Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சார்வரி தமிழ் வருடத்தில் எந்த ராசி அரசியல் தலைவருக்கு ராஜயோகம் யோகம் கிடைக்கும் தெரியுமா

சார்வரி தமிழ்புத்தாண்டு பிறக்கப் போகிறது. இந்த தமிழ் புத்தாண்டில் நிதி நிலைமை எப்படி இருக்கும் வேலை வாய்ப்பு, பிசினஸ் எப்படி இருக்கும் என்று ராசிபலன் எழுதியிருக்கிறோம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சார்வரி தமிழ் புத்தாண்டு இன்னும் சில வாரங்களில் பிறக்கப் போகிறது. சார்வரி தமிழ் புத்தாண்டில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்த அரசியல்வாதிகளுக்கு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். யாருக்கு பதவியோகம் இருக்கிறது. ஆட்சியை பிடிக்கும் யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு இருக்கிறது என்று நவகிரகங்களின் சஞ்சாரத்தை வைத்து பார்க்கலாம்.

நாடாளும் யோகம் எல்லோருக்கும் கிடைத்து விடாது பிறந்த ஜாதகமும் தசாபுத்தியும் சாதகமாக இருக்க வேண்டும். இந்த சார்வரி புத்தாண்டில் நவகிரகங்கள் பெயர்ச்சி பல ராசிக்காரர்களுக்கு நன்மையையும் சிலருக்கு நன்மை கலந்த தீமையையும் கொடுக்கப்போகிறது. உலகமே கொரோனா பீதியில் இருந்தாலும் இன்னும் ஓராண்டில் தமிழக சட்டசபைக்கு தேர்தல் வரப்போகிறது. தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் தயாராகி வரும் நிலையில் புதிய அரசியல் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன.

2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் போது முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியை பார்த்தால் மகரம் ராசியில் சனி சஞ்சரிக்க, கும்பம் ராசியில் குரு அதிசாரமாக சஞ்சரிப்பார், ராகு ரிஷபம் ராசியிலும் கேது விருச்சிகத்திலும் சஞ்சரிப்பார். மாத கோள்களின் சஞ்சாரத்தை பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். மேஷம் முதல் மீனம் வரை எந்த அரசியல் கட்சி தலைவர்களுக்கு கிரகங்கள் சாதகமாக இருக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

மேஷம் ராசிக்கார அரசியல் தலைவர்களே, உங்களுக்கு குரு லாப ஸ்தானத்திலும் சனி தொழில் ஸ்தானத்திலும் ராகு குடும்ப ஸ்தானத்திலும் கேது அஷ்டம ஸ்தானத்திலும் சஞ்சரிப்பார்கள். சமுதாயத்தில் மதிப்பு மரியாதை கூடும். மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகள் வரும் அதை சமாளிப்பீர்கள். பிரச்சார பயணங்களை பாதுகாப்பாக செய்யுங்க. உணவு விசயத்தில கவனமாக இருங்க. பேச்சில் கவனமாக இருங்க குறிப்பா மீடியா மக்கள் கிட்ட பேட்டி கொடுக்கும் போது நிதானமாக பேசுங்க. கோபப்படாதீங்க அதுவே அப்புறம் சிக்கலாகிவிடும்.

ரிஷபம்

ரிஷபம்


ரிஷபம் ராசியை சேர்ந்தவர்களுக்கு இந்த சார்வரி ஆண்டில் நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். சனியின் சஞ்சாரம் பாக்ய ஸ்தானத்தில் சாதகமாக இருப்பதால் நீங்க எதற்கும் கவலைப்படாதீங்க. பதவிகள் பட்டங்கள் தேடி வரும். கட்சிப்பணிக்காக வீண் விரைய செலவுகள் செய்ய வேண்டியிருக்கும்.
சின்னச் சின்ன மனக்குழப்பம் இருந்தாலும் உங்க ராசிக்கு குடும்ப ஸ்தானத்தின் மீது குருவின் பார்வை விழுவதால் பணவரவு அதிகமாகும்.

மிதுனம்

மிதுனம்

மிதுனம் ராசிக்கார அரசியல்வாதிகளுக்கு இந்த ஆண்டு சாதகமான பலன்கள் அதிகம் நடக்கும். வாய்ப்புகள் தேடி வரும் பேச்சிலும் செயலிலும் நிதானம் தேவை. மக்களின் ஆதரவு கிடைக்கும். வதந்திகள் அதிகம் கிளம்பும் விழிப்புணர்வோடு இருங்கள். செய்தியாளர்களிடம் பேசும் போது கவனமாக இருங்க.

கடகம்

கடகம்

கடகம் ராசிக்காரர்களே, இந்த ஆண்டு கண்டச்சனி காலம் என்பதால் மக்களின் ஆதரவை பெற அதிகம் பாடுபட வேண்டியிருக்கும். வாக்கு கொடுக்காதீர்கள் அப்புறம் மாட்டிக்கொள்வீர்கள். கட்சிப்பணிக்காக விரைய செலவுகள் ஏற்படும். வெளியூர் வெளிநாடு பயணங்கள் வேண்டாம் தவிர்த்து விடுங்கள்.

சிம்மம்

சிம்மம்

சிம்மராசிக்கார அரசியல்வாதிகளே உங்களுக்கு இது பொற்கால ஆண்டாக அமையப்போகிறது. சட்டசபைத் தேர்தலை தைரியமாக எதிர்கொள்ளுங்கள். உங்களின் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். மக்கள் செல்வாக்கு அதிகம் கிடைக்கும். சனி 6 ஆம் வீட்டில் வலுவாக இருப்பதால் மக்களின் செல்வாக்குடன் எதிரிகள் தொல்லை ஒழியும். மக்களின் அமோக ஆதரவு கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகளை வெல்வீர்கள். வலிமை உண்டாகும். ரொம்ப தைரியமாக இருங்க.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்கார அரசியல்வாதிகளுக்கு இந்த ஆண்டு பொன்னான ஆண்டாக இருக்கும். நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேற்றுவீர்கள். மக்களின் ஆதரவால் பெயர் புகழ் கிடைக்கும் செல்வம் செல்வாக்கு கிடைக்கும். பணம், புகழ் தேடி வரும். உங்கள் பலம் கூடும். உங்களின் நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள்.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களே, பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். கட்சிப்பணிகளுக்காக வீண் செலவு செய்வீர்கள். நிதானமாக செயல்படுங்கள். பேச்சில் நிதானமாக இருங்க. வாக்கு கொடுக்காதீங்க மாட்டிக்குவீங்க.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கார அரசியல்வாதிகளுக்கு சனி உங்களின் ராசிக்கு 3 வது வீட்டில் இருக்கும். உங்களுக்கு மக்களின் ஆதரவு கிடைக்கும். நீண்ட காலமாக எதிர்பார்த்த பதவிகள் தேடி வரும். சாதாரணமானவர்கள் மாண்புமிகுவாக மாறும் காலம் வந்து விட்டது. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். சமுதாயத்தில் உங்களுக்கு மதிப்பு மரியாதை கூடும். வெளியூர் வெளிநாடு பயணங்கள் தேடி வரும்.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்கார அரசியல்வாதிகளுக்கு ஏழரை சனியில் பாத சனி படுத்தி எடுக்கிறது. கூட்டணி கட்சிக்காரர்களுடன் அனுசரித்து செல்லவும். எதிலும் சிந்தித்து செயல்படுங்கள். பேச்சில் நிதானமாக இருங்கள். மக்களிடம் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். தடைகளுக்குப்பின்னர் உயர்பதவிகள் தேடி வரும்.

மகரம்

மகரம்

மகரம் ராசிக்கார அரசியல்வாதிகளுக்கு ஏழரைசனியில் ஜென்மசனி நடக்கிறது. பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள். அரசியல்வாதிகள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாமல் போகும். முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும். கட்சிப்பணிக்காக நிறைய செலவு செய்வீர்கள். தேவையற்ற பயணங்கள் உண்டாகும். அலைச்சல் அதிகரிக்கும். உடல் நலத்தில் கவனமாக இருங்கள்.

கும்பம்

கும்பம்

கும்பம் ராசிக்கார அரசியல்வாதிகளுக்கு ஏழரை சனியில் விரைய சனி நடக்கிறது. பொதுக்கூட்டங்களில் பேசும் போது கவனமாக இருங்கள். சனி விரைய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நிறைய செலவு பண்ணுவீங்க. கட்சிப்பணிகளில் ரொம்ப சுறுசுறுப்பாக செயல்படுவீங்க பதவிகள் உங்களுக்கு தேடி வரும். உங்க ராசிநாதன் 12 ஆம் வீட்டில் ஆட்சி பெற்றிருப்பதால் விபரீத ராஜயோகம் தேடி வரப்போகுது.

மீனம்

மீனம்

மீனம் ராசிக்காரர்களே உங்களுக்கு எதிர்பார்த்த பதவிகள் தேடி வரும். மக்களின் ஆதரவு கிடைக்கும். நீங்க எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். சனி, குருவின் சாதகமான சஞ்சாரத்தினால் உங்களுக்கு பதவிகள் கிடைக்கும். உயர்பதவிகள் கிடைக்கும் யோகம் வந்து விட்டது. கட்சி தலைமை சொல்வதை கேட்டு அனுசரித்து நடங்கள் பிரச்சினைகளில் இருந்து தப்பித்து கொள்வீர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+