சனி பெயர்ச்சி பலன் 2023: ஆட்டி வைக்கும் அஷ்டம சனி..விரைய சனி..விபரீத ராஜயோகம் அள்ளித்தரும்
மதுரை: சனி பகவான் எட்டாம் வீட்டில் அமரும் இடம் அஷ்டம சனி காலம். ஏழரை ஆண்டுகாலம் ஏழரை சனியால் படும் கஷ்டத்தை இரண்டரை ஆண்டு காலம் அஷ்டம சனி காலத்தில் அனுபவித்து விடுவார்கள். சனி பகவான் தற்போது கும்ப ராசியில் பயணம் செய்கிறார். கடக ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி ஆட்டி வைக்கும். ஏழரை சனியால் மீனத்திற்கு விரைய செலவுகள் வரும் அதே நேரத்தில் ஆட்சி பெற்று பயணம் செய்யும் சனி பகவான் விபரீத ராஜயோகத்தையும் கொடுக்கப்போகிறார். சனி பகவானால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
அஷ்டமத்து சனி காலம் என்று அச்சமடைய வேண்டாம். காரணம் கடக ராசிக்காரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி பல அற்புதங்களை நிகழ்த்தப்போகிறது. கண்டச்சனி கடந்த இரண்டரை ஆண்டுகளாக குடும்பத்தில் கணவன் மனைவி இடையே பிரச்சினையை ஏற்படுத்தியது. சனி பகவான் அஷ்டமாதிபதி. எட்டுக்கு உடையவன் எட்டாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வது விபரீத ராஜயோகத்தை தரும்.

உங்க குடும்ப ஸ்தானத்தை சனி பார்க்கிறார் எனவே குடும்பத்தில் கவனம் தேவை. அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பணம் கடன் கேட்டு வந்தால் ஜாக்கிரதையாக இருங்கள் அவசரப்பட்டு கொடுத்து விட்டு அவதிப்பட வேண்டாம்.
புதிய தொழில் தொடங்க இது ஏற்ற காலம் அல்ல. பெரிய அளவில் பணமுதலீடுகளை செய்ய வேண்டாம்.
வேலை செய்யும் இடத்தில் சிக்கல்களை சந்திக்க நேரிடும். எனவே வேலைகளை விடும் முன்பு ஒருமுறை இருமுறை யோசிக்கவும்.
புதிய தொழில் எதுவும் தொடங்கவேண்டாம். பேராசை படவேண்டாம். பங்குச்சந்தை முதலீடு தேவையே இல்லை. இருக்கிறதை வைத்துக்கொண்டு சிறப்புடன் வாழுங்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. சனிக்கிழமையன்று ஏழைகள் முதியவர்களுக்கு அன்னதானம் கொடுங்க. புதன்கிழமை பெருமாள் ஆஞ்சநேயரை வணங்க நன்மைகள் நடைபெறும்.
மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியில் விரைய சனி காலமாக உள்ளது. 12ஆம் வீட்டிற்கு அதிபதி சனி. நிறைய செலவுகளை கொடுப்பார் எனவே சுப விரைய செலவுகளாக மாற்றுங்கள். பணத்தை பத்திரப்படுத்தாமல் சொத்துக்கள், நகைகளாக வாங்குங்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. சனிபகவான் உங்களுக்கு 12ஆம் வீட்டு அதிபதி, 12ஆம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால் விபரீத ராஜயோக அமைப்பை தருவார். ஜாதகத்தில் சனி யோகமாக இருந்து தசாபுத்தியும் நன்றாக இருந்தால் சனி அள்ளிக்கொடுப்பார்.

சனி பகவான் உங்களுடைய ராசிக்கு 12ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். அங்கிருந்து உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடு ஆறாம் வீடு, ஒன்பதாம் வீடுகளைப் பார்க்கிறார் சனிபகவான். சனியின் சஞ்சாரம் பார்வையால் பத்திரமாக இருங்கள் நோய்களை வெளிப்படுத்துவார். மருத்துவ செலவுகள் வரும் காரணம் நோய் ஸ்தானத்தை சனி பார்வையிடுவதால் நோய்களை வெளிப்படுத்துவார். கடன்கள் அடைபடும். வம்பு வழக்குகள் தீரும்
சனிபகவான் விபரீத ராஜ யோகத்தை தருவதால் மீன ராசிக்காரர்களுக்கு வருமானத்தை அதிகம் தருவார் காரணம் உங்க ராசிக்கு இரண்டாம் வீடான தன ஸ்தானத்தை பார்க்கிறார். சம்பாதித்தாலும் அதை சேமித்து வைக்க முடியாது எல்லாமே விரையமாகத்தான் போகும் பணமாக வைத்திருப்பதை விட சொத்துக்களாக மாற்றி சேமித்து வையுங்கள். எந்த அளவிற்கு பணத்தை சேமிக்க முடியுமோ அந்த அளவிற்கு பணத்தை சொத்துக்களாக மாற்றி பத்திரப்படுத்துங்கள். இருக்கிற இடத்தை விட்டு நல்ல இடத்திற்கு மாறுவீர்கள்.












Click it and Unblock the Notifications