Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனி பெயர்ச்சி பலன் 2023: ஏழரை சனி எபெக்ட்.. கலங்கும் மீன ராசிக்காரர்கள்.. மேஷ ராசிக்காரர்களே ரெடியா

Subscribe to Oneindia Tamil

சென்னை: எந்த பக்கம் திரும்புனாலும் முட்டுச்சந்தா இருக்கே என்று குழம்பிப்போயிருக்கிறார்கள் மீன ராசிக்காரர்கள். எல்லாம் ஏழரை சனியின் எபெக்ட்தான். ஆரம்பமே அமர்களமா இருக்கே 2030 வரைக்கும் எப்படி கடத்தப்போகிறோமோ என்று யோசிக்க ஆரம்பித்து விட்டனர். மீன ராசிக்காரர்கள் நிலைமையைப் பார்த்து மேஷ ராசிக்காரர்கள் சிரிக்காதீர்கள் அடுத்தது உங்களுக்குத்தான் என்று உணர்த்தும் வகையில் மீம்ஸ் பதிவிட்டுள்ளார் ஜோதிடர் ஒருவர்.

சனி பெயர்ச்சி: முன்பெல்லாம் சொந்த பந்தங்கள் பார்த்துக்கொண்டால் எப்படி இருக்கீங்க? வியாபாரம் எப்படி போகுது? மழை ஏதாவது உண்டா என்று கேட்பார்கள். இப்போதோ ஒரே சலிப்புதான். எதுவும் சொல்லிக்கிற மாதிரியில்லை என்று பேச ஆரம்பித்து விட்டனர். ஏழரை நடக்குதுப்பா? அஷ்டமத்து சனி கஷ்டத்தை தருதுப்பா என்று பேச ஆரம்பித்து விட்டனர். சனி தோஷம் நீங்க கோவில் கோவிலாக போக ஆரம்பித்து விட்டனர்.

Sani peyarchi Palan: Meenam Elarai Sani effect prediction of 2024 New year Rasi palan

ஏழரை சனி: அது என்ன ஏழரை சனி என்று கேட்பவர்களுக்கு சிறு விளக்கம். சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டு காலம் பயணம் செய்வார். ஒருவர் பிறந்த ஜென்ம ராசிக்கு 12ஆம் வீட்டில் சனி அமரும் போது ஏழரை சனி ஆரம்பிக்கும். ராசியில் அமரும் போது ஜென்மசனியாகும் ராசிக்கு இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானத்தில் சனி அமரும் போது பாத சனி என மொத்தம் ஏழரை ஆண்டு காலம் பாடாய் படுத்தி வாழ்க்கை என்றால் என்ன என்று உணர வைத்து விடுவார்.

கஷ்டங்கள் கவலைகள்: கடந்த ஏழரை ஆண்டு காலம் சனி பகவானின் பிடியில் சிக்கியிருந்த தனுசு ராசிக்காரர்களை கேட்டால் தெரியும் ஏழரை சனி என்னென்ன செய்திருக்கும் என்று கதை கதையாக சொல்வார்கள். அவ்வளவு ஏன் இப்போது ஏழரை சனியில் பிடியில் சிக்கி 5 ஆண்டு காலம் அனுபவித்த மகரம் ராசிக்காரர்களும், இன்னும் 5 ஆண்டு காலம் ஏழரை சனியின் தாக்கத்தை சந்திக்கப்போகும் கும்ப ராசிக்காரர்களை கேட்டாலும் தெரியும் ஒவ்வொரு நாளும் எப்படி ஒரு யுகமாக போகிறது என்று சொல்வார்கள்.

Sani peyarchi Palan: Meenam Elarai Sani effect prediction of 2024 New year Rasi palan

மீன ராசிக்காரர்களே: இப்போது சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்கிறார். இது மீன ராசிக்காரர்களுக்கு 12ஆம் வீடு. விரைய சனி ஆரம்பித்து விட்டது. 2025 ஆம் ஆண்டு வரை இறுதி வரை விரைய சனியாக பயணம் செய்யும் சனி அடுத்தது மீன ராசியில் அமர்ந்து ஜென்ம சனியாக சஞ்சரிப்பார். 2027 ஆண்டு மேஷ ராசிக்கு சனி இடப்பெயர்ச்சியாகும் சனி 2029ஆம் ஆண்டு இறுதி வரைக்கும் உங்களுக்கு ஏழரை சனியாக பாத சனியாக தொடர்வார் சனிபகவான். ஆக மீன ராசிக்காரர்கள் 2030ஆம் ஆண்டு வரைக்கும் சனியின் பிடியில் சிக்கியிருப்பார்கள்.

என்ன செய்யக்கூடாது: ஏழரை சனி காலத்தில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். ஏழரை சனி ஒருவருக்கு வரும் முன்பாக லாப சனி வரும். அதாவது 11வது இடத்தில் சனி அமரும் இடம். அது அற்புதமான இடம் பொன், பொருள், வருமானம் என அள்ளிக்கொடுப்பார் சனி. அந்த கால கட்டத்தை சரியாக பயன்படுத்தி சம்பாதித்தவர்கள் அடுத்த ஏழரை ஆண்டு காலத்தை எளிதில் கடந்து விடலாம். ஆனால் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி தலைகணம் பிடித்து விட்டால் அவர்களை சனி பகவான் தலையில் தட்டி நல்ல படிப்பினையை கொடுப்பார். ஏழரை சனி காலத்தில் தப்பிக்கவே முடியாது.

Sani peyarchi Palan: Meenam Elarai Sani effect prediction of 2024 New year Rasi palan

அறிகுறிகள் என்ன?: ஏழரை சனி பிடித்திருக்கிறது என்றாலே அதற்கான அறிகுறிகள் தென்படும். காகம் தலையில், உடையில் எச்சமிடும், குப்பை வண்டி கடந்து போகும் போது குப்பை பறந்து விழும். அடிக்கடி உணவில் கல் தென்படும், தலையில், கால்களில் இடித்துக்கொண்டு அடிபட நேரிடும். வண்டி வாகனங்களில் போகும் போது விழுந்து அடிபட நேரிடும். இந்த கால கட்டத்தில் கடன் வாங்கவே கூடாது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் அகலக்கால் வைக்கவே கூடாது. பேசும் வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும்.

பரிகாரம்: ஏழரை சனி பிடித்து விட்டால் விநாயகரையும் ஆஞ்சநேயரையும் மறக்காமல் கும்பிட வேண்டும். கோவில்களுக்கு செல்ல வேண்டும் அன்னதானம் தர வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்ய வேண்டும். கடைநிலை ஊழியர்கள், ஆதரவற்றவர்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டும். மீன ராசிக்காரர்களுக்கு இப்போதுதான் ஏழரை ஆரம்பித்து விட்டது. 2024ஆம் ஆண்டில் முழுவதும் விரைய சனிதான். ஜென்ம ராகு, 3ஆம் இட குரு என கிரகங்களின் பயணம் ஒரு மாதிரியாகத்தான் இருக்கிறது.

எப்படி இருக்கு ஏழரை: மீன ராசிக்காரர்களைப் பார்த்து இப்ப ஆரம்பித்த ஏழரை சனி எப்படி இருக்கு என்று யாராவது கேட்டாலே போதும். அடேய் என்னைப்பார்த்தாடா இப்படி கேட்கற நீ? என்று கதறி விடுவார்கள். அந்த அளவிற்கு அவர்களின் வாழ்க்கையில் ஒவ்வொரு அடியாக வாங்க ஆரம்பித்திருப்பார்கள். லாப சனி காலத்தில் சம்பாதித்ததை எல்லாம் இப்போதுதான் செலவு செய்ய ஆரம்பித்திருப்பார்கள். பயமா இருக்கா? இனிதான் பயங்கரமாக இருக்கப்போகிறது என்று மேஷ ராசிக்காரர்கள் சொல்லக்கூடாது ஏனென்றால் சனி பகவான் அடுத்தது மேஷ ராசிக்காரர்களுக்குத்தான் ஏழரையை ஆரம்பிப்பார் எனவே கவனமாக இருங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+