சனி பெயர்ச்சி பலன்: பஞ்சமகா புருஷ யோகம்.. சச யோகத்தால் தலையெழுத்து மாறும் ராசிக்காரர்கள்
சென்னை: சச யோகம் என்பது பஞ்சமகா புருஷ யோகத்தில் முக்கியமானது. சனிபகவான் சஞ்சாரத்தினால் இந்த சச யோகம் அமைகிறது. கும்ப ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்யும் சனி பகவான் சில ராசிக்காரர்களுக்கு சச யோகத்தை தருகிறார். இந்த யோகம் பெறும் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். அற்புதமான பலன்களைத் தரப்போகும் சச யோகத்தை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் என்று பார்க்கலாம்.
சசயோகம் அமைந்தால் அரசனுக்கு சமமான வாழ்வு சமுதாய அந்தஸ்து உண்டாகும் என பண்டைய ஜோதிட நூல்கள் கூறுகின்றன. ஒருவருடைய ஜனன கால ஜாதகத்தில் சனி பகவான் துலாம், மகரம் மற்றும் கும்பம் ஆகிய வீடுகளில் பயணம் செய்யும் போது அந்த வீடுகள் லக்னம் அல்லது ராசி ஆகியவற்றுக்கு 1,4,7,10 என்ற கேந்திர ஸ்தானங்களாக அமைந்திருந்தால் இந்த யோகம் ஏற்படுகிறது.

சச யோகம் என்றால் என்ன: சச யோகம் பெறுவது அரிதான யோகம். சனிபகவான் 12 ராசிகளை கடக்க 30 ஆண்டுகாலம் ஆகிறது. இதில் துலாம், மகரம், கும்பம் ஆகிய மூன்று ராசிகளில் சஞ்சரிக்கும் காலத்தில் பிறந்தால் மட்டுமே கிடைக்கும். சசயோகத்தில் பிறந்தவர்களுக்கு ஆயுளை தீர்க்கமாக கொடுத்து விடுவார் சனி பகவான். இந்த யோகம் மிக அரிது என்பதால் இது அரிய பஞ்ச மகா புருஷ யோகம் ஆகும். கும்ப ராசியில் சஞ்சரிக்கப்போகும் சனிபகவானால் 2023 முதல் 2025 வரை பிறக்கும் குழந்தைகள் பலருக்கு பஞ்சமாக புருஷ யோகமான சசமகாயோகம் அமையப்போகிறது.
யாருக்கு சச யோகம்:கும்ப ராசியில் பயணம் செய்யும் சனிபகவானால் மிதுனம், சிம்மம், விருச்சிகம், கும்ப ராசி லக்னகாரர்களுக்கு சசயோகத்தை தரப்போகிறது. ஆயுள் காரகனான சனியால் சச யோகம் உண்டாவதால் ஜாதகர் நீண்ட ஆயுள் நிலையான செல்வம், செல்வாக்கு அடைவார். அது மட்டுமின்றி சமுதாயத்தில் கௌரவம் மிக்க பதவிகளை அடையும் உண்டாகும். இந்த யோகம் முழுமையாக செயல்பட வேண்டும் என்றால் சனி கேந்திரத்தில் தனித்து சுபர் அல்லது அசுபர் பார்வை சேர்க்கை பெறாமல் இருக்க வேண்டும்.
சனி பகவான் தரும் யோகம்: சனி பகவான் ஒருவரின் ஜாதகத்தில் மேஷ லக்கினத்திற்கு 7,10 ல் இருந்தால், ரிஷபத்திற்கு 10ல் இருந்தால்,கடகத்திற்கு 4,7 ல் இருந்தால், சிம்மத்திற்கு 7ல் இருந்தால் துலாத்திற்கு லக்கினம் மற்றும் 4ல் இருந்தால் விருச்சிகத்திற்கு 4ல் இருந்தால் கும்பத்திற்கு லக்கினத்தில் இருந்தால் அது சச யோகம். மகரத்திற்கு ராசிநாதன் 10ஆம் வீடான துலாம் ராசியில் இருந்தால் அது சச யோகம். மகரத்திற்கு 10ல் தனித்து எவர் சேர்க்கை பார்வை பெறாமல் உச்சம் பெறும் சனி முழுமையான சச யோகம் தர போகிறது என்று உணர்ந்து கொள்ள வேண்டும்.
மிதுனம்: சனிபகவான் கும்ப ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்வதால் மிதுன ராசி லக்னத்திற்கு பத்தாவது இடமாகும். கேந்திரத்தில் சனி பகவான் ஆட்சி பெற்று அமர்வது அற்புதமான யோகமாகும். சுறுசுறுப்பாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். நல்ல வேலை கிடைக்கும். கோச்சார ரீதியாக சனி பகவான் நல்ல யோகத்தை தருவார். ஆளுமை தன்மையுடன் இருப்பார்கள். கடல் கடந்து செல்லும் யோகம் வரும். படிப்பு வேலைக்காக வெளிநாடு செல்வார்கள். பெண்களுக்கு புதிய வேலை கிடைக்கும். தொழில் தொடங்குவார்கள். ரிஷப ராசி லக்னத்தில் பிறக்கும் பிள்ளைகளுக்கு சசயோகமாக அமையப்போகிறது.
சிம்ம ராசி சிம்ம லக்னம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு சனி யோக காரகர் இல்லாவிட்டாலும் கண்டச்சனியாக இருப்பதால் இந்த காலத்தில் சனிப்பெயர்ச்சி சசமகா யோகத்தை தரப்போகிறது. நிர்வாகத்திறன், தலைமை பதவியை ஏற்க வைப்பார். கோச்சாரரீதியாக சனி வருபவர்களுக்கும் உயர்பதவிகள் தேடி வரும். அரசியல்வாதிகளுக்கு தலைமைப் பதவி, அரசருக்கு ஒப்பான பதவியையும் யோகத்தையும் தேடித் தரும். சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு சிம்ம ராசி சிம்ம லக்னத்தில் பிறக்கப்போகும் குழந்தைகளுக்கு அற்புதமான தருணமாக அமையும்.
விருச்சிக ராசி விருச்சிக லக்னம்: சனிபகவான் விருச்சிக ராசி லக்னத்திற்கு நான்காம் வீட்டில் சனி பயணம் செய்வதால் சசமகாயோக அமைப்பாகும். சனிபகவானின் பத்தாவது பார்வை விருச்சிக ராசியின் மீது விழுகிறது. அர்த்தாஷ்டம சனி என்றாலும் அதிர்ஷ்டமே. நினைத்தது நிறைவேறும். இதுநாள்வரை வம்பு வழக்குகள் என்று இருந்தவர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி அற்புதமான பல நல்ல பலன்களைத் தரப்போகிறார். எதிரிகள், கடன்கள், நோய்கள் பிரச்சினைகள் தீரும்.
சனி தரும் கூடுதல் பலம்: அரசியல் அரசாங்க துறையில் நல்ல பதவியில் அமரும் அளவிற்கு வளர்ச்சி அடைவார்கள். வேலை, தொழில் அற்புதமாக அமையும். ஆட்சி பெற்ற சனியால் பலம் கூடும். வேலை, தொழிலில் முன்னேற்றமும் மாற்றங்களும் ஏற்படும். இந்த காலகட்டத்தில் பிறக்கப்போகும் குழந்தைகளுக்கு யோக ஜாதகமாக அமையும். மாணவர்கள் பலர் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் மாணவராக தேர்ச்சியடையும் யோகம் வரும்.
கும்ப ராசி, கும்ப லக்னம்: கும்ப ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்யும் சனிபகவான். சச யோகத்தை கொடுக்கிறார். கும்பத்தில் ஆட்சி மற்றும் மூலத் திரிகோண நிலை அடைந்து சச யோக பலன்களைத் தருவார். கடும் உழைப்பினால் வாழ்வில் உயர்ந்த இடத்தை அடைவார்கள். நிலையான சொத்துக்கள், நிலம், வாகனம், வீடு ஆகியவற்றை குடும்பத்திற்காக சேர்த்து வைப்பார்கள். அனைத்தையும் எதிர்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். 2025ஆம் ஆண்டு வரை சச மகா யோகத்தை அனுபவிப்பதால் ஜென்ம சனி என்றாலும் கோடீஸ்வர யோகம் தேடி வரும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications