Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனி பெயர்ச்சி பலன்: கேட்காத வார்த்தைகளை கேட்க வைக்கும் ஏழரை சனி.. 2024ல் டோண்ட் வொர்ரி, பி ஹேப்பி

Subscribe to Oneindia Tamil

மதுரை: ஏழரை சனியால் பாதிக்கப்பட்டவர்களின் பாடு பெரும்பாடாக உள்ளது. கேட்கக்கூடாத வார்த்தைகளை எல்லாம் கேட்க வைத்து விடுவார். சொந்த பந்தங்களே கூட அவமானப்படுத்துவர்கள். சனிபகவான் நீதிமான் தவறு செய்தவர்களைத்தான் தண்டிப்பார். 2024ஆம் ஆண்டில் ஏழரை சனி காலத்தை மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்கள் எப்படி சந்திக்கப்போகிறார்கள் என்று பார்க்கலாம்.

சனி பார்வை: கும்பம் ராசியில் உள்ள சனிபகவானின் பார்வை 3,7,10ஆம் இடங்களின் மீது விழுகிறது. கும்பம் ராசியில் உள்ள சனி பகவான் மூன்றாம் பார்வையாக மேஷம் ராசியையும், ஏழாம் பார்வையாக சிம்மம் ராசியையும், 10ஆம் பார்வையாக விருச்சிகம் ராசியையும் பார்வையிடுகிறார். ஏழரை சனியின் பிடியில் இருக்கும் ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் பாதிப்புகள் வரப்போகிறது என்று மீம்ஸ் ஆக பதிவிட்டுள்ளனர் ஜோதிடர்கள்.

Sani peyarchi Palan: 2024 Elarai Sani Prediction for Makaram,Kumbam and Meenam

மகரம்: வருமானத்திற்கு வழியின்றி தவித்து வந்தீர்கள். 2024ஆம் ஆண்டு முதல் பணவருமானத்திற்கு வழியை ஏற்படுத்துவார் சனி பகவான். நஷ்டங்களை சந்தித்த நீங்கள் இனி லாபத்தை சந்திப்பீர்கள். ஏழரை சனி முடியவில்லை இன்னும் இரண்டரை ஆண்டு காலம் இருக்கிறது என்றாலும் ஜென்மத்தில் பட்ட சிரமங்களை இனி படப்போவதில்லை. இரண்டரை வருஷம் நிம்மதி தருவார். இருளில் மூழ்கியிருந்த உங்களுக்கு வெளிச்சம் தென்படும் காலம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வண்டி வாகனத்தில் செல்லும் போவது கவனம் தேவை. கடல் கடந்து செல்பவர்களுக்கு முன்னேற்றம் வரும். கடகத்தை சனி பார்ப்பதால் வேலையில் இடம் மாற்றம் ஏற்படும். விசா கிடைக்கும். இன்னும் இரண்டரை ஆண்டுகளில் சனி உங்களை வளர்ச்சிப்பாதைக்கு அழைத்துச் செல்வார். பொறுமையாக இருந்தால் ஏழரை சனி காலத்தை எளிதாக கடந்து விடலாம்.

Sani peyarchi Palan: 2024 Elarai Sani Prediction for Makaram,Kumbam and Meenam

கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு இரண்டரை ஆண்டு காலம் ஜென்மசனி காலமாகும். பண விசயங்களில் கவனம் தேவை. பெரிய அளவில் முன்னேற்றம் கிடைக்கும். கடல் கடந்து செல்லும் எண்ணம் வரும். தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். அரசு தொடர்பான ஆதரவு கிடைக்கும்.
அனுபவங்களினால் பக்குவப்படுத்துவார். பயணங்களில் எச்சரிக்கை தேவை. உழைப்பால் உயர்ந்த நீங்கள் இந்த சனிப்பெயர்ச்சியை எளிதாக கடந்து விடுவீர்கள். கடினமாக உழைப்பீர்கள், பொறுப்பு அதிகரிக்கும். உழைப்புக்கு முக்கியத்துவம் தருவீர்கள். மாற்றங்கள் முன்னேற்றங்கள் ஏற்றத்தை தரும். பிசினஸ் செய்ய நினைத்தவர்களுக்கு வாய்ப்பை உருவாக்கி தரும். நிறைய உதவி கிடைக்கும் வளர்ச்சிக்கு உதவும் நன்மைகள் கிடைக்கும்.

Sani peyarchi Palan: 2024 Elarai Sani Prediction for Makaram,Kumbam and Meenam

மீனம்: உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானமான 12ஆம் வீட்டில் சனி பகவான் பயணம் செய்கிறார். விரைய ஸ்தான அதிபதி சனி விபரீத ராஜ யோகத்தை தரப்போகிறார். சனி தசை நடப்பவர்களுக்கு இது பூரண பலனைத் தரும். சில விசயங்களில் கவனம் தேவை. பண விரையம் வரும் சம்பாதித்த பணத்தை செலவு பண்ணும் காலம். சுப விரையத்திற்கு செலவு பண்ணுங்க. தொழில் வியாபாரத்தில் முதலீடு செய்யும் போது கவனம் தேவை. சனிபகவான் மருத்துவ செலவுகளை தருவார். குடும்ப உறுப்பினர்களுக்காக அதிக செலவு செய்வீர்கள். வெளியிடங்களில் வீணான வாக்குவாதங்கள், வார்த்தைகளை விட வேண்டாம். பொறுமை தேவை. நிதானம் அவசியம் இல்லாவிட்டால் கேட்பாத பேச்சை எல்லாம் கேட்க வேண்டியிருக்கும் அவமானத்தை சந்திக்க வேண்டியிருக்கும். சனிக்கிழமை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி விளக்கேற்றுங்கள் நல்லாதே நடக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+