சனி பெயர்ச்சி.. கும்ப ராசியில் உதயமான சனி.. குரோதி ஆண்டில் உச்சம் தொடப்போடும் 6 ராசிக்காரர்கள்
சென்னை: கும்ப ராசியில் அஸ்தமனமான நிலையில் இருந்த சனி பகவான் மார்ச் 16ஆம் தேதி முதல் உதயமாகியிருக்கிறார். சனிபகவான் உதயத்தால் சில ராசிக்காரர்கள் உச்சம் தொடப்போகிறார்கள். கும்ப ராசியில் உதயமான சனியுடன் செவ்வாய், சுக்கிரன் கூட்டணி சேர்ந்துள்ளனர். குரோதி தமிழ் புத்தாண்டில் சனிபகவானின் உண்மையாக சக்தியை எந்த ராசிக்காரர்கள் உணரப்போகிறார்கள் என்று பார்க்கலாம்.
யோகம் தரும் சனி பகவான்: கும்ப ராசியில் ஆட்சி பெற்ற நிலையில் பயணம் செய்யும் சனிபகவானின் பார்வை 3,7,10ஆம் இடங்களின் மீது விழுகிறது. கும்ப ராசியில் இருந்து சனி பகவான் மூன்றாம் பார்வையாக மேஷம் ராசியையும், ஏழாம் பார்வையாக சிம்ம ராசியையும், 10ஆம் பார்வையாக விருச்சிக ராசியையும் பார்வையிடுகிறார். நிகழ இருக்கும் சனிப்பெயர்ச்சியால் ஏழரைச்சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டம சனி, அஷ்டம சனியால் அவதிப்படபோகும் ராசிகள் யார் யார் என்று பார்க்கலாம். அதே நேரத்தில் கோடீஸ்வர யோகம், விபரீத ராஜயோகம் பெறும் ராசிக்காரர்கள் யார் யார் என்றும் பார்க்கலாம்.

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு லாப சனி காலமாகும். செய்யும் தொழிலில் லாபமும், அபரிமிதமான வருமானமும் கிடைக்கும். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சனிபகவான் பார்வை உங்க ராசியின் மீது விழுவதும் கூடுதல் பலம். உங்களின் செல்வாக்கும் சொல்வாக்கும் உயரும். உதயமான சனியால் உச்சத்திற்கு செல்லப்போகிறீர்கள். வெளிநாடு செல்வதற்கான யோகமும் கைகூடி வரப்போகிறது.
ரிஷபம்: ரிஷப ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்வதால் செய்யும் தொழில் வளர்ச்சியடையும். ஆட்சி பெற்ற சனியால் சச யோகம் கிடைக்கப் போகிறது. சனியால் கொடுக்கும் பதவி, சொத்துக்களை யாராலும் அசைக்க முடியாது. திருமணம் நடக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். புது வேலை கிடைக்கும். பதவியில் புது உற்சாகம் கிடைக்கும்.
மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு பாக்கிய சனி காலம் என்பதால் யோகங்கள் அதிகம் கிடைக்கும். பணவருமானம் அதிகரிக்கும். அசையும் அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். நிறைய தான தர்மங்களை செய்யுங்கள். ஏனெனில் இது தர்ம சனி காலம். வேலையில் சம்பள உயர்வு புரமோசன் கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். நகை, பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும்.
கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு எட்டாம் வீட்டில் அஷ்டம சனியாக பயணம் செய்கிறார். இந்த கால கட்டத்தில் சில பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் அவை உங்களுக்கு சாதகமாகவே முடியும். எட்டாம் வீட்டு அதிபதி சனி எட்டில் ஆட்சி பெற்று அமர்வது விபரீத ராஜயோக காலமாகும். திடீர் பணவரவு வந்து திக்குமுக்காட வைக்கும். எட்டாம் வீட்டில் செவ்வாய், சுக்கிரன் உடன் உதயமான சனி வாழ்க்கையில் உச்சத் தொட வைக்கப்போகிறார்.
சிம்மம்: சனிபகவான் உங்க ராசிக்கு ஏழாம் வீட்டில் கண்டச்சனியாக பயணம் செய்கிறார். சனிபகவான் உங்க ராசியை பார்ப்பதால் கண்டச்சனியையும் கஷ்டமில்லாமல் கடந்துவிடுவீர்கள். வேலை மாற்றம் இடமாற்றத்திற்கு காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சனியால் மிகப்பெரிய யோகம் தேடி வரப்போகிறது. வேலையில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதிர்பாராத அதிரடி மாற்றத்தை தரப்போகிறார் சனி பகவான்.
கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு சனி பகவான் ஆறாம் வீட்டில் உச்சம் பெற்ற நிலையில் பயணம் செய்வதால் முழு ராஜயோகத்தையும் தரப்போகிறார். சனி ஆறாம் வீட்டு அதிபதி ஆறில் ஆட்சி பெற்று அமர்ந்து விபரீத ராஜயோகத்தை தரப்போகிறார். சனி பகவான் தனது சொந்த வீட்டுக்கு வருவதால் நோய்கள் தீரும். கடன்கள் கட்டுப்படும். அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். திடீர் அதிர்ஷ்டங்கள் அமையும். புதிய தொழில்களை தொடங்கலாம். இரட்டிப்பு லாபம் கிடைக்கும். இனி இரண்டரை ஆண்டு காலம் உங்களுக்கு ராஜயோக காலம். செல்வமும் செல்வாக்கும் அதிகரிக்கும்.












Click it and Unblock the Notifications