன வருத்தங்கள் ஏற்பட்டு விலகும். பாஸ்போர்ட் விசா போன்ற விஷயங்களில் தடையேற்பட்டாலும் அதனால் நன்மையேயாகும். பெண்கள் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம்.

கடக ராசி பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி நிறைய படிப்பினைகளை தரப்போகிறது. வாக்கு சாதுர்யம் அதிகரிக்கும் அதனால் வெற்றியும் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும்.
இதுநாள் வரை குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு தடைகள் ஏற்பட்டு பின் சுபகாரியம் நடக்கும். சிலருக்கு குழந்தைகளால் தேவையில்லாத பிரச்சனைகளும் அவர்களால் தேவையற்ற குழப்பங்களும் வரும். டீன் ஏஜ் பிள்ளைகள் தடம்மாற வாய்ப்பு உள்ளது. குழந்தைகளை எச்சரிக்கையாக கண்காணியுங்கள். வெளியூர் வெளிநாடுகளில் வேலை செய்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். செலவில் சிக்கனம் தேவை. பணம் கொடுக்கல் வாங்கலில் அதிக கவனம் தேவை. பத்திரங்கள், நகைகள் இவைகளை பத்திரமாகக் கையாளுதல் வேண்டும். பழைய கடன்களை அடைக்க புதிய கடன்கள் வாங்க வேண்டி வரும். வட்டி பெரிய அளவில் கட்ட வேண்டி வரும். அதே சமயம் இதுவரை கொடுத்து வைத்திருந்த வராத பணங்கள் பொருட்கள் தவணை முறையில் எதிர்பாராத விதமாக வந்து சேரும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.
கடக ராசியில் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களே.. இந்த அஷ்டமத்து சனி உங்களின் துணிச்சலை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். பொறுமையையும் நிதானத்தையும் கையாளுங்கள். எட்டில் செவ்வாயோ சனியோ இருந்தால் சிறு சிறு விபத்துகள் ஏற்படுவது சகஜம்தான். போக்குவரத்து வண்டி வாகனங்களில் அதிக எச்சரிக்கை தேவை. அதிக வேகம் ஆபத்துதான் நிதானம் தேவை. பெண்களே அஷ்டமத்து சனி காலத்தில் எதையும் பொறுமையாக கையாளுங்கள். அடுப்பங்கரையில் கவனமாக இருங்கள். நெருப்பு காயங்கள் ஏற்படும். அம்மாவின் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். லேசான உடல் நலப்பிரச்சினைகளையும் கண்காணித்து மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். பேசும் வார்த்தைகளில் கவனமும் நிதானமும் தேவை. கணவன் மனைவி இடையே பிரச்சினை வரலாம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. மாணவர்கள் படிப்பில் அக்கறையுடன் செயல்பட்டால் மட்டுமே தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெற முடியும்.
சனி பகவானால் ஏற்படும் சங்கடங்கள் தீர சிவ ஆலயம் சென்று நவகிரக சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்கி வர அஷ்டம சனியின் தாக்குதலிருந்து எளிதில் மீண்டு வந்து வெற்றி பெற சந்தர்ப்பம் அமையும். பெற்றோர்களின் உடல்நலத்தில் அதிக கவனம் தேவை. குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளவும். குல தெய்வம் தெரியாதவர்கள் இஷ்ட தெய்வத்தை வணங்கி வர பாதிப்புகள் குறையும். தன்வந்திரி பீடத்தில் அருள்பாலிக்கும் சொர்ண சனீஸ்வரரை வணங்க மன கவலைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications