சிம்மராசிக்காரர் ஸ்டாலினுக்கு சனிப்பெயர்ச்சி எப்படியிருக்கு தெரியுமா?
திமுக செயல்தலைவர் ஸ்டாலினுக்கு இந்த சனிப்பெயர்ச்சி எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்வோம்.
Recommended Video

சென்னை: சனிப்பெயர்ச்சி சில அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று கூறப்படும் நிலையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலினுக்கு பதவி பொறுப்புகள் மனம் போல் கிட்டும் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
ஸ்டாலின் ராசி சிம்மம், பூரம் நட்சத்திரம். விருச்சிகத்தில் இருந்து சனிபகவான் தனுசு ராசிக்கு இடம் பெயர்ச்சியடைகிறார். இது சிம்ம ராசிக்கு 5வது இடமாகும். புண்ணிய சனியாக அமர்கிறார் சனிபகவான்.
இதுநாள் வரை சிம்மராசிக்கு நான்காம் இடத்தில் அர்த்தாஷ்டம சனியாக அமர்ந்திருந்தார் சனிபகவான். உடல்நலத்தில் பிரச்சினை, முயற்சியில் தடங்கள், தோல்வி என இருந்தது.

சனிப்பெயர்ச்சி எப்படி இருக்கும்?
5வது இடத்தில் சஞ்சாரிக்கும் சனிபகவானால் நோய் நொடிகள் பிரச்சினைகள் தீரும். பகைவர்கள் நண்பர்களாக மாறுவார்கள். அல்லல்பட்டவர்களுக்கு வியாதிகளில் இருந்து விடுதலை கிடைக்கும்.

சனியில் 7வது இட பார்வை
புதிய வாய்ப்புகள் உருவாகும். கூட்டணிகளும் உருவாகும். சனிபகவான் உங்களின் ராசிக்கு 7வது இடத்தை 3வது பார்வையாக பார்ப்பதால் கூட்டணியில் இருப்பவர்கள் பிரிந்து செல்ல வாய்ப்பு ஏற்படும். புதிய கூட்டணிக்கு வாய்ப்பு ஏற்படும்.

அண்ணனின் ஆதரவு
சனிபகவான் தசாம்ச பார்வையாக உங்கள் ராசிக்கு 11வது இடத்தை பார்க்கிறார். இதன் மூலம் மூத்த சகோதரரின் ஆதரவு கிடைக்கும். இதுநாள் வரை அண்ணன் தம்பிக்குள் இருந்த பிரிவுகள் நீங்கும். அண்ணனின் ஆதரவு பூரணமாக கிடைக்கும்.

மூத்தவர்களுடன் நட்பு
சனிபகவான் 2வது இடத்தை லாப ஸ்தானத்தை பார்க்கிறார். மூத்தவர்களிடம் ஆலோசனை பெறலாம். வாக்கு ஸ்தானத்தை பார்ப்பதால் ஒவ்வொரு வார்த்தையையும் யோசித்து பேச வேண்டும். ஏனெனில் வார்த்தைகள் பிரச்சினைக்கு காரணமாகிவிடும்.

பதவி பொறுப்புகள்
பூரம் நட்சத்திரக்காரர் ஸ்டாலினுக்கு பதவி, பொறுப்புகள் கைகூடி வரும். மனம் போல பதவி கிடைத்தாலும் கர்வம் மட்டும் ஆகாதுங்க. கூட்டணி கட்சியினருடன் பேசும் போது வார்த்தைகளில் அன்பு இருக்கட்டும்.

முயற்சிக்கு வெற்றி
இதுநாள்வரை செய்த முயற்சிக்கு பலன் கிடைக்கும் காலமிது. பலனை அனுபவிக்க நிதானம் அவசியம். காரணம் வாக்கு சனி வம்பில் இழுத்து விடுவார். மேலும் நன்மைகள் நடக்க மகான்கள் தரிசனம் அவசியம். திருவாதவூரில் எழுந்தருளியுள்ள சனீஸ்வரனை வழிபடலாம். திருப்பதி சென்று வந்தால் திருப்பம் ஏற்படும்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications