சனி பெயர்ச்சி பலன் 2023: சனி வக்ர பெயர்ச்சியால் ஜூன் முதல் திடீர் ராஜயோகம் யாருக்கு?யாரெல்லாம் கவனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நவ கிரகங்களில் சனி பகவானுக்கு பயப்படாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சனிப்பெயர்ச்சி வந்தாலே பரிகாரம் செய்ய சனி பகவானை தேடி ஓடுவார்கள். சனிபகவான் தற்போது கும்ப ராசியில் பயணம் செய்தாலும் ஜூன் முதல் வக்ரநிலையில் பயணம் செய்வார். 140 நாட்கள் சனி பின்னோக்கி நகர்ந்து மகர ராசியில் பயணம் செய்யப்போவதால் ஜனவரி முதல் யாருக்கெல்லாம் பாதிப்பாக இருந்ததோ அவர்களுக்கு சில நன்மைகளையும் யாருக்கெல்லாம் சாதகமாக இருந்ததோ அவர்களுக்கு சில பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. யாருக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

பொதுவாகவே இரண்டரை ஆண்டுகாலம் ஒரு ராசியில் தங்கும் சனி ஆண்டுக்கு ஒருமுறை வக்ரமடைகிறார். சனிக்கு ஐந்தாம் வீட்டில் சூரியன் சஞ்சரிக்கும் போது வக்ரம் பெற்று ஒன்பதாம் வீட்டிற்கு சூரியன் வரும் போது வக்ர நிவர்த்தியடைவார். சுமார் 140 நாட்கள் வக்ரகதியில் சனிபகவான் பயணம் செய்வார். திருக்கணித பஞ்சாங்கப்படி ஜூன் 17ஆம் தேதி சனியின் வக்ர காலம் ஆரம்பிக்கிறது. நவம்பர் 4ஆம் தேதி சனிபகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். வாக்கிய பஞ்சாங்கப்படி சனிபகவானின் வக்ர காலம் ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20 வரை நீடிக்கிறது. ஜூன் முதல் நவம்பர் வரை நான்கு மாத காலம் சனிபகவான் வக்கிரமாக செல்வதனால் 12 ராசிக்காரர்களுக்கும் ஏற்படும் பலன்களைப் பார்க்கலாம்.

Sani Vakara Peyarchi 2023: Saturn Retrograde 2023 Who will get Raja yogam Effects and remedies

மேஷம்: சனி பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் இருந்து பத்தாம் வீட்டிற்கு செல்லப்போகிறார். ஜென்ம குருவும் ராகுவும் ராசியில் இருக்கின்றனர். சிலருக்கு வேலை மாற்றம் ஏற்படும். வீடு மாற வாய்ப்பு உள்ளது. புதிய வண்டி வாகனம் வாங்குவீர்கள். சுய தொழில் செய்பவர்கள் பணத்தை அதிகம் முதலீடு செய்ய வேண்டாம். உழைப்பு அதிகமாக இருந்தாலும் ஊதியம் குறைவாகவே இருக்கும். பொறுமை அவசியம். மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் அமையும் வகையில் பள்ளி, கல்லூரிகளில் இடம் கிடைக்கும் உற்சாகமாக இருப்பீர்கள்.

Sani Vakara Peyarchi 2023: Saturn Retrograde 2023 Who will get Raja yogam Effects and remedies

ரிஷபம்: சனி பகவான் உங்க ராசிக்கு பாக்ய ஸ்தானத்திற்கு வரப்போகிறார். வக்ர மடைந்துள்ள இந்த கால கட்டத்தில் தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். சோம்பேறித்தனத்தை விடுங்கள். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளிடம் பேசும் போது கவனம் தேவை. உடன் பிறந்தவர்களால் மன வருத்தங்கள் எற்படும். தடைகள் நிவர்த்தியாகும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. சிறு சிறு விபத்துக்கள் எற்படலாம். உயர்கல்வி படிப்பவர்களுக்கு சிறு தடைகள் ஏற்பட்டு பின்னர் நிவர்த்தியாகும். விலை உயர்ந்த பொருட்களை பத்திரப்படுத்துங்கள்.

மிதுனம்: சனிபகவானால் உங்களுக்கு எந்த பாதிப்பு இல்லை நன்மையே அதிகம் நடக்கிறது. புதிய வேலை கிடைக்கும். சுபகாரியங்களால் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணம் நடைபெறும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல செய்தி வரும். நண்பர்களால் நன்மைகள் அதிகம் நடக்கும். கோவில்களுக்கு ஆன்மீக பயணம் செல்வீர்கள். நோய் பாதிப்புகளால் சிலருக்கு அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியிருக்கும். பற்கள் பாதிக்கப்பட்டு பிடுங்க வேண்டியிருக்கலாம். விஐபிக்கள், அரசியல்வாதிகளின் நட்பு கிடைக்கும். நன்மைகள் அதிகம் நடைபெறும் காலம் என்பதால் வெற்றி நடை போடுங்கள். ஒருமுறை குச்சனூர் சென்று சனிபகவானை தரிசனம் செய்து வாருங்கள்.

கடகம்: அஷ்டமத்து சனி ஆட்டிப்படைத்துக்கொண்டு உள்ளது. நான்கு மாத காலம் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விடுங்கள். சனியின் சஞ்சாரத்தினால் வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். மதிப்பும் மரியாதையும் கூடும். புதிய செயல்களை செய்யும் போது எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யுங்கள். வேலைப்பளு அதிகரிக்கும். கோவில்களுக்கு சென்று இஷ்ட தெய்வங்களை வழிபடுவதன் மூலம் கஷ்டங்கள் காணாமல் போகும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். காதல் விவகாரங்கள் கை கூடும். திருமணம் நடைபெறும். தேவையில்லாத ஆடம்பர செலவுகளை தவிர்த்து விடுங்கள்

Sani Vakara Peyarchi 2023: Saturn Retrograde 2023 Who will get Raja yogam Effects and remedies

சிம்மம்: கண்ட சனி கழுத்தை நெரித்திருக்கும். இந்த நான்கு மாத காலம் நிம்மதியாக இருங்கள். உடம்பிலும் மனதிலும் உற்சாகம் அதிகரிக்கும் சுறுசுறுப்பாக வேலை செய்வீர்கள். காதல் கைகூடும். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். வேலை மாற்றம் ஏற்படும் யோசித்து செயல்படுங்க. இருக்கிறதை விட்டுட்டு பறக்கிறதுக்கு ஆசைப்படாதீங்க. பொன், பொருள், ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். உல்லாச பயணம் செல்வீர்கள். சுப விரையம் ஏற்படும். பிள்ளை இல்லையே என்று கவலைப்பட்டவர்களின் மனக்கவலை தீரும். ஆன்மீக பயணம் மனதிற்கு அமைதியை தரும்.

கன்னி: சனிபெயர்ச்சி உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக்கொடுத்துக்கொண்டிருக்கிறது. ஆறாம் வீட்டில் உள்ள சனி வக்ரமாகும் இந்த கால கட்டத்தில் சொந்த வீடு, வண்டி வாகனங்கள் வாங்கலாம். சக ஊழியர்களால் நன்மைகள் அதிகம் நடைபெறும். வேலை செய்யும் இடத்தில் சில வில்லங்கம் வரும் கவனம் தேவை. படிப்புக்காக குழந்தைகளை விட்டு பிரியும் காலம் இது. குழந்தைகளால் சுப விரையம் ஏற்படும். சனிபகவானை சனிக்கிழமைகளில் எள் தீபம் ஏற்றி வணங்கலாம்.

துலாம்: சனி பகவான் வக்ரமடைந்து நான்காம் வீட்டிற்கு செல்கிறார். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். உல்லாச பயணங்களினால் மனதில் நிம்மதி அதிகரிக்கும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். சுய தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் நன்மைகள் நடைபெறும். உறவினர்களால் இருந்து வந்த உபத்திரவங்கள் நீங்கும். சின்னச்சின்ன மனக்கசப்புகள் நீங்கி குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும்.

Sani Vakara Peyarchi 2023: Saturn Retrograde 2023 Who will get Raja yogam Effects and remedies

விருச்சிகம்: அர்த்தாஷ்டம சனியால் அவதிப்பட்டு வந்த உங்களுக்கு ஜூன் முதல் கொஞ்சம் ரிலாக்ஸ் கிடைக்கப்போகிறது. கடனாக கொடுத்த பணம் வராது என்று நினைத்த நிலையில் உங்களுக்கு வந்து சேரும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும் தடைபட்டு வந்த சுபகாரியங்கள் நடைபெறும். சிலருக்கு படிப்பு, வேலைக்காக வெளியூர் வெளிநாடு செல்லும் யோகம் அமையும். காதல் விவகாரங்களால் மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் அதிகரிக்கும். திருமண யோகமும் கைகூடி வரப்போகிறது.

தனசு: ஏழரை சனி முடிந்ததே என்று நினைத்த உங்களுக்கு மீண்டும் சனி வக்ரமடைந்து மகர ராசிக்கு வருவது சற்றே சிரமம்தான். அதே நேரத்தில் குருபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பது சிரமத்தை சற்றே குறைக்கும். நீங்கள் பணத்தை கடனாக கொடுத்து தராமல் இழுத்தடித்தவர்கள் பணத்தை தேடி வந்து கொடுப்பார்கள். எதிர்பாராத பணவரவு மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். புதிய முயற்சிகளில் தடைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது கவனம் தேவை. வாகனங்களில் செல்லும் போது கவனமும் எச்சரிக்கையும் தேவை. வியாழக்கிழமைகளில் அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

மகரம்: ஏழரை சனியில் பாத சனி நடைபெறுகிறது. உடல் நிலையில் பாதிப்பு அதிகம் இருந்தது. இந்த நான்கு மாத காலம் உடல் நிலை பாதிப்புகள் சற்று குறைய வாய்ப்பு உள்ளது. தேவையற்ற முதலீடுகளை தவிர்க்கவும். தேவையற்ற விசயங்களில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்க வேண்டாம். வேலைகளில் இழுபறி ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் சிறு பிரச்சினைகள் ஏற்படும் அவசரப்பட்டு வேலையை விட்டு விட வேண்டாம். அம்மாவின் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள்.

Sani Vakara Peyarchi 2023: Saturn Retrograde 2023 Who will get Raja yogam Effects and remedies

கும்பம்: ஜென்ம சனி காலம் நெருக்கடியை கொடுக்கும். கஷ்டங்களை கடந்து வந்திருப்பீர்கள். ஜூன் மாதம் முதல் உறவினர்கள், நண்பர்களுடன் இதுநாள் வரை இருந்து வந்த மனவருத்தங்கள் நீங்கும். புதிய சொத்துக்கள், வண்டி வாகனங்கள் வாங்குவீர்கள். பெண்கள் ஆடைகள், பொன் நகைகள் வாங்குவீர்கள். அடிக்கடி வெளியூர் பயணம் ஏற்படும். பிள்ளைகளுக்கு திருமணம் கை வரும். மாணவர்களுக்கு நல்ல கல்லூரி, பல்கலைக்கழகங்களில் படிக்க வாய்ப்பு அமையும்.

மீனம்: சனி பகவான் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்திற்கு வந்துள்ளார். ஏழரை சனி தொடங்கியுள்ளது. சனி வக்ரமடைவதால் ஏழரை சனியின் பாதிப்பு சற்றே குறையும். மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் ஏற்படும் அரசு வழியில் நன்மைகள் நடைபெறும். பணவரவு அதிகரிக்கும் கூடவே செலவுகளும் எட்டிப்பார்க்கும். விரைய செலவுகளை தவிர்த்து சுப செலவுகளாக மாற்றுங்கள். திருமணம் நடைபெறாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வணங்குங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+