சனி பெயர்ச்சி.. மகரத்தில் பயணிக்கும் சனி..இன்னும் 3 மாதங்களுக்கு இந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்
சென்னை: சனி பெயர்ச்சி ஜனவரியில் நிகழப்போகிறது. அதற்கேற்ப பல பரிகாரங்களை இப்போதிருந்தே செய்து விட்டால் பாதிப்புகள் பாதியாக குறையும். கடந்த சில மாதங்களாக மகர ராசியில் வக்ர நிலையில் பயணம் செய்த சனிபகவான் இன்று முதல் நேர்கதியில் பயணம் செய்யப்போகிறார். 2023ஆம் ஆண்டு ஜனவரி வரை மகர ராசியில் பயணம் செய்யும் சனிபகவானால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
சனிபகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகாலம் தங்கும் சனிபகவான் 12 ராசிகளையும் சுற்றி வர 30 ஆண்டுகாலம் எடுத்துக்கொள்கிறார் எனவேதான் 30 ஆண்டுகள் வாழ்ந்தாரும் இல்லை தாழ்ந்தாரும் இல்லை என்கின்றனர். சனிபகவான் நீதிமான் என்பதால் அவர் சோதனைதான் கொடுப்பார். தண்டனை என்ற பெயரில் புத்தி புகட்டுவார்.
சனி பகவான் ஒருவரின் ராசிக்கு 3,5,6,9,10,11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் கால கட்டத்தில் சங்கடங்கள் இல்லாத சந்தோஷங்களைத் தருவார். ஏழரை சனி காலத்தில் சனிபகவான் விரையசனி, ஜென்மசனி, பாதசனி என படிப்பினைகள் கொடுப்பார்.நேர்கதியில் பயணம் செய்யும் சனிபகவானின் பார்வை 3,7,10ஆம் இடங்களின் மீது விழுகிறது. மகரம் ராசியில் நேர்கதியில் பயணம் செய்யும் சனிபகவான் மூன்றாம் பார்வையாக மீனம் ராசியையும், ஏழாம் பார்வையாக கடகம் ராசியையும், 10ஆம் பார்வையாக துலாம் ராசியையும் பார்வையிடுகிறார். சனிபகவான், பயணம் மற்றும் பார்வையால் அடுத்த சில மாதங்களுக்கு எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்
சனி பகவான் மேஷம் ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். ஆட்சி பெற்ற சனியால் சச யோகம் செயல்படும். புது வேலை கிடைக்கும். பதவியில் புது உற்சாகம் கிடைக்கும். திருமணம் நடக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். கோடீஸ்வர யோகம் வரப்போகிறது. சனி கொடுப்பதை பத்திரமாக பாதுகாத்து தான தர்மங்கள் செய்யுங்கள் நல்லதே நடக்கும்.

ரிஷபம்
சனி பகவான் உங்கள் யோகாதிபதி. பாக்ய சனியால் யோகங்கள் அதிகம் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். அசையும் அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். இது தர்ம சனி காலம். வேலையில் சம்பள உயர்வு புரமோசன் கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். நகை, பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். நிறைய தர்மங்களை செய்யுங்கள். நன்மைகள் அதிகம் நடைபெறும்.

மிதுனம்
சனிபகவான் எட்டாம் வீட்டில் அஷ்டம சனியாக பயணம் செய்கிறார். எட்டாம் வீட்டு அதிபதி சனி எட்டில் ஆட்சி பெற்று அமர்வது விபரீத ராஜயோக காலமாகும். இந்த கால கட்டத்தில் சில பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் அவை உங்களுக்கு சாதகமாகவே முடியும். திடீர் பணவரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்க அனுமனை வணங்குங்கள்.

கடகம்
கடகம் ராசிக்காரர்களே ராசிக்கு ஏழாம் வீட்டில் கண்டச்சனியாக அமர்ந்து உங்களுடைய ராசியை பார்க்கிறார். வேலை மாற்றம் இடமாற்றத்திற்கு காத்திருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். விசா கிடைக்கும். சனி மிகப்பெரிய யோகம். வேலையில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். திருமணம் தடைகளை தாண்டி நடைபெறும்.

சிம்மம்
சனி பகவான் ஆறாம் வீட்டில் அமர்ந்து முழு ராஜயோகத்தையும் தருகிறார். உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். நோய்கள் நீங்கும். கடன்கள் கட்டுப்படும். அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். திடீர் அதிர்ஷ்டங்கள் அமையும். புதிய தொழில்களை ஆரம்பிக்க லாபங்கள் கொட்டும். இனி இரண்டரை ஆண்டு காலம் உங்களுக்கு ராஜயோக காலம். சுகங்கள் தேடி வரும். இனி சில மாதங்களுக்கு உங்களின் செல்வமும் செல்வாக்கும் கூடும்.

கன்னி
பூர்வஜென்ம புண்ணியங்களை கொண்டு வந்து அறுவடை செய்வீர்கள். நல்லது அதிகம் நடக்கும். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். திருமண தடைகள் நீங்கும். வீடு, வாகனம் வாங்குவீர்கள். சிலருக்கு நன்மை தரும் இடமாற்றம் நடைபெறும். இந்த சனி பெயர்ச்சி பல நன்மைகளையும் யோகங்களையும் தரப்போகிறது. பணவரவு அதிகமாகவே இருக்கும். தொழில் வளர்ச்சி பெறும். கஷ்டங்களையும் நோய்களையும் அனுபவித்த உங்களுக்கு துன்பங்களில் இருந்த விடிவுகாலம் பிறப்போகிறது.

துலாம்
துலாம் ராசியில் சனிபகவான் உச்சமடைபவர் என்பதால் உங்களுக்கு எந்த கெடுதலும் செய்யமாட்டார். நான்காம் வீட்டு அதிபதி நான்கில் ஆட்சி பெற்று அமர்ந்து பயணம் செய்வது யோகத்தை தரும். நேர்மறை எண்ணம் அதிகரிக்கும். சனியின் பத்தாவது பார்வை உங்க ராசி மீது விழுவதால் தொழில் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தனவரவு அதிகரிக்கும். ஆசைகளை குறிக்கோள்களை சனி நிறைவேற்றுவார். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. மருத்துவ செலவுகள் அதிகரிக்கும்.

விருச்சிகம்
விருச்சிகம் கால புருஷனுக்கு எட்டாவது ராசி. உங்களுக்கு நன்மைகள் தேடி வரும் காலம். வராத பணம் தேடி வரும் முன்னேற்றத்திற்கு வழி கிடைக்கும். நீண்ட நாட்களுக்கு முன்பு கொடுத்த கடன்கள் வசூலாகும். பயணங்கள் வெற்றியை கொடுக்கும். மன நிம்மதி கொடுக்கும். உடல் நலத்தினால் கஷ்டப்பட்டவர்களுக்கு பாதிப்புகள் குறையும். இதுநாள் வரை நஷ்டங்களை ஏற்படுத்திய சனி இனி லாபங்களைத் தருவார். விடிவு காலம்தான். சந்தோஷமாக அனுபவியுங்கள்.

தனுசு
சனிப்பெயர்ச்சியால் அதிகம் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் தனுசு ராசிக்காரர்கள் கொஞ்சம் பெருமூச்சு விட்டுக்கலாம். ஏழரை சனியின் கடைசி இரண்டரை ஆண்டு காலம் பாத சனியாக தொடர்வதால் கொஞ்சம் கவனம் தேவை. தன வருமானமும் லாபமும் கிடைக்கும். சனியின் பார்வை ராசிக்கு நான்காம் வீடு, எட்டாம் வீடு,பதினொன்றாம் வீடுகளின் மீது விழுவதால் கஷ்டங்களை எளிதாக கடந்து விடலாம்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனியால் மன அழுத்தம், தடுமாற்றங்கள் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் நிம்மதியை தருவார். அனுபவங்களினால் பக்குவப்படுத்துவார். இந்த சனிப்பெயர்ச்சியை எளிதாக கடந்து விடுவீர்கள். கடினமாக உழைப்பீர்கள், பொறுப்பு அதிகரிக்கும். கடல் கடந்து செல்லும் எண்ணம் வரும். தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். அரசு தொடர்பான ஆதரவு கிடைக்கும். சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள்.

கும்பம்
சனி பகவான் உங்களுக்கு ஏழரை சனியாக நீடிக்கிறார். 12ஆம் வீட்டில் அமர்ந்து விபரீத ராஜயோகத்தையும் தருகிறார் சனி. காரணம் சனி பகவான் உங்களுடைய ஆட்சிநாதன். சம்பாதித்த பணத்தை செலவு பண்ணும் காலம். சுப விரைய செலவுகள் தேடி வரும். வீடு, மனை போன்ற சொத்துக்களாக வாங்கி முதலீடு செய்வது நல்லது.

மீனம்
மீனம் ராசிக்காரர்களுக்கு லாப சனி காலமாகும். செய்யும் தொழிலில் லாபமும், அபரிமிதமான வருமானமும் கிடைக்கும். சனிபகவான் பார்வை உங்க ராசியில் விழுவதும் கூடுதல் பலம். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்களின் செல்வாக்கும் சொல்வாக்கும் உயரும். சிலர் விமானம் ஏறி வெளிநாடு செல்வீர்கள். அந்நிய தேசத்து வருமானம் உங்களை கோடீஸ்வரர் ஆக்கும்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications