Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனி பெயர்ச்சி பலன்கள் 2020 : இந்த ஆறு ராசிக்காரங்களுக்கு சனி என்ன செய்யப் போகிறார் தெரியுமா

2020 புத்தாண்டு பிறந்து விட்டது சனிபகவான் திருக்கணிதப்பஞ்சாங்கப்படி குருவின் வீடான தனுசு ராசியில் இருந்து சனிபகவான் தனது சொந்த வீடான மகரம் ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Sani Peyarchi 2020 | Mithunam | சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- மிதுன ராசிக்கு பலன்கள் எப்படி ?

    சென்னை: சனிப்பெயர்ச்சி திருக்கணிதப்பஞ்சாங்கப்படி இன்னும் சில நாட்களில் நிகழப்போகிறது. இந்த கிரகப்பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு நன்மையும், சில ராசிக்காரர்களுக்கு பாதிப்புகளும் ஏற்படும். இப்போது தனுசு ராசியில் உள்ள சனிபகவான் இனி தனது சொந்த வீடான மகரம் ராசிக்கு செல்லப்போகிறார்.

    சனிபகவானின் சஞ்சாரம், பார்வையினால் சிலருக்கு அதிர்ஷ்டமழை பொழியப்போகிறது வருமானம் கொட்டப்போகிறது காரணம் ஒருவரது ஜாதகத்தில் சனி பகவான் நல்ல நிலையில் இருந்தால் திரண்ட செல்வத்தை தந்து சமுதாயத்தில் உழைப்பால் உயர்ந்த உத்தமர் என்று அனைவராலும் பாராட்ட வைப்பார். அவர் தண்டிக்க வேண்டும் என்று நினைத்து விட்டால் பிச்சை எடுக்கும் நிலைக்குக் கூட கொண்டு போய் விட்டு விடுவார். நிகழ இருக்கும் சனிப்பெயர்ச்சியால் துலாம் முதல் மீனம் வரை என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

    சனீஸ்வர பகவான் ஒரு ராசி வீட்டை கடக்கும் கால அளவு இரண்டரை ஆண்டுகள் ஆகும். சந்திரன் நின்ற வீட்டுக்கு 12,1,2 ஆகிய மூன்று வீடுகளை கடக்க எடுத்துக்கொள்ளும் கால அளவு ஏழரை ஆண்டுகள் ஆகும். இதனையே ஏழரைச்சனி காலமாகும். 12ஆம் வீட்டில் சனி சஞ்சரிக்கும் காலத்தை விரைய சனி என்றும் ஒன்றாம் வீட்டில் சனி சஞ்சரிக்கும் காலத்தை ஜென்மச்சனி என்றும் இரண்டாம் வீட்டில் சனி சஞ்சரிக்கும் காலத்தை பாதச்சனி என்றும் கூறுவர்.

    ஒருவர் வாழ்வில் ஏழரைச்சனி என்பது மூன்று முறை வரலாம். முதல் முறை வருவது மங்குசனி என்றும் இரண்டாவது முறை வருவது பொங்குசனி என்றும் மூன்றாவது முறை வருவது மரணச்சனி என்றும் கூறப்படும். ஒவ்வொருவர் வாழ்விலும் ஏழரை சனி குறுக்கிட்டே தீரும்.

    சனி பகவானின் பலத்தைப்பொருத்துத்தான் ஒரு மனிதனின் நேர்மையை கூற முடியும். சனி திசையில் ஒருவருக்கு கிடைக்கும் அனுபவம் இருக்கிறதே அந்த அனுபவத்தை எங்கும் பெற முடியாது. ஒருவரது வாழ்க்கையில் ஏழரை சனி வரும்போது அவர் கும்பராசியாகவோ அல்லது மகர ராசியாகவோ, அல்லது துலாம், ரிஷபம், மிதுனம், கன்னி ராசிகளாகவோ இருந்தால் நல்வழிப்படுத்தி விடுவார்.

    இப்போது சனிபகவான் மகரத்தில் அமர்வதால் தனுசு, மகரம், கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியாக சஞ்சரிக்கிறார். மீனம் ராசிக்காரர்களுக்கு லாப சனியாகவும் துலாம் ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனியாகவும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு முயற்சி சனியகாவும் சஞ்சரிக்கப்போகும் சனிபகவானால் 2020ஆம் ஆண்டில் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

    துலாமிற்கு அர்த்தாஷ்டம சனி

    துலாமிற்கு அர்த்தாஷ்டம சனி

    துலாம் ராசிக்காரர்களுக்கு இதுநாள் வரை மூன்றாம் வீட்டில் முயற்சி ஸ்தானத்தில் அமர்ந்திருந்த சனி பகவான் இனி நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் அர்த்தாஷ்டம சனியாக அமரப்போகிறார். இந்த சஞ்சாரம் உங்களுக்கு சங்கடத்தை தரப்போவதில்லை மாறாக நிறைய சந்தோஷத்தைத்தான் தருவார் காரணம் சனிபகவான் உங்க ராசியில் உச்சமடைபவர்.

    சனிபகவான் உங்க ராசிக்கு நான்கு மற்றும் ஐந்தாம் வீட்டு அதிபதி. நான்கிற்கு அதிபதி நான்காம் வீட்டில் சஞ்சரிப்பது சாதகமான அம்சம்தான். அர்த்தாஷ்டம சனி ஆட்சி பெற்றிருப்பதால் முதலில் கெடுதல் செய்வது போல தோற்றமளித்தாலும் உங்களுக்கு நன்மைகளையே செய்வார். சனிபகவானின் பார்வை உங்க ராசிக்கு தொழில் ஸ்தானத்தின் மீதும் உங்க ராசியின் மீதும் விழுவது நன்மை தரக்கூடியதுதான். வீடு, மனை, வண்டி, வாகன, யோகம் அமையும். வெளிநாடு போகும் யோகமும் கூடி வருவதால் 2020ஆம் ஆண்டு துலாம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான ஆண்டாக அமைந்துள்ளது.

    விருச்சிகத்திற்கு முயற்சி சனி

    விருச்சிகத்திற்கு முயற்சி சனி

    ஏழரை சனியால் அவதிப்பட்டு வந்த விருச்சிக ராசிக்காரர்களுக்கு இனி அற்புதமான காலம் ஆரம்பமாகப்போகிறது. கடந்த சில ஆண்டுகாலமாகவே தொழில் நஷ்டம், குடும்பத்தில் குழப்பம், கடன் பிரச்சினை, மன அழுத்தம் என எத்தனையோ சங்கடங்களை சந்தித்து ஒரு வெறுப்பு நிலைக்கு போயிருந்தீர்கள். இனி உங்களுக்கு விடிவு காலம் பிறக்கப்போகிறது. குடும்பத்தில் குதூகலம் ஆரம்பமாகப்போகிறது. நீங்கள் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சனியின் பார்வை உங்களுக்கு சாதகமான இடங்களின் மீது விழுகிறது. பணவரவு அற்புதமாக இருக்கும். விலகிப்போன சொந்தங்கள் எல்லாம் நெருங்கி வருவார்கள். கொடுத்த கடன்கள் எல்லாம் உங்களுக்கு திரும்ப வரும்.

    பழைய பகை எல்லாம் முடிவுக்கு வரும். படித்தது எல்லாம் மறந்து போச்சே என்று மாணவர்கள் கவலைப்பட வேண்டாம் இனி தேர்வுகளை எல்லாம் ஜஸ்ட் லைக் தட் என மாணவர்கள் எதிர்கொள்வீர்கள். பெண்களின் மனபாரங்கள் குறையும் எட்டு எடுத்து வச்சு நடக்க முடியலையே என்று காலை பிடித்துக்கொண்டு அழுதவர்கள் ஓட்டப்போட்டியில் ஓடி ஜெயிக்கும் அளவிற்கு உடல் ஆரோக்கியம் அதிகமாகும். விருச்சிக ராசிக்காரர்களே சனியின் பிடியில் இருந்து விடுதலை பெற்ற சந்தோஷத்தை இனி உற்சாகமாக கொண்டாடுங்கள்

    தனுசுக்கு பாத சனி

    தனுசுக்கு பாத சனி

    குருவை ராசி நாதனாகக் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்களுக்கு விரைய சனி, ஜென்ம சனி என ஏழரை சனி காலத்தில் ஐந்து ஆண்டு காலத்தை கடந்து விட்டீர்கள். உங்க ராசியில் ராசி நாதன் குரு இப்போது ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். ஜென்மசனியும் இனி பாதசனியாக இரண்டரை ஆண்டுகாலம் மகரத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் குடும்பத்தை நல்லா கவனிங்க. வேலை பிசியில் குடும்பத்தை கவனிக்காவிட்டால் நீங்க பல சங்கடங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

    பணத்தை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள், யாருக்கும் கடன் கொடுக்கவோ, வாங்கவோ வேண்டாம். நீங்க கொடுத்த பணம் திரும்ப வராமலேயே போய்விடும். உங்க கால்களை கவனமாக பாருங்க காரணம் பாதசனி கால்களில்தான் குறி வைக்கும். இரண்டாம் வீட்டு அதிபதி சனி ஆட்சி பெற்று அமர்வதால் சோதனைகள் குறைவாகவே இருக்கும் என்றாலும் நீங்க விழிப்புணர்வுடன் வண்டி வாகனத்தில் சென்று வாருங்கள். சனியால் சங்கடங்கள் வந்தாலும் 2020ஆம் ஆண்டில் சந்தோஷமான தருணங்களை குருபகவான் உங்களுக்கு கொடுப்பார் கவலை வேண்டாம்.

    மகரம் ஜென்மசனி

    மகரம் ஜென்மசனி

    சனிபகவான் மகரம் ராசிக்கு ராசி நாதன். அவர் தன்னுடைய சொந்த வீடான மகரம், கும்பம் ராசிக்கு எந்த கெடுதலையும் செய்ய மாட்டார். அதே நேரத்தில் தவறு செய்பவர்களை தட்டிக்கேட்பார். ஆணவத்தில் ஆடுபவர்களை அடக்கி வைப்பார். காரணம் சனிபகவான் நீதிமான். யாராக இருந்தாலும் செய்யும் தவறுக்கு சரியான தண்டனைகளை கொடுத்தே தீருவார். மகரம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் இரண்டாவது கட்டமான ஜென்மசனி ஆரம்பமாகிறது. இந்த கால கட்டத்தில் சொந்த பந்தங்களின் மீது கூட நம்பிக்கை அற்றுப்போகும் அளவிற்கு சில சோதனைகள் வரலாம். சங்கடங்கள் வந்தாலும் அதை சாதனைகளாக மாற்றுவீர்கள். இனி இரண்டரை ஆண்டு காலம் நீங்க என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்பதை பார்க்க வேண்டும். சனி உங்க ராசியில் இருந்தாலும் அதே கால கட்டத்தில் குருவும் சில மாதங்கள் உங்க ராசியில் வந்து நீசமடைவார் என்பதால் பாதிப்பு அதிகம் இருக்காது.

    செய்யும் வேலையில் கவனம் வைக்கணும் பணத்தை தேவையில்லாமல் முதலீடு பண்ணாதீங்க ஏமாந்து போயிருவீங்க. அதிர்ஷ்டத்தை விட உங்க உழைப்பை நம்புங்க. ஏழரை சனி காலத்தில் பேராசை பெரு நஷ்டம் என்பதை நீங்க மனசுல வச்சிக்கணும். அப்போதான் உங்களுக்கு பணம் விரையமாகாமல் சேமிப்பாக மாறும். ஜென்ம சனி என்று பயப்பட தேவையில்லை எதையும் தைரியமாக எதிர்கொள்ளுங்கள்.

    கும்பம் விரைய சனி

    கும்பம் விரைய சனி

    கும்பம் ராசிக்காரர்களுக்கு கடந்த சில ஆண்டுகாலமாகவே பாக்ய சனி, தொழில் சனி, லாப சனி என கோச்சார ரீதியாக சந்தித்து வந்த சந்தோஷமான தருணங்கள், வருமானங்கள் என வசதிகளை கொடுத்து வந்தார் சனிபகவான். இனி உங்களுக்கு விரைய சனியாக சனிபகவான் உங்க ராசிக்கு 12ஆம் வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். இது உங்களுக்கு ஏழரை சனியின் தொடக்க காலமாகும். இந்த கால கட்டத்தில் குரு உங்களுக்கு லாப ஸ்தானத்தில் கேது உடன் இணைந்திருப்பதால் பணம் உங்களுக்கு தாராளமாக வரும். கூடவே செலவுகளும் வரிசை கட்டி வரும். உங்களுக்கு வரும் வருமானத்தை எல்லாம் சுப விரைய செலவுகளாக மாற்றுங்கள். வீடு, மனை சொத்துக்களாக மாற்றுங்கள்.

    உடன் பிறந்தவர்களுக்கு திருமணம் செய்து வையுங்கள். திருமணத்திற்கு காத்துக்கொண்டு இருக்கும் கும்பம் ராசிக்காரர்களுக்கு திருமணம் நடைபெறும். புத்திரபாக்கியம் கைகூடி வரும். உங்க ராசி நாதன் சனிபகவான் ஏழரை சனியாக சஞ்சரிக்கும் காலத்தில் சந்தோஷமாக மாற்றுங்கள். நேர்மையாகவும் நல்ல எண்ணத்தோடும் இருப்பவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. 2020ஆம் ஆண்டினை சந்தோஷமாக கடந்து விடலாம்.

    மீனம் ராசிக்கு லாப சனி

    மீனம் ராசிக்கு லாப சனி

    குருவை ராசிநாதனாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களே, உங்களுக்கு சனிபகவான் தொழில் சனியாக சஞ்சரித்தவர் இனி லாப சனியாக சஞ்சரிக்கப்போகிறார். நீங்க செய்யும் தொழிலில் வருமானம் கொட்டப்போகிறது. நீங்க தொட்டது எல்லாம் பொன்னாகப்போகிறது. எத்தனையோ சோதனைகளையும் சங்கடங்களையும் கடந்து வந்த நீங்கள் இனி சாதனைகளையும் சந்தோஷங்களையும் மட்டுமே பார்க்கப்போகிறீர்கள்.

    குருவும் உங்களுடைய தொழில் ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்க குடும்ப ஸ்தானம், சுக ஸ்தானம், ருண ரோக சத்ரு ஸ்தானத்தை பார்வையிடுகிறார். உங்களுக்கு வருமானம் ஒன்றுக்கு பத்தாக பெருகும். குடும்பத்தில் குதூகலம் அதிகமாகும். தன்னம்பிக்கை அதிகமாகும். வீடு சொத்து சேர்க்கை ஏற்படும். புதிய வண்டி வாகனம் இந்த ஆண்டு வாங்கும் யோகம் கை கூடி வரும். நோய்கள் வெளிப்பட்டாலும் அவை உங்களுக்கு குணமாகும். கடன்கள் அடைபடும் அளவிற்கு உங்களுக்கு வருமானம் வரும்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+