சனி பெயர்ச்சி பலன்கள் 2020 : அபாரம் அற்புதம்னு சொல்லப்போறவங்க யார் தெரியுமா
சென்னை: சனிப்பெயர்ச்சி திருக்கணிதப்பஞ்சாங்கப்படி இன்னும் சில நாட்களில் நிகழப்போகிறது. இந்த கிரகப்பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு நன்மையும், சில ராசிக்காரர்களுக்கு பாதிப்புகளும் ஏற்படும். இப்போது தனுசு ராசியில் உள்ள சனிபகவான் இனி தனது சொந்த வீடான மகரம் ராசிக்கு செல்லப்போகிறார். சனிபகவானின் சஞ்சாரம், பார்வையினால் சிலருக்கு அதிர்ஷ்டமழை பொழியப்போகிறது வருமானம் கொட்டப்போகிறது காரணம்
ஒருவரது ஜாதகத்தில் சனி பகவான் நல்ல நிலையில் இருந்தால் திரண்ட செல்வத்தை தந்து சமுதாயத்தில் உழைப்பால் உயர்ந்த உத்தமர் என்று அனைவராலும் பாராட்ட வைப்பார். அவர் தண்டிக்க வேண்டும் என்று நினைத்து விட்டால் பிச்சை எடுக்கும் நிலைக்குக் கூட கொண்டு போய் விட்டு விடுவார். நிகழ இருக்கும் சனிப்பெயர்ச்சியால் மேஷம் முதல் கன்னி வரை என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
சனீஸ்வர பகவான் ஒரு ராசி வீட்டை கடக்கும் கால அளவு இரண்டரை ஆண்டுகள் ஆகும். சந்திரன் நின்ற வீட்டுக்கு 12,1,2 ஆகிய மூன்று வீடுகளை கடக்க எடுத்துக்கொள்ளும் கால அளவு ஏழரை ஆண்டுகள் ஆகும். இதனையே ஏழரைச்சனி காலமாகும். 12ஆம் வீட்டில் சனி சஞ்சரிக்கும் காலத்தை விரைய சனி என்றும் ஒன்றாம் வீட்டில் சனி சஞ்சரிக்கும் காலத்தை ஜென்மச்சனி என்றும் இரண்டாம் வீட்டில் சனி சஞ்சரிக்கும் காலத்தை பாதச்சனி என்றும் கூறுவர்.
ஒருவர் வாழ்வில் ஏழரைச்சனி என்பது மூன்று முறை வரலாம். முதல் முறை வருவது மங்குசனி என்றும் இரண்டாவது முறை வருவது பொங்குசனி என்றும் மூன்றாவது முறை வருவது மரணச்சனி என்றும் கூறப்படும். ஒவ்வொருவர் வாழ்விலும் ஏழரை சனி குறுக்கிட்டே தீரும்.
சனி பகவானின் பலத்தைப்பொருத்துத்தான் ஒரு மனிதனின் நேர்மையை கூற முடியும். சனி திசையில் ஒருவருக்கு கிடைக்கும் அனுபவம் இருக்கிறதே அந்த அனுபவத்தை எங்கும் பெற முடியாது. ஒருவரது வாழ்க்கையில் ஏழரை சனி வரும்போது அவர் கும்பராசியாகவோ அல்லது மகர ராசியாகவோ, அல்லது துலாம், ரிஷபம், மிதுனம், கன்னி ராசிகளாகவோ இருந்தால் நல்வழிப்படுத்தி விடுவார். இப்போது சனிபகவான் மகரத்தில் அமர்வதால் தனுசு, மகரம், கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியாக சஞ்சரிக்கிறார். மிதுனம் ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனியாகவும், கடகம் ராசிக்காரர்களுக்கு கண்டச்சனியாகவும், துலாம் ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனியாகவும் சஞ்சரிக்கப்போகும் சனிபகவானால் 2020ஆம் ஆண்டில் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

கதற வைக்கும் சனிபகவான்
சனிபகவான் மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம் போன்ற ராசிகளாக இருந்தால் கடினமாக தண்டித்து பிறகு நல்வழிப்படுத்துவார். மீனம், தனசு ராசிக்காரர்களுக்கு தண்டனையை கொடுத்து முன்னேற்றப்பாதையை காட்டுவார். எனவே, நவ்வழிப்படுத்துவதில் இவருக்கு நிகர் இவர்தான் இவரை மிஞ்ச யாராலும் முடியாது. இப்போது ஏழரை சனி காலத்தில் சிக்கி விடுதலை அடையப்போகும் விருச்சிக ராசிக்காரர்களை கேட்டால் தெரியும் ஏழரை சனியின் பாதிப்பை பற்றி பக்கம் பக்கமாக வடிவேல் மாதிரி சொல்வார் முட்டுச்சந்துக்குள் வந்து மாறி மாறி அடித்த கதையையும் இவர் அடிவாங்கிய கதையையும் கதற கதற சொல்வார்கள்.

சோதனை தரும் சனிபகவான்
அதேபோல இப்போது ஜென்ம சனி காலத்தில் சிக்கி அது முடிந்து பாத சனி காலத்தில் சிக்கப்போகும் தனுசு ராசிக்காரர்களுக்குத்தான் தெரியும் ஏழரை சனியிடம் சிக்கி படும் பாட்டை பற்றி பாட்டாகவே பாடுவார்கள். சனி பகவான் அவரவர் பூர்வ புண்ணியத்துக்கு ஏற்ப நன்மையும் தீமையும் கலந்தே தருவார். சோதனைக் காலங்களில் மனமுருகி சனியை வழிபட்டால் தேவையான பரிகாரங்கள் செய்தால் சோதனையின் அளவு குறையும். இந்த சனிப்பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை தரப்போகிறார் யாருக்கு சோதனைகளை தரப்போகிறார் என்று பார்க்கலாம்.

மேஷத்திற்கு தொழில் சனி
மேஷம் ராசிக்காரர்களுக்கு ஒன்பதாம் வீட்டில் இருந்து சனிபகவான் பத்தாம் வீட்டிற்கு போகிறார். கேட்டதை எல்லாம் கொடுக்கப் போகிறார். மகிழ்ச்சிக்கடலில் நீந்தப்போகிறீர்கள். தொழில் ஸ்தானத்தில் சனிபகவான் அமரப்போவதால் நீங்க உங்க வேலையில் கவனமாக இருக்க வேண்டும். இனி உங்களுக்கு தொட்டது எல்லாம் பொன்னாகும் நீங்க பெறுவத எல்லாம் பெஸ்ட் ஆகும் காரணம் குருபகவானும் சந்தோஷத்தை தருவார். ராகு கேதுவும் உங்களுக்கு நல்லதை செய்யப்போகிறார். ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா என்று மேஷ ராசிக்காரர்கள் பாடினாலும் ஆச்சரியமில்லை. வாரி வழங்கும் வள்ளலாக இருக்கப்போகிறார் சனிபகவான்.

பாக்ய சனி அள்ளிக்கொடுப்பார்
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு ஆட்டி வைத்த அஷ்டமத்து சனி இனி ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் அமரப்போகிறார். கேட்டதும் கொடுப்பார் கேட்காததும் கொடுப்பார் சனிபகவான். பாக்ய சனியால் எதிர்பாராத பாக்கியங்களையும் அஷ்டமத்து குருபகவானால் விபரீத ராஜயோகத்தையும் பெறப்போகிறீர்கள். இதுநாள்வரை சங்கடங்களை மட்டுமே பார்த்து வந்த நீங்கள் இனி 2020ஆம் ஆண்டு முதல் சந்தோஷங்களை அனுபவிக்கப் போகிறீர்கள். டோண்ட் ஒர்ரி பீ ஹேப்பி என்று துள்ளிக்குதிப்பீர்கள். கடந்த இரண்டரை ஆண்டுகாலமாக சனிபகவானை வில்லனாக பார்த்த நீங்கள் இனி ஹீரோவாக பார்த்து ரசிப்பீர்கள். வருமானத்தை அள்ளிக்கொடுப்பதோடு அத்தனையும் கொடுப்பார்.

அஷ்டம சனி பாதிப்பில்லை
மிதுனம் ராசிக்காரர்களே உங்களுக்கு கண்டச்சனி முடிந்த அஷ்டமத்து சனி ஆரம்பமாகப்போகிறது. எட்டுக்கு உடையவன் எட்டாம் வீட்டில் சஞ்சரிப்பது விபரீத ராஜயோகம் என்பதால் பயப்படவேண்டாம். இந்த இரண்டரை ஆண்டுகாலம் சோதனைகள் வந்தாலும் உங்களுக்கு படிப்பினைகளை கொடுத்து அடுத்து வரப்போகிற பாக்ய சனியால் நன்மைகள் நடக்கப்போகிறது என்பதற்கான அஸ்திவாரமாகவே இந்த சனிப்பெயர்ச்சி உள்ளது. அடி கொடுத்தாலும் சனி வருமானத்தை அள்ளித்தான் கொடுப்பார்.

கண்டச்சனி கவனம்
கடகம் ராசிக்காரர்களுக்கு சனிபகவான் சந்தோஷத்தை மட்டுமே கொடுத்து வந்தார். அடுத்து கண்டச்சனியாக ஏழாம் வீட்டில் அமரப்போகிறார். என்னதான் கஷ்ட நஷ்டங்களை கொடுத்தாலும் சனிபகவான் உங்க ராசிக்கு ஏழாம் வீட்டு அதிபதி என்பதால் தலையில் லேசாக தட்டி வைப்பார் எனவே கவலைப்படாமல் இரண்டரை ஆண்டுகாலத்தை கடத்தி விடலாம். வீட்டில் விட்டுக்கொடுத்து போங்க இல்லாவிட்டால் வெட்டுக்குத்து ஆகிவிடும் எச்சரிக்கை.

சத்ரு சனி சந்தோஷம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு கெட்ட நேரம் எல்லாம் ஓடிப்போய் விட்டது காரணம் குருபார்வையால் 2020ஆம் ஆண்டு சந்தோஷமான ஆண்டாக அமைந்துள்ளது. சனிபகவானும் சந்தோஷத்தை தரும் அளவிற்கு ஆறாம் இடத்தில் விபரீத ராஜயோகத்தை தரப்போகிறார். சனிபகவான் பகையாளியாக இருந்தாலும் சாதகமான இடத்தில் அமர்வதால் இனி சந்தோஷத்தை மட்டுமே கொடுப்பார் வருமானத்தையும் அள்ளிக்கொடுப்பார்.

பூர்வ புண்ணிய சனி
கன்னி ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி என நான்காம் இடத்தில் அமர்ந்து சங்கடத்தை கொடுத்து வந்த சனிபகவான் இனி சந்தோஷத்தை தரப்போகிறார். வருமானத்தில் கை வைத்தவர், ஆரோக்கியத்தை ஆட்டிப்பார்த்த சனிபகவான் இனி அள்ளித்தரப்போகிறார். ஆரோக்கியமான வாழ்க்கையையும் வளமான வருமானத்தையும் சனிபகவான் தரப்போகிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த இரண்டரை ஆண்டுகாலம் சோகத்தையும் சோதனைகளையும் சந்தித்த நீங்கள் இனி சந்தோஷத்தை பார்க்கப்போகிறீர்கள்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications