சனி பெயர்ச்சி பலன் 2023: அசரடிக்கும் அர்த்தாஷ்டம சனி.. சாதகமா? பாதகமா? பரிகாரம் என்ன?
சென்னை: கும்ப ராசியில் சனி பகவான் ஆட்சி பெற்று அமர்ந்து உள்ள நிலையில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி காலமாகும். திருநள்ளாறு சனிபகவான் ஆலயத்தில் டிசம்பர் மாதம் சனி பெயர்ச்சி நிகழ உள்ள நிலையில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனியால் சாதகமா? பாதகமா? பரிகாரம் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
விருச்சிகம்: சனிபகவான் உங்கள் ராசிக்கு மூன்று மற்றும் நான்காம் வீட்டிற்கு அதிபதியான சனிபகவான் 4ஆம் வீட்டில் ஆட்சி பெற்று பயணம் செய்கிறார். சசமகா யோகம் கைகூடி வந்துள்ளது. சஞ்சரிக்கும் காலத்தில் இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு வேலைக்கான வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். எதிர்பார்த்த வேலை கிடைப்பதில் தாமதம் இருந்தாலும் முதலில் கிடைத்த வேலையை ஏற்று கொண்டு திருப்தியற்ற வேலையாக இருந்தாலும் திருப்தியாக செயலாற்ற வேண்டும்.

சனி பகவான் பார்வை: நான்காம் வீடு என்பது சுக ஸ்தானம், இந்த இடத்தில் அமரும் சனிபகவான் உங்கள் ராசியை பத்தாம் பார்வையாக பார்க்கிறார். மூன்றாம் பார்வையாக உங்கள் ராசிக்கு ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தை பார்க்கிறார், ஏழாம் பார்வையால் உங்களின் தொழில் ஸ்தானத்தை பார்வையிடுகிறார். 4ஆம் வீட்டில் சனி சஞ்சாரம் என்பது தொழிலில் தகராறு மற்றும் தொழிலில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்குவார். அதே சமயம் வேலையில் அதிக கவனம் செலுத்துதல் வேண்டும்.
வேலையில் கவனம்: உழைப்புக்கு அஞ்சாமல் வேலையில் சளைப்பில்லாமல் விரும்பி செய்யுங்க. உங்க வேலையை காதலித்தால்தான் அந்த வேலையில் நீங்கள் நீண்ட நாட்கள் நிலைத்து இருக்க முடியும். இல்லையெனில் வேலையில் அலுப்பும் சலிப்பும் ஏற்பட்டு வேலையை விட வேண்டியிருக்கும். அவசரப்பட்டு வேலயை விடுவதோ அல்லது வேறு வேலைக்கு மாறும் பொழுது வேலை உத்தரவாதம் இருந்தால் மட்டுமே மாற வேண்டும். வேலை காரணமாக சிலருக்கு இடமாற்றம் கிடைக்கும். வெளியூர், வெளிநாடு செல்லவேண்டியிருக்கும். பதவி உயர்வு நீண்ட இழுபறிக்குப் பின்னர் கிடைக்கும்.
சமூகத்தில் மரியாதை: சமூகத்தில் இதுவரை இருந்த வந்த நிலை மாறி சற்று மதிப்பும் மரியாதையும் கூடும். இதுவரை இருந்து வந்த தேவையற்ற அலைச்சல்கள் குறைந்து ஒரு இடத்தில் நிலையாக இருக்க வாய்ப்பு அமையும். இடம் வாங்குவதற்கு வீடு வாங்குவதற்கு வண்டி வாகனம் வாங்குவதற்கு வாய்ப்புகள் தானாக வந்து சேரும்.
கடன் பிரச்சினை: ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தை சனி பார்வையிடுவதால் இனம் தெரியாத நோய்கள் வந்து போகும் ஏதோ நோய் இருக்குமோ என்று நினைத்து அவதிப்பட நேரிடும். நேரத்திற்கு சாப்பிடுங்கள். சரியான, சத்தான உணவுகளை சாப்பிடுவதுதான் ஆரோக்கியத்திற்கு நல்லது. அதிக கடன் வாங்கி அகலக்கால் வைக்காதீர்கள். கடன்கள் அதிகரித்து கொண்டே போகும். பங்குச்சந்தை முதலீடுகள் முதலில் லாபம் கொடுத்தாலும் பின்னர் நஷ்டத்தில் விட்டு விடும்.
சனி, குரு பார்வை: இன்னும் 6 மாதத்திற்கு புதிய முயற்சிகளை செய்ய வேண்டாம் வெற்றி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். சனிபகவானின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுவதால் உற்சாகமாக இருங்கள், வேலைகளை ஒத்திப்போடாமல் உடனே செய்து முடியுங்கள். ஏப்ரல் மாதம் முதல் குரு பகவான் பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைக்கும் போது தொழில் வியாபாரத்தில் லாபமும் வருமானமும் அதிகரிக்கும்.
உழைத்தால் வெற்றி: மாணவர்கள் உழைத்தால் மட்டுமே அதிக மதிப்பெண் பெற முடியும். எப்போதும் உற்சாகமாக, சுறுசுறுப்போடு இருந்தால் மட்டுமே நினைத்த மதிப்பெண்களை பெற முடியும், விரும்பிய கல்லூரிகளில் இடம் கிடைக்கும். விளையாட்டுகளில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். நிறைய ஓய்வு எடுங்க. வயிறு பிரச்சினைகள் வராமல் இருக்க நேரத்திற்கு சாப்பிடுங்க.
சனிபகவானை சரணடையுங்கள்: அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். அர்த்தாஷ்டம சனியினால் ஏற்படும் பாதிப்புகள் குறைய காலபைரவரை செவ்வாய்கிழமைகளில் செவ்வரளி மாலை சாற்றி வணங்குங்கள். சனிக்கிழமைகளில் எள் எண்ணெய் தீபம் ஏற்றுங்கள். வேலூர் வாலாஜாபேட்டை அருகே தன்வந்திரி பீடத்தில் அருள்பாலிக்கும் பாதாள சொர்ண சனீஸ்வரரை வணங்குங்கள். தீமைகள் குறைந்து நன்மைகள் அதிகம் நடைபெறும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications