சனி பெயர்ச்சி.. கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சியான சனி.. 6 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிரடி மாற்றம்
சென்னை: சனிபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்தார். திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் சனி பெயர்ச்சி விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சனி பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படப்போகிறது.
30 ஆண்டுகள்: நவ கிரகங்களில் சனி மெதுவாக நகரும் கிரகம் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகாலம் தங்கும் சனிபகவான் 12 ராசிகளையும் சுற்றி வர 30 ஆண்டுகாலம் எடுத்துக்கொள்கிறார் எனவேதான் 30 ஆண்டுகள் வாழ்ந்தாரும் இல்லை தாழ்ந்தாரும் இல்லை என்கின்றனர். திருநள்ளாறு கோவில் பஞ்சாங்கப்படி சனிபகவான் மகரத்தில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.

சனியின் பயணம்: நவ கிரகங்களில் சனி ஒருவரின் ராசிக்கு 3,5,6,9,10,11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் கால கட்டத்தில் சங்கடங்கள் இல்லாத சந்தோஷங்களைத் தருவார். ஏழரை சனி காலத்தில் சனிபகவான் விரையசனி, ஜென்மசனி, பாதசனி என படிப்பினைகள் கொடுப்பார். அர்தாஷ்டம சனி, கண்டச்சனி, அஷ்டம சனி, என கஷ்டப்பட்டாலும் கடைசியில் நல்ல விசயங்களை கற்றுக்கொடுப்பார்.
யோகம் தரும் சனி பகவான்: சனிபகவானின் பார்வை 3,7,10ஆம் இடங்களின் மீது விழுகிறது. கும்ப ராசியில் இருந்து சனி பகவான் மூன்றாம் பார்வையாக மேஷ ராசியையும், ஏழாம் பார்வையாக சிம்ம ராசியையும், 10ஆம் பார்வையாக விருச்சிக ராசியையும் பார்வையிடுகிறார். நிகழ இருக்கும் சனிப்பெயர்ச்சியால் ஏழரைச்சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டம சனி, அஷ்டம சனியால் அவதிப்படபோகும் ராசிக்காரர்கள் யார் யார் என்று பார்க்கலாம். அதே நேரத்தில் கோடீஸ்வர யோகம், விபரீத ராஜயோகம் பெறும் ராசிக்காரர்கள் யார் யார் என்றும் பார்க்கலாம்.
லாப சனி: மேஷ ராசிக்காரர்களுக்கு லாப சனி காலமாகும். செய்யும் தொழிலில் லாபமும், அபரிமிதமான வருமானமும் கிடைக்கும். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சனிபகவான் பார்வை உங்க ராசியின் மீது விழுவதும் கூடுதல் பலம். உங்களின் செல்வாக்கும் சொல்வாக்கும் உயரும். வெளிநாடு செல்வதற்கான யோகமும் கைகூடி வரப்போகிறது.
தொழில் சனி: ரிஷப ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்வதால் செய்யும் தொழில் வளர்ச்சியடையும். ஆட்சி பெற்ற சனியால் சச யோகம் கிடைக்கப் போகிறது. சனியால் கொடுக்கும் பதவி, சொத்துக்களை யாராலும் அசைக்க முடியாது. திருமணம் நடக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். புது வேலை கிடைக்கும். பதவியில் புது உற்சாகம் கிடைக்கும்.
பாக்ய சனி: மிதுன ராசிக்காரர்களுக்கு பாக்கிய சனி தொடங்குகிறது. சனியால் யோகங்கள் அதிகம் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். அசையும் அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். நிறைய தான தர்மங்களை செய்யுங்கள். ஏனெனில் இது தர்ம சனி காலம். வேலையில் சம்பள உயர்வு புரமோசன் கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். நகை, பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும்.
அஷ்டம சனி: கடக ராசிக்காரர்களுக்கு எட்டாம் வீட்டில் அஷ்டம சனியாக பயணம் செய்யப்போகிறார். இந்த கால கட்டத்தில் சில பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் அவை உங்களுக்கு சாதகமாகவே முடியும். எட்டாம் வீட்டு அதிபதி சனி எட்டில் ஆட்சி பெற்று அமர்வது விபரீத ராஜயோக காலமாகும். திடீர் பணவரவு வந்து திக்குமுக்காட வைக்கும்.
கண்டச்சனி: சிம்ம ராசிக்காரர்களே சனிபகவான் உங்க ராசிக்கு ஏழாம் வீட்டில் கண்டச்சனியாக பயணம் செய்கிறார். சனிபகவான் உங்க ராசியை பார்ப்பதால் கண்டச்சனியையும் கஷ்டமில்லாமல் கடந்துவிடுவீர்கள். வேலை மாற்றம் இடமாற்றத்திற்கு காத்திருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். சனியால் மிகப்பெரிய யோகம் தேடி வரப்போகிறது. வேலையில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் வாழ்க்கையில் அதிரடி மாற்றத்தை தரப்போகிறார் சனி பகவான்.
ராஜயோக சனி: கன்னி ராசிக்காரர்களுக்கு சனி பகவான் ஆறாம் வீட்டில் அமர்ந்து முழு ராஜயோகத்தையும் தரப்போகிறார். சனி பகவான் தனது சொந்த வீட்டுக்கு வருவதால் நோய்கள் தீரும். கடன்கள் கட்டுப்படும். அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். திடீர் அதிர்ஷ்டங்கள் அமையும். புதிய தொழில்களை ஆரம்பிக்க லாபங்கள் கொட்டும். சனி ஆறாம் வீட்டு அதிபதி ஆறில் ஆட்சி பெற்று அமர்ந்து விபரீத ராஜயோகத்தை தரப்போகிறார். இனி இரண்டரை ஆண்டு காலம் உங்களுக்கு ராஜயோக காலம். செல்வமும் செல்வாக்கும் அதிகரிக்கும்.
பூர்வ புண்ணிய சனி: கஷ்டங்களையும் நோய்களையும் அனுபவித்த துலாம் ராசிக்காரர்களுக்கு இனி நல்லது அதிகம் நடக்கும். சனி உங்களுடைய ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி என்பதால் நிறைய புண்ணியங்கள் கிடைக்கப்போகிறது. வேலையில் இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். திருமண தடைகள் நீங்கும். வீடு, வாகனம் வாங்குவீர்கள். சிலருக்கு நன்மை தரும் இடமாற்றம் நடைபெறும். இந்த சனி பெயர்ச்சி பல நன்மைகளையும் யோகங்களையும் தரப்போகிறது. பணவரவு அதிகமாகவே இருக்கும். தொழில் வளர்ச்சி பெறும்.
அர்த்தாஷ்டம சனி: விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனிபகவான் நான்காம் வீட்டு அதிபதி நான்கில் ஆட்சி பெற்று அமர்வதால் பாதிப்புகள் இருக்காது. சனி பகவானின் பத்தாவது பார்வை உங்கள் ராசியின் மீது விழுவதால் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ஆசைகளை குறிக்கோள்களை சனி நிறைவேற்றுவார். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். வீடு, கார் என வாங்குவீர்கள். பணவரவும் தனவரவும் அதிகரிக்கும். அர்த்தாஷ்டம சனி காலம் என்பதால் சற்றே கவனமாக இருப்பது அவசியம். ஆஞ்சநேயர் வழிபாடு அற்புதங்களை நிகழ்த்தும்.
தைரிய சனி: தனுசு ராசிக்காரர்களை ஏழரை ஆண்டுகாலமாக சனி ஆட்டி படைத்தது. ஏழரை சனி விலகப்போவதால் இனி நன்மைகள் தேடி வரும் காலம். வராத பணம் தேடி வரும் முன்னேற்றத்திற்கு வழி கிடைக்கும். உங்களின் துன்பங்கள், துயரங்கள் நீங்கும் காலம் வந்து விட்டது. நீண்ட நாட்களுக்கு முன்பு கடனாக கொடுத்த பணம் வசூலாகும். பயணங்கள் வெற்றியை கொடுக்கும். மன நிம்மதி கொடுக்கும். உடல் நலத்தினால் கஷ்டப்பட்டவர்களுக்கு பாதிப்புகள் குறையும். திருநள்ளாறு சனிபகவானை வணங்க நன்மைகள் நடைபெறும்.
பாத சனி: கடந்த 5 ஆண்டு காலமாக ஏழரை சனியால் அதிகம் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் மகர ராசிக்காரர்களுக்கு இரண்டரை ஆண்டு காலம் பாத சனியாக தொடரப்போகிறது. இன்னும் கொஞ்சம் கவனம் தேவை. ஒவ்வொரு அடியையும் நிதானமாக எடுத்து வைக்க வேண்டும். தன வருமானமும் லாபமும் கிடைக்கும். கால்களில் அடிபடும் என்பதால் கூடுதல் கவனம் தேவைப்படும். விநாயகர் வழிபாடு, அனுமன் வழிபாடு சனியால் ஏற்படும் சங்கடத்தை போக்கும்.
ஜென்ம சனி: கும்ப ராசிக்காரர்களே ஏழரை சனியில் ஜென்ம சனி நடைபெறுகிறது. சனி பகவான் தன்னுடைய ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். வேலை செய்யும் இடத்தில் நிம்மதியை தருவார். படிப்பினைகளால் உங்களை பக்குவப்படுத்துவார். சனி பகவான் உங்கள் ராசிநாதன் என்பதால் அதிக சிரமங்கள் இருக்காது என்றாலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்யுங்கள். முதியோர்களுக்கு தானம் கொடுப்பது பாதிப்பை குறைக்கும்.
விரைய சனி: மீன ராசிக்கு விரைய சனியாக ஏழரை சனி தொடங்குகிறது. விபரீத ராஜயோகத்தையும் தரப்போகிறார் சனி. காரணம் சனி பகவான் 12ஆம் வீட்டில் ஆட்சி பெற்று பயணம் செய்வதால் லாப சனி காலத்தில் சம்பாதித்த பணத்தை செலவு பண்ணும் காலம். இந்த கால கட்டத்தில் பணத்தை பணமாக வைத்திருக்காமல் சொத்துக்களில் முதலீடு செய்யலாம். சுப விரையத்திற்கு செலவு செய்வது நல்லது. ஏழரை சனி தொடங்குவதால் ஏழைகளுக்கும் முதியோர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவி செய்வதன் மூலம் பாதிப்பை குறைக்கலாம். சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி சனி பகவானை வழிபட பாதிப்புகள் குறையும்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications