சனி பெயர்ச்சி பலன்கள் 2020 - 2023 : மேஷ ராசிக்கு அற்புதம் நிகழ்த்தும் சனிபகவான்
சனி பகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி விகாரி வருடம் தை 10ஆம் தேதி ஜனவரி மாதம் 24 ஆம் தேதி உத்திராடம் நட்சத்திரம் 2ஆம் பாதத்தில் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப் பெயர்ச்சி அடைகிறார். இந்த இடப்
சென்னை: சனி பகவான் நீதிமான். ஜீவன காரகன், ஆயுள் காரகன். இவர் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் சஞ்சரிப்பார். மிக மெதுவாக நகர்ந்து செல்வார். 12 ராசிகளையும் சுற்றி முடிக்க 30 ஆண்டுகள் ஆகும். எனவேதான் ஒருவர் 30 ஆண்டுகள் வாழ்ந்தவரும் இல்லை தாழ்ந்தவரும் இல்லை என்பார்கள். இந்த 30 ஆண்டுகளில் ஏழரை ஆண்டுகள் ஏழரை சனியாகவும், இரண்டரை ஆண்டுகள் அர்த்தாஷ்டம சனி, இரண்டரை ஆண்டுகள் கண்டச்சனியாகவும், இரண்டரை ஆண்டுகள் அஷ்டம சனியாகவும் இவர் சஞ்சரிக்கிறார்.
குரு பெயர்ச்சி முடிந்த நிலையில், அடுத்து சனி பெயர்ச்சி எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது. வாக்கிய பஞ்சாங்கம், திருக்கணித பஞ்சாங்கம் என ஜோதிடத்தில் இரு வகையான பஞ்சாங்கத்தை பின்பற்றுகின்றனர். நாம் திருக்கணிதப்படியே பலன்கள் சொல்லி வருகிறோம். அந்த வகையில் வரும் 2020 ஜனவரி 24ஆம் தேதி திருக்கணிதப்படியும், 2020 டிசம்பர் 26ஆம் தேதி வாக்கிய பஞ்சாங்கப்படியும் சனி பெயர்ச்சி நிகழ உள்ளது.
கால புருஷ தத்துவப்படி சனிபகவான் தற்போது ஒன்பதாம் வீடான தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். அங்கிருந்து பத்தாம் வீடான மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். 2023ஆம் ஆண்டு வரை மகரம் ராசியில் சஞ்சரிப்பார் சனிபகவான். இந்த கால கட்டத்தில் குருபகவான் தனுசுவில் இருந்து மகரத்திற்கும், பின்னர் கும்ப ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகிறார். அதே போல ராகு பகவான் மிதுனத்தில் இருந்து ரிஷபத்திற்கும், கேது பகவான் தனுசு ராசியில் இருந்து விருச்சிகத்திற்கும் பெயர்ச்சி அடைகிறார். இந்த கிரகங்கள் சஞ்சாரத்தின் அடிப்படையிலேயே நாம் பலன்களை கணிக்கிறோம்.

பணவரவு அற்புதம்
சனிபகவான் மேஷம் ராசிக்கு பத்தாம் வீட்டிற்கு இடப் பெயர்ச்சி அடைகிறார். இது தொழில் ஸ்தானம். மேஷம் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் குரு, பத்தாம் வீட்டில் சனி என அற்புதமாக அமைந்துள்ளது. தர்ம கர்ம ஸ்தானத்தில் வலுப்பெற்றுள்ளன. பத்தாம் வீட்டு அதிபதி பத்தில் ஆட்சி பெற்றிருப்பதால் உங்களுக்கு மிகப்பெரிய பதவிகள் தேடி வரும். தொழிலில் வெற்றி கிடைக்கும். லாபங்கள் அதிகம் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும்.

குடும்பத்தில் குதூகலம்
குருவின் பார்வையும் உங்க ராசியை பார்ப்பதால் சகலவிதமான யோகங்களும் தேடி வரும். குடும்பத்தில் குதூகலமாக இருப்பீர்கள். பிள்ளைகள் விசயத்தில் நல்லது நடக்கும். தன வரவு அதிகமாக இருக்கும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும், மன மகிழ்ச்சியோடு இருப்பீர்கள். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும். கூட்டு முயற்சி வெற்றியை தேடி தருவார். கடன் பிரச்சினைகள் தீரும்.

யோகம் தரும் சனிபகவான்
மேஷம் ராசிக்கு சனிபகவான் பத்து மற்றும் பதினொன்றாம் வீட்டு அதிபதி. தொழில் ஸ்தான அதிபதி தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து உங்க ராசிக்கு விரைய ஸ்தானம், சுக ஸ்தானம், மற்றும் களத்திர ஸ்தானத்தினை பார்க்கிறார். சனி பகவான் பார்வையால் சொந்த தொழில் யோகம் தேடி வருகிறது. சனியின் பார்வை சந்தோஷத்தை தரப்போகிறது. சனிபகவான் ஆட்சி பெற்று பத்தாம் வீட்டில் அமர்ந்து சசமகா யோகத்தை தருகிறார். திருமணம் கை கூடி வரும்.

கல்வி தடைகள் நீங்கும்
எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்திகள் தேடி வரும். உங்க ராசிக்கு நான்காம் வீட்டினை சனிபகவான் பார்ப்பதால் மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். வண்டி வாகனம் வாங்குவீர்கள். உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமையும். சுகமான சனி பெயர்ச்சியாக அமையப்போகிறது. அம்மாவின் உடல் நலனில் இருந்த பிரச்சினைகள் தீரும்.

சொந்த வீடு யோகம்
சொந்த வீட்டு கட்டி குடிபோகும் யோகம் வருகிறது. வீடு கட்டுவதில் இருந்த தடைகள் நீங்கும். ஆன்மீக சுற்றுலா செல்வீர்கள். தம்பதி சமேதராக கோவில் கோவிலாக சென்று ஆலய தரிசனம் செல்வீர்கள். புத்திரர்களால் நன்மைகள் நடைபெறும். ஆசைகள் கனவுகள் நிறைவேறும். சகல சௌபாக்கியங்களையும் தருவார் சனிபகவான். பூர்வீக சொத்துக்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். பிள்ளைகள் வெளிநாடு செல்வீர்கள். அப்பாவிற்கு இருந்த சங்கடங்கள் தீரும். அப்பாவிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

பைரவர் வழிபாடு நல்லது
தெய்வ கடாட்சம் உங்களுக்கு பரிபூரணமாக உள்ளது. சொந்த பந்தங்கள் உறவினர்கள் தேடி வருவார்கள். குல தெய்வ கோவிலுக்கு குடும்பத்தோடு சென்று வாருங்கள். மகான்களின் ஜீவ சமாதிக்கு சென்று வாருங்கள் நல்லது நடக்கும். குச்சனூர் சனிபகவானை சென்று வணங்கி வாருங்கள். ஏழைகளுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவி செய்யுங்கள் கால பைரவர் வழிபாடு செய்யுங்கள் நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள் நல்லது நடக்கும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications