Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனிப்பெயர்ச்சி 2020: அர்த்தாஷ்டம சனி கன்னிக்கு முடியுது துலாமிற்கு தொடங்குது

சனிபகவான் அர்த்தாஷ்டம சனியாக நான்காம் வீட்டில் சஞ்சரிக்கும் காலம் சில பாதகங்களையும் சில சாதகங்களையும் கொடுத்து செல்வார்.திருக்கணிதப்பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி நிகழப்போகிறது. இந்த சனிப்பெயர்ச்சியால்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Sani Peyarchi 2020 | thulam | சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020 -துலாம் ராசிக்கு பலன்கள் எப்படி?

    சென்னை: திருக்கணித பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி தை 10ஆம் தேதி ஜனவரி 24ஆம் தேதி நிகழப்போகிறது. மகரம் ராசி சனிபகவானின் சொந்த வீடு இந்த இடப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கும் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படப்போவதில்லை. இந்த சனிப்பெயர்ச்சியால் அர்த்தாஷ்டம சனி கன்னி ராசிக்கு முடிகிறது. அதே நேரம் துலாம் ராசிக்கு அர்த்தாஷ்டம சனி தொடங்குகிறது. இந்த ராசிக்காரர்களுக்கு சனிபகவான் என்னென்ன பலன்களை கொடுப்பார் என்று பார்க்கலாம்.

    நவ கிரகங்களில் சனிபகவான் நீதிமான். நியாயமாக நடப்பவர்களுக்கு சனிபகவான் எந்த சங்கடமும் தரமாட்டார். தவறு செய்பவர்களை மட்டுமே சனிபகவான் தண்டிப்பார் எனவே சனிபகவானைப்பார்த்து யாரும் பயப்பட வேண்டாம். சனிபகவான் தண்டனைகளின் மூலம் அனுபவ பாடங்களை கற்றுக்கொடுப்பார்.

    சனிபகவான் சரியில்லாத இடத்தில் சஞ்சரிக்கும் போது சில பரிகாரங்களை செய்தால் போதும் பலன்தரும் பரிகாரங்களும் இருக்கின்றன. சனி பார்வை என்ன செய்யும் சனிபகவான் நியாயவான் எனவேதான் அவருக்கு இறைவன், கலபுருஷ தத்துவத்தில் ஜீவனம் மற்றும் ஆயுள் ஆகிய பணிகளை செய்ய கட்டளையிட்டுள்ளார். சனிபகவானுக்கு, 3 , 7 , 10 இடப்பார்வைகள் உண்டு இந்த சஞ்சாரம் மற்றும் பார்வைகளால் கன்னி மற்றும் துலாம் ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி என்ன பரிகாரம் என்று பார்க்கலாம்.

    ஆரோக்கியம் அதிகமாகும்

    ஆரோக்கியம் அதிகமாகும்

    கன்னி ராசிக்காரர்களே... இந்த சனிப்பெயர்ச்சியால் உங்களுக்கு அதிக நன்மைகள் நடக்கப்போகிறது. திருமணம் கைகூடி வரும், காதல் மணியடிக்கும். காதலர்களுக்கு கல்யாணம் கை கூடி வரும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு நீண்ட போராட்டத்திற்கு பிறகே குழந்தை பாக்கியம் அமையும். வீட்டில் எப்போது உற்சாகமாக இருப்பீர்கள். உங்களின் அறிவும் ஆற்றலும் அதிகரிக்கும். அர்த்தாஷ்டம சனியால் நோய்களால் பாதிக்கப்பட்டு இருந்த உங்களுக்கு இனி நோய்கள் நீங்கும் காலம் வந்து விட்டது. உங்களின் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரும். உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த உங்கள் அம்மாவின் உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கும். தடைபட்டு வந்த சுபகாரியங்கள் இனிதே நடக்கும்,

    முதலீடுகளில் கவனம்

    முதலீடுகளில் கவனம்

    வண்டி வாகனங்கள் வீடு, நிலம், வாங்க வாய்ப்புகள் அமையும். தந்தை மற்றும் தாய் வழி சொத்துக்கள் எதிர்பாராமல் வர வாய்ப்புள்ளது. அதிர்ஷ்டத்தை நம்பாமல் உழைப்பை மட்டும் தாராக மந்திரமாக எண்ணி செயல்களில் இறங்குங்கள் வெற்றிகள் தேடி வரும். விரும்பிய வேலை கிடைப்பதில் நிறையத் தடைகள் ஏற்படும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கடுமையாக போராட வேண்டி இருக்கும். உயரதிகாரிகள் விஷயத்தில் அதிக எச்சரிக்கை தேவை.
    பங்கு சந்தையில் தேவையற்ற முதலீடு செய்ய வேண்டாம். சுய தொழில்களில் முதலீடு செய்வதில் அதிகக் கவனம் தேவை. உங்கள் பணம், உழைப்பினால் அடுத்தவர்கள்தான் ஆதாயம் அடைவார். எனவே முதலீட்டில் அதிகக் கவனம் தேவை. சனிபகவான் இரண்டாம் வீடு, ஏழாம் வீடு, 11ஆம் வீட்டை பார்ப்பதால் உங்களுக்கு எதிர்பாராத இடத்தில் இருந்து பணவரவு கிடைக்கும். சுபகாரியங்கள் வீட்டில் அதிகம் நடைபெறும். மூத்த சகோதர சகோதரிகளின் உதவி கிடைக்கும். உங்களின் பயணங்களினால் நன்மைகள் நடைபெறும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும்.

    ஆரோக்கியத்தில் அக்கறை

    ஆரோக்கியத்தில் அக்கறை

    பெண்களுக்கு தடைகள் நீங்கி திருமணம் நடைபெறும், குழந்தைபேறு கிடைக்கும். அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். பெண்களுக்கு நகைகள் சேரும், ஆடை ஆபரணக்சேர்க்கை கிடைக்கும். வீட்டில் கணவன் மனைவி உறவு உற்சாகமாக இருக்கும். குடும்பத்தில் குதூகலமாக இருப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அதிகக் கவனம் தேவை. சுறுசுறுப்பாக இருந்தாலும் அடிக்கடி உடல் அசதி, சோர்வு அலைச்சல்களால் ஏற்படும். அடிக்கடி விரதம் என்ற பெயரில் பட்டினி கிடக்க வேண்டாம் வயிறு வலி பிரச்சினைகள் ஏற்படும். மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று ஆலய தரிசனம் செய்யும் காலமாக அமையும். திருநள்ளாறு சென்று நளதீர்த்தத்தில் நீராடி சனிபகவானை தரிசனம் செய்து வர அதிக நன்மைகள் கிடைக்கும்.

    வேலையில் கவனம்

    வேலையில் கவனம்

    4ஆம் வீட்டில் சனி சஞ்சாரம் என்பது தொழிலில் தகராறு மற்றும் தொழிலில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்குவார். அதே சமயம் வேலையில் அதிக கவனம் செலுத்துதல் வேண்டும். உழைப்புக்கு அஞ்சாமல் வேலையில் சளைப்பில்லாமல் விரும்பி செய்யுங்க. உங்க வேலையை காதலித்தால்தான் அந்த வேலையில் நீங்கள் நீண்ட நாட்கள் நிலைத்து இருக்க முடியும். வேலைக்கு அடிக்கடி லீவு போடாதீங்க. அவசரபட்டு வேலயை விடுவதோ அல்லது வேறு வேலைக்கு மாறும் பொழுது வேலை உத்தரவாதம் இருந்தால் மட்டுமே மாற வேண்டும். வேலை காரணமாக சிலருக்கு இடமாற்றம் கிடைக்கும், வெளியூர், வெளிநாடு செல்லவேண்டியிருக்கும். பதவி உயர்வு நீண்ட இழுபறிக்குப் பின்னர் கிடைக்கும்.

    அம்மாவின் நலன்

    அம்மாவின் நலன்

    நான்காம் இடம் தாய் ஸ்தானம் இந்த இடத்தில் சனி அமர்வதால் அம்மாவின் உடல்நிலை சற்று பாதிக்கப்படும். உங்க அம்மாவை கவனிங்க. வீடு கட்ட இடம் வாங்குவதற்கும் வீடு,வண்டி வாகனம் வாங்குவதற்கு வாய்ப்புகள் தானாக வந்து சேரும். நான்காம் வீட்டில் இருந்து ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தை சனி பார்வையிடுவதால் இனம் தெரியாத நோய்கள் வந்து போகும் சரியான நேரத்திற்கு சத்தான உணவுகளை சாப்பிடுவதுதான் ஆரோக்கியத்திற்கு நல்லது. பங்குச்சந்தை முதலீடுகள் முதலில் லாபம் கொடுத்தாலும் பின்னர் நஷ்டத்தில் விட்டு விடும். புதிய முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம் வெற்றி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

    காதல் உற்சாகமாகும்

    காதல் உற்சாகமாகும்

    சனிபகவானின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுவதால் உற்சாகமாக இருங்கள், வேலைகளை ஒத்திப்போடாமல் உடனே செய்து முடியுங்கள்.
    கணவன் மனைவி உறவு உற்சாகமாக அமையும். மகிழ்ச்சி நீடிக்கும். பேச்சில் இனிமை கூடும். காதல் திருமணத்தில் முடியும், சிலருக்கு தடைபட்டு வந்த குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்களின் பேச்சிற்கு மதிப்பு மரியாதை கூடும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். அர்த்தாஷ்டம சனியினால் ஏற்படும் பாதிப்புகள் குறைய வேலூர் வாலாஜாபேட்டை அருகே தன்வந்திரி பீடத்தில் அருள்பாலிக்கும் பாதாள சொர்ண சனீஸ்வரரை வணங்குங்கள். காலபைரவரை செவ்வாய்கிழமைகளில் செவ்வரளி மாலை சாற்றி வணங்குங்கள் நன்மைகள் நடைபெறும்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+