Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனி வக்ர பெயர்ச்சி பலன் 2023: சனி பார்வையால் 7 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் திடீர் மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சனி பகவான் கும்ப ராசியில் வக்ரமடைந்துள்ளார். சனிப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் பாதிப்பாக இருந்ததோ அவர்களுக்கு சில நன்மைகள் நடைபெறப்போகிறது. சனி பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் சாதகமாக இருந்ததோ அவர்களுக்கு சில பாதிப்பு உண்டாக வாய்ப்புகள் அதிகம். நவம்பர் மாதம் வரை சனிபகவான் வக்ரமாக பயணம் செய்யும் காலத்தில் யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

Sani vakra peyarchi palan 2023: Saturn Transit retrograde 2023 Effects on Zodiac Signs

மேஷம்: சனி பகவான் உங்கள் ராசிக்கு 11வது வீட்டில் லாப ஸ்தானத்தில் வக்ரமடைவதால் சுப காரியங்கள் நடைபெறும். தடைபட்ட பல வேலைகள் நடைபெறும். அரைகுறையாக நின்ற பல வேலைகளை முடிப்பீர்கள். சனி பார்வை உங்கள் ராசி மீது விழுகிறது. நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும். பயணங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். முடங்கிக் கிடந்த வேலைகள் முழுமையடையும். சனி வக்ரத்தினால் பாதிப்பு குறைய பறவைகள், விலங்குகள், ஆதரவற்ரோர், ஊனமுற்றோருக்கு உணவுகள் உதவிகள் செய்யலாம். சனிக்கிழமையன்று எள் தீபம் ஏற்றி வழிபடலாம்.

ரிஷபம்: தொழிலில் நெருக்கடிகள் ஏற்படும். வேலையில் ஒரு திருப்தியற்ற சூழ்நிலை நிலவும். பார்க்கும் வேலையில் அவசரப்பட்டு விட்டு விடக் கூடாது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சரியான நேரத்திற்கு சாப்பிடுங்கள். திடீர் மருத்துவ செலவுகள் வரும். கவனமும் நிதானமும் தேவை.
சனிக்கிழமை தயிர் எள் கலந்த சாதம் காக்கைக்கு வைக்க நன்மைகள் நடைபெறும்.

மிதுனம்: சனிபகவான் வக்ரமடையும் இந்த கால கட்டத்தில் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும். வேலை கிடைப்பதில் தடைகள் ஏற்படும். வேலை கிடைத்தாலும் அலைச்சல்களும் நிம்மதியற்ற சூழ்நிலையும் ஏற்படும். கொடுக்கல் வாங்கல்கள் சுமூகமாக இருக்காது. மேலும் தகப்பனாரின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. சனிக்கிழமை சனி பகவானை எள் தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

கடகம்: அஷ்டமத்து சனியாக இருப்பதால் கிடைத்த வேலையை திருப்திகரமாக செய்து வரவும். வேறு வேலைக்கு முயற்சி செய்யும் முன்பாக நன்கு ஆலோசித்து முயற்சி செய்யவும் பெண்கள் தங்கள் உடல் நலனில் அக்கறை காட்டவும். கடன் பிரச்னை தீரும். சளித்தொந்தரவு, காய்ச்சல், பல் வலி, கண்ணில் குறைபாடுகள் வந்து நீங்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

Sani vakra peyarchi palan 2023: Saturn Transit retrograde 2023 Effects on Zodiac Signs

சிம்மம்: கண்டச்சனி காலமாக இருப்பதால் ஒரு சிலருக்கு வீடு, மனை, வண்டி, வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க சந்தர்ப்பம் அமையும். வேலை விசயமாக திடீர் இடமாற்றம் ஏற்படும். அலுவலகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சனி பகவான் பார்வையால் அதிக பண வருமானம் வரும். எதிர்காலத்திற்காக பணம் சேமிக்கத் தொடங்குவீர்கள். பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். சிலருக்கு காதல் மலரும் திருமணம் நடைபெறும். உடல் ஆரோக்யத்தில் அதிக கவனம் தேவை.

கன்னி: புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். சுப காரியங்கள் அதிகம் நடைபெறும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். சனி வக்ரமடைந்தாலும் உங்களுக்கு பூர்வீக சொத்து பிரச்சினைகள் நீங்கும். வெளிநாடுக்கு வேலைக்கு செல்வதற்கான வாய்ப்புகள் தேடிவரும்.

துலாம்: வேலை இல்லாமல் சுற்றி திரிந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கையில் தாரளமாக பணப்புழக்கம் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடி வரும். கடன் பிரச்னையால் தொல்லை ஏற்படும். நோய்கள் தீரும். வீண் செலவுகள், அலைச்சல், வேலைகளில் இழுபறி நிலை ஏற்படும். பாதிப்புகள் தீர சனிக்கிழமையில் சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடவும்.

விருச்சிகம்: வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கவும். வேலைக்கு ஏற்ற ஊதிய உயர்வும் கிடைக்கும். கையில் பணப்புழக்கம் சரளமாக இருக்கும். புதிய தொழில் தொடங்க வாய்ப்பு தேடி வரும். சனி பார்வை உங்கள் ராசி மீது விழுகிறது. புரமோசன் தேடி வரும். வியாபாரம் தொழிலில் உங்களுக்கு லாபம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களைக் ஆலோசிக்காமல் எந்த ஒரு முக்கிய முடிவும் எடுக்க வேண்டாம். பாதிப்புகள் குறைய அனுமனுக்கு வெண்ணெய் சாற்றி வணங்கலாம்.

Sani vakra peyarchi palan 2023: Saturn Transit retrograde 2023 Effects on Zodiac Signs

தனுசு: சனி பகவான் வக்ரமடையும் இந்த காலத்தில் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். கடன் வாங்கி தேவையில்லாத சிக்கலில் சிக்கிக்கொள்ள வேண்டாம். பயணங்களால் அலைச்சல்களும் அசதியும் அதிகரிக்கும். மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால் வீடு நிலம் வாங்குவீர்கள். மனைவிக்கு வேலை கிடைக்கும். வீண் விமர்சனங்களைத் தவிர்க்கவும். பாதிப்புகள் குறைய திருநள்ளாறு நள தீர்த்தக்குளத்தில் நீராடி சனிபகவானை வணங்கலாம்.

மகரம்: சனி பகவான் வக்ரமடைவதால் திடீர் பணவரவு வரும். கடனாக கொடுத்த பணம் வட்டியுடன் திரும்ப வரும். வேலையில் புரமோசனும் வருமானமும் அதிகரிக்கும். சுப காரியங்கள், சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறும். குடும்பத்தோடு புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். பணியிடங்களில் வேலைப்பளு ஏற்படும். சனிக்கிழமை சனிபகவானை வணங்க நன்மைகள் அதிகம் நடைபெறும்.

கும்பம்: சனிபகவான் உங்கள் ஜென்ம ராசியில் பயணம் செய்கிறார். வேலையில் இருந்த பிரச்சினைகள் சிக்கல்கள் நீங்கும். பண விசயத்தில் உறவினர்களிடம் இதுவரை இருந்த வந்த கருத்து வேறுபாடு நீங்கி நட்பும் நேசமும் உருவாகும். திருமணம் நடைபெறாதவர்களுக்கு திருமணம் கைகூடி வரும். பிள்ளைகளுக்கு திருமணம் நடைபெறும் காலமாகும். விலையுயர்ந்த பொருள்களை கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். யாரையும் நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். சனிக்கிழமையில் பெருமாள் கோவில்களுக்கு சென்று வணங்கி வரலாம்.

மீனம்: சனி பகவான் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். வேலைக்காக வெளியூர் செல்வீர்கள். வெளிநாடு சென்று வர விசா கிடைக்கும். முக்கிய விஐபிக்களின் அறிமுகம் கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். செலவுகள் அதிகரிக்கும். பெண்களுக்கு பண வருமானம் அதிகரிக்கும். பொன்நகை சேர்க்கை அதிகரிக்கும். பாதிப்புகள் நீங்க காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி தினத்தில் விளக்கு ஏற்றி வழிபடலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+