Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனி பெயர்ச்சி பலன் 2024: கும்ப ராசியில் சனி வக்ரம்.. 6 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அதிரடி மாற்றம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: கும்ப ராசியில் பயணம் செய்யும் சனிபகவான் ஜூலை முதல் வக்ரகதியில் பயணம் செய்யப்போகிறார். சனி வக்கிரமடைவதால் சனிப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் பாதிப்பாக இருந்ததோ அவர்களுக்கு சில நன்மைகளையும் யாருக்கெல்லாம் சாதகமாக இருந்ததோ அவர்களுக்கு சில பாதிப்பு உண்டாக வாய்ப்புகள் அதிகம். ஜூலை முதல் நவம்பர் வரை யாருடைய வாழ்க்கையில் அதிரடி மாற்றம் ஏற்படப்போகிறது என்று பார்க்கலாம்.

சனி வக்ரமடைவது ஏன்: இரண்டரை ஆண்டுகாலம் ஒரு ராசியில் தங்கும் சனி ஆண்டுக்கு ஒருமுறை வக்ரமடைகிறார். சனிக்கு ஐந்தாம் வீட்டில் சூரியன் சஞ்சரிக்கும் போது வக்ரம் பெற்று ஒன்பதாம் வீட்டிற்கு சூரியன் வரும் போது வக்ர நிவர்த்தியடைவார். ஜூன் 29ஆம் தேதி அதாவது ஆனி 15ஆம் தேதி சனிபகவான் வக்ர காலம் ஆரம்பமாகிறது. ஐப்பசி 29ஆம் தேதி அதாவது நவம்பர் 15ஆம் தேதி வக்ர காலம் முடிவுக்கு வரும். சனி பெயர்ச்சியால் பாதிப்பு ஏற்பட்ட ராசியினருக்கு வக்ர காலத்தில் தொழிலில் இருந்து வந்த பாதிப்புகள் குறையும். பணக்கஷ்டம் தீரும். கடுமையான நெருக்கடியில் இருந்து வந்தவர்களுக்கு ஒரு நிம்மதி கிடைக்கும்.

மேஷம்: லாப சனியால் உங்களுக்கு ஏராளமான நன்மைகள் கிடைத்து வருகிறது. தொட்டதெல்லாம் துலங்கும். சிலருக்கு வேலை மாற்றம் ஏற்படும். வீடு மாற வாய்ப்பு உள்ளது. புதிய வண்டி வாகனம் வாங்குவீர்கள். சுய தொழில் செய்பவர்கள் பணத்தை அதிகம் முதலீடு செய்ய வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை தேவை. வேலை தொழிலில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும் மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் அமையும் வகையில் பள்ளி, கல்லூரிகளில் இடம் கிடைக்கும்.

ரிஷபம்: சனி பகவான் உங்க ராசிக்கு பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். வக்ர மடைந்துள்ள இந்த கால கட்டத்தில் தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். சோம்பேறித்தனத்தை விட்டு ஒழியுங்கள். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. சிறு சிறு விபத்துக்கள் எற்படலாம். உயர்கல்வி பயில்பவர்களுக்கு சிறு தடைகள் ஏற்பட்டு பின்னர் நிவர்த்தியாகும். விலை உயர்ந்த பொருட்களை பத்திரப்படுத்துங்கள். உடன் பிறந்தவர்களால் மன வருத்தங்கள் எற்படும். தடைகள் நிவர்த்தியாகும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

Sani Peyarchi Palan 2024: Saturn Retrograde in Kumbam Rasi Effects and Remedies

மிதுனம்: சனிபகவானால் உங்களுக்கு எந்த பாதிப்பு இல்லை நன்மையே அதிகம் நடக்கிறது. புதிய வேலை கிடைக்கும். சுபகாரியங்களால் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணம் நடைபெறும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். கோவில்களுக்கு ஆன்மீக பயணம் செல்வீர்கள். குச்சனூர் சென்று சனிபகவானை தரிசனம் செய்து வாருங்கள் நன்மைகள் அதிகம் நடைபெறும்.

கடகம்: அஷ்டமத்து சனியால் உடல் நலத்தில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் சனி வக்ரமடையும் காலத்தில் வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். புதிய செயல்களை செய்யும் போது எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யுங்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். தேவையில்லாத ஆடம்பர செலவுகளை தவிர்த்து விடுங்கள். வேலைப்பளு அதிகரிக்கும். கோவில்களுக்கு சென்று இஷ்ட தெய்வங்களை வழிபடுவதன் மூலம் கஷ்டங்கள் காணாமல் போகும்.

சிம்மம்: உடம்பிலும் மனதிலும் உற்சாகம் அதிகரிக்கும் சுறுசுறுப்பாக வேலை செய்வீர்கள். காதல் கைகூடும். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். வேலை மாற்றம் ஏற்படும் யோசித்து செயல்படுங்க. இருக்கிறதை விட்டுட்டு பறக்கிறதுக்கு ஆசைப்படாதீங்க. பொன், பொருள், ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். உல்லாச பயணம் செல்வீர்கள். சுப விரையம் ஏற்படும். பிள்ளை இல்லையே என்று கவலைப்பட்டவர்களின் மனக்கவலை தீரும். ஆன்மீக பயணம் மனதிற்கு அமைதியை தரும்.

கன்னி: ருண ரோக சத்ரு சனி வக்ரமாகும் கால கட்டத்தில் சொந்த வீடு, வண்டி வாகனங்கள் வாங்கலாம். சக ஊழியர்களால் நன்மைகள் அதிகம் நடைபெறும். வேலை செய்யும் இடத்தில் சில வில்லங்கம் வரும் கவனம் தேவை. படிப்புக்காக குழந்தைகளை விட்டு பிரியும் காலம் இது. குழந்தைகளால் சுப விரையம் ஏற்படும். சனிபகவானை சனிக்கிழமைகளில் எள் தீபம் ஏற்றி வணங்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+