சனி பெயர்ச்சி பலன் 2023: அள்ளித்தரப்போகும் சனி பகவான்.. 2024ல் சச மகா யோகம் பெறும் ராசிக்காரர்கள்
சென்னை: வாழ்க்கையில் கஷ்டங்களை மட்டுமே சந்தித்த சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் புது மலர்ச்சியை தரப்போகிறார் சனிபகவான்.
2024ஆம் ஆண்டில் சில ராசிக்காரர்களை வாழ்க்கையின் உச்சத்திற்கு கொண்டு செல்லப்போகிறார். கும்ப ராசியில் பயணம் செய்யும் சனிபகவானால் சச மகா யோகம் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்? யாருக்கு ராஜயோகம் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

சனி பெயர்ச்சி: சனிபகவான் ஒருவர் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப பலா பலன்களை கொடுப்பவர் சனி பகவான். சனிபகவான் மனது வைத்தால் போதும் குப்பையில் கிடந்தவர் கோபுரத்திற்கு போவார்கள். மன்னராக இருப்பவர்கள் முடி துறந்து நாடு இழந்து நளன் போல அலைய வேண்டியதுதான்.
சனி பகவான் கும்ப ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்தாலும் சில காலம் அதிசாரமாக மீன ராசிக்கும் வக்ர மடைந்து கும்ப ராசியிலும் பயணம் செய்வார். சனி பகவான் சஞ்சாரம் மற்றும் பார்வையால் உச்சத்தை தொடப்போகும் இந்த ராசிக்காரர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.
மேஷம்: செவ்வாய் பகவானின் ஆதிக்கம் கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு சனி பகவான் சந்தோஷத்தையும் லாபத்தையும் தரப்போகிறார். சனி பகவானின் பார்வை மேஷ ராசியின் மீது விழுகிறது. சனிபகவான் ஏழாம் பார்வையாக பூர்வ புண்ணிய ஸ்தானத்தை ஸ்தானத்தை பார்வையிடுவது சிறப்பு. கோடிகளில் புரளப்போகும் யோகம் அமையப் போகிறது. பண மழை பொழியப்போகிறது. 2024ஆம் ஆண்டு அசுவினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு அற்புதமான ஆண்டாக அமைகிறது.
ரிஷபம்: சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்களே, ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்வதால் சச மகா யோகம் உண்டாகப்போகிறது. இது மகத்தான ராஜயோக அமைப்பு உண்டாகிறது. செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். உங்களுடைய ஜாதகத்தில் தசாபுத்தி அற்புதமாக இருந்தால் ராஜயோக பலனை அனுபவிப்பீர்கள்.
கடகம்: சனி பகவான் அஷ்டம சனியாக ஆட்சி பெற்று பயணம் செய்கிறார் என்றாலும் பயப்பட வேண்டாம். அவர் எட்டுக்கு உடையவர் எட்டில் மறைந்து விபரீத ராஜயோகத்தை தருகிறார். 2024ஆம் ஆண்டில் திடீர் பணவரவு, பதவியில் இழந்து தவிப்பவர்களுக்கு புதிய பதவிகள் தேடி வரும்.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப் போகிறது. சனி பகவான் சச மகா யோகத்தை கொடுப்பதால் தொலைந்தவை எல்லாம் திரும்ப வரும். கடனில் தவித்தவர்களுக்கு எதிர்பாராத அளவிற்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். பணம் குவியப்போகிறது. அற்புதமான ராஜயோக அமைப்பாக உள்ளது. வெளி நாடுகளில் வியாபாரம் செய்பவர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கப்போகிறது.
கன்னி: சனி பகவான் ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்று பயணம் செய்வதால் விபரீத ராஜயோகம் கிடைக்கப்போகிறது. சனிபகவான் ஆறுக்கு உடையவன். சனிபகவான் 3,6,11ஆம் வீடுகளில் அமரும் போது ஒருவரை உச்சத்திற்கு கொண்டு செல்வார். மகத்தான ராஜயோகத்தை தருவார். பதவி இழப்பு, உத்தியோகத்தில் புரமோசன் இல்லாமல் இருப்பது, பணம் கைக்கு எட்டி வாய்க்கு எட்டாமல் இருந்து வந்தீர்கள். இந்த சனி பெயர்ச்சி அற்புதமான பலன்களை கொடுக்கப் போகிறார். பதவி யோகத்தை தரப்போகிறார். பணமழை பொழியப்போகிறது. இழந்த சொத்துக்களை மீட்பீர்கள்.
விருச்சிகம்: சசி பகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் அர்த்தாஷ்டம சனியாக அமர்ந்தாலும் உங்களுக்கு சச மகா யோகத்தை தரப்போகிறார். திடீர் பண வருமானம் வரும் சொத்து சேர்க்கை ஏற்படும். சொந்த பந்தங்களிடம் இருந்த பிரச்சினைகள் நீங்கப்போகிறது. நோய்கள் நீங்கும். ஆரோக்கியம் அதிகரிக்கும்.
கும்பம்: சனி பகவான் ஜென்ம ராசியில் அமர்ந்துள்ளதால் சச மகா யோகம் கிடைக்கப்போகிறது. பதவி யோகம் தேடி வரும் தலைமை பதவி கிடைக்கும். இனி சனியின் அருளால் சங்கடங்கள் நீங்கும். நன்மைகள் நடைபெறும். மகத்தான யோக நிலைகளை சனிபகவான் தரப்போகிறார். செல்வாக்கும் சொல்வாக்கும் கிடைக்கப் போகிறது. இந்த புத்தாண்டு உங்களுக்காக ஆண்டாக பிறக்கப் போகிறது என்பதில் சந்தேகமில்லை.
மீனம்: சனிபகவான் 12ஆம் வீட்டில் மறைந்து விபரீத ராஜயோகத்தை தரப்போகிறார். அதிகார பதவி யோகம் கிடைக்கப்போகிறது. சனி பகவான் ராஜயோகத்தை தரப்போகிறார். இது அற்புதமான ஆண்டாக அமைந்துள்ளது. தொழிலில் லாபத்தை தரும். 2024ஆம் ஆண்டு உங்களுக்கு சங்கடங்கள் நீங்கி சந்தோஷத்தை தரப்போகிறது. தொட்டது துலங்கும் நினைத்தது நிறைவேறும் சொத்து சுகம் சேரும் காலம் வந்து விட்டது.












Click it and Unblock the Notifications