சனிப்பெயர்ச்சி 2020-2023: வீடு, வாகனம் வெளிநாடு செல்லும் யோகம் பெறும் கடகம், துலாம்
சென்னை: விகாரி வருடம் தை மாதம் 10ஆம் தேதி ஜனவரி 24, 2020ஆம் ஆண்டு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு நகர்கிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் தனுசு மகரம் கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும். விருச்சிக ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து விடுபடுகிறார்கள். இந்த சனிப்பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கும் சில பாதிப்புகள் ஏற்படும். முக்கியமாக கண்டச்சனி காலமான கடகத்திற்கும் அர்த்தாஷ்டம காலமான துலாம் ராசிக்கும் இந்த சனிப்பெயர்ச்சி காலம் எப்படி என்று பார்க்கலாம்.
நவ கிரகங்களும் தினசரியும் மெதுவாக நகர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. தனுசு ராசியில் இருந்து மகரத்திற்கு போகிறார். மகரம் ராசிக்கு சனி சொந்த வீடு கால சக்கரத்திற்கு பத்தாம் வீட்டில் சனி ஆட்சி பெற்று அமர்கிறார். மிதுனம் அஷ்டம சனி, கடகம் கண்டச்சனி, துலாம் அர்தாஷ்டம சனி, தனுசு பாத சனி, கும்பம் விரைய சனி, மகரம் ஜென்ம சனி என இந்த சனி பெயர்ச்சி 6 ஆறு ராசிக்கு ஓரளவு பாதிப்பை தரப்போகிறது. அதே நேரத்தில் சில நன்மைகளையும் தரப்போகிறார் சனிபகவான். இது பொதுவான பலன்கள்தான். நம்முடைய ஜாதகத்தில் கிரகங்களின் சஞ்சாரம், தசாபுத்தியைப் பொறுத்து பலன்கள் மாறுபடலாம்.
கடகம் ராசிக்கு சனி ஏழு, எட்டுக்கு அதிபதி, துலாம் ராசிக்கு சனி பகவான் நான்கு, ஐந்துக்கு அதிபதி. சனி மகரத்தில் ஆட்சி பெற்று அமரும் காலம் கடகம், துலாமிற்கு சச மகாயோக காலமாக அமைகிறது என்பதால் கண்டச்சனி, அர்த்தாஷ்டம சனி காலத்தில் பாதிப்புகளை விட அதிக நன்மையே நடைபெறும்.
ஒருவருடைய ஜனன கால ஜாதகத்தில் சனி, துலாம், மகரம் மற்றும் கும்பம் ஆகிய வீடுகளில் அமர்ந்துள்ள நிலையில், அந்த வீடுகள் லக்னம் அல்லது ராசி ஆகியவற்றுக்கு 1,4,7,10 என்ற கேந்திர ஸ்தானங்களாக அமைந்திருந்தால் இந்த யோகம் ஏற்படுகிறது.

கண்டச்சனி பயணம்
தை மாதம் தனுசு ராசியில் இருந்து மகரத்தில் சனி அமரும் போது கடக ராசிக்கு கண்டச்சனியாக 30 மாதங்கள் சஞ்சரிக்கிறார். சனி யோகமான கிரகம் இல்லை என்றாலும் இந்த சனி பெயர்ச்சியால் இந்த நிர்வாகத்தில் தலைமை பதவியை தருவார். இம்முறை சனிபகவான் சூரியன், சந்திரன் செவ்வாய் ஆகிய கிரகங்களுக்கு உகந்த உத்திராடம், திருவோணம், அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில் சனி பயணிக்கும் போது அதற்கேற்ப நன்மைகளை தருவார்.

பதவி உயர்வு
கடல் வழி தொழில் செய்பவர்களுக்கு நன்மை செய்வார். வேலை மாற்றம் இடமாற்றத்திற்கு காத்திருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். விசா கிடைக்கும். சனி மிகப்பெரிய யோகம். வேலையில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு உயர்வு கிடைக்கும். சனியின் பார்வை கடகத்தின் மீது விழுவதால் பாதிப்பு குறையும். ஏழுக்கு உடையவன் ஏழில் இருப்பதால் திருமணம் தடைகளை தாண்டி நடைபெறும். தேவையில்லாத பேச்சுக்களை பேச வேண்டாம் விட்டுக்கொடுத்து போகணும்.

தொழிலில் யோகம்
கடக ராசிக்காரர்களுக்கு கண்டச்சனியாக இருந்தாலும் யோகம்தான். அரசியல் அரசாங்க துறையில் உள்ளவர்களுக்கு யோகம். தலைமைப்பதவி தேடி வரும் தொழில் அற்புதமாக இருக்கும். சந்திரன் நட்சத்திரமான திருவோணம் நட்சத்திரத்தில் சனி நகரும் போது தொழில் வேலையில் இடமாற்றம் ஏற்படும்.

உடல் நலனில் அக்கறை
ஒன்பதாம் வீட்டின் மீது சனி பார்வை விழுவதால் ஆரோக்கியத்தில் கவனம், தேவை. கடன் வாங்கி வீடு வாங்குவீர்கள். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். கணவன் மனைவி உறவில் கவனமாக இருக்கவும். உடல் நலனில் அக்கறை தேவை. பயணங்களிலும் கவனம் தேவை. வண்டி வாகனம் வாங்குவீர்கள். இருக்கும் இடத்தை மாற்றுவீர்கள். அவிட்டம் நட்சத்திரத்தில் சனி செல்லும் போது யோகங்கள் அதிகரிக்கும் காரணம் சனியின் பார்வை உங்க மீது விழுவதால் பாதிப்புகள் அதிகம் இருக்காது. எதிர்பார்ப்பை குறைத்துக்கொள்ளுங்கள் ஏமாற்றங்கள் வராது.

அர்த்தாஷ்டம சனி
துலாம் ராசிக்கு சனி நான்கு ஐந்துக்கு அதிபதி. நான்காம் அதிபதி நான்கில் ஆட்சி பெற்று அர்த்தாஷ்ட சனியாக அமர்கிறார். ஆட்சி பெற்ற சனி நோய்களை வெளிப்படுத்துவார்கள். வண்டி வாகனத்தை பழுது பார்ப்பீர்கள். தனவரவு அதிகரிக்கும். ஆசைகளை குறிக்கோள்களை சனி நிறைவேற்றுவார்.

வண்டி வாகன யோகம்
சனி உச்சம் பெறும் ராசி துலாம் ராசி. உங்களுக்கு கெடுதல் செய்யமாட்டார். சந்தோசங்கள் அதிகம் நடைபெறும் காலம் கல்வி திருமணத்தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். பணம் சேர்க்க முடியாது அதற்கு பதிலாக சொத்துக்கள் வாங்குவீர்கள். பத்தாவது பார்வையாக சனி பார்வை உங்க ராசி மீது விழுகிறது. சனி யோகம். வீடு, வண்டி வாகன வசதி கிடைக்கும். தீர்க்கப்படாத பிரச்சினைகள் முடிவுக்கு வரும் வழக்குகள் சாதகமாகும்.

பயணங்களால் பண வரவு
தொழில் பிசினஸ் பெரிய மாற்றம் வரும். வெளிநாடு பயணம் செய்யலாம். காரணம் உங்க ராசிக்கு பத்தாம் வீட்டில் சனி பார்வை விழுகிறது. தொழில் தொடங்காதவர்கள் கூட தொழில் தொடங்குவீர்கள். பயணங்களால் தன வரவும் கிடைக்கும். சனி பார்வை 6ஆம் வீட்டில் விழுவதால் தொல்லைகள் விலகும். ஆட்சி பெற்ற சனியால் பலமடைவீர்கள். அதே நேரத்தில் செலவுகள் அதிகமாகும்.

நோய்கள் தீரும்
சூரியன் நட்சத்திரமான உத்திராடத்தில் சனி பயணிக்கும் போது பதவி உயர்வு கிடைக்கும். இடமாற்றம் கிடைக்கும். திருவோணத்தில் சனி சஞ்சரிக்கும் போது வெளிநாட்டு பயணம் செய்யும் யோகம் அமையும். மாணவர்களுக்கு கல்வி உயர்வு வரும். அம்மாவின் உடல்நலனில் இருந்த நோய்களை வெளிக்காட்டுவார். சிலரது நோய்கள் தீரும். புதிய பயணத்தை ஏற்படுத்துவார். திருமணம், குழந்தை பாக்கியத்திற்கு நன்மையான காலம். சொத்துக்கள் வாங்கலாம். சனி பார்வை உங்க ராசி மீது விழுவதால் நிம்மதியும் நம்பிக்கையும் கொடுப்பார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications