Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சார்வரி தமிழ் புத்தாண்டு 2020: மேஷம் ராசிக்காரர்கள் அதிர்ஷ்டமும் ஆசிர்வாதமும் கிடைக்கும்

விகாரி தமிழ் வருடம் முடியப்போகிறது சார்வரி தமிழ் புத்தாண்டு பிறக்கப் போகிறது. புதிய தமிழ் புத்தாண்டில் நமக்கு நல்லது நடக்குமா? வேலை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்குமே இருக்கும் மேஷம் ராசிக்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சார்வரி தமிழ் புத்தாண்டு பிறக்கப் போகிறது. விகாரி தமிழ் புத்தாண்டில் நிறைய நல்ல விசயங்கள் நடந்திருக்கிறது. பிறக்கப் போகும் தமிழ் புத்தாண்டிலும் பொதுவாக நிறைய நன்மைகள் நடைபெறப்போகிறது. காரணம் ஆண்டு கிரகங்களான குரு, சனி, ராகு கேது பெயர்ச்சிகள் சாதமான நிலையில் உள்ளது. சனி பகவான் மகரம் ராசியில் ஆட்சி பெற்றிருக்கிறார். குருவும் தனுசு ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். ஆவணியில் மிதுனம் ராசியில் இருந்து ராகு ரிஷபம் ராசிக்கும் கேது பகவான் தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசியில் சஞ்சரிக்கிறார். மார்கழி மாதம் வாக்கிய பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி நடக்கிறது. இந்த கிரகங்களின் சஞ்சாரம் பார்வை பல ராசிக்காரர்களுக்கு சந்தோஷங்களை தரப்போகிறது. மேஷம் ராசிக்காரர்களுக்கு பிறக்கப் போகிற சார்வரி தமிழ் புத்தாண்டு எப்படி இருக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

மேஷ ராசிக்கு சஞ்சரிக்கு கிரகங்களை பார்த்தால் சூரியன் மேஷம் ராசியில் தொடங்கி மீனம் ராசி வரைக்கும் 12 மாதங்களில் சஞ்சரிப்பார். குரு பகவான் தனுசுவில் இருந்து மகரம் ராசிக்கும் மகரம் ராசியில் இருந்து அதிசாரமாக கும்பம் ராசிக்கும் சஞ்சரிப்பார். இந்த ஆண்டு 9,10,11ஆம் வீடுகளில் குரு செல்கிறார். சனிபகவான் பத்தாம் வீட்டிலும் ராகு மூன்றாம் வீட்டில் இருந்து இரண்டாம் வீட்டிற்கும் நகர்கின்றனர். கேது பகவான் ஒன்பதாம் வீட்டில் இருந்து எட்டாம் வீட்டிற்கும் செல்கிறார்.

இந்த சார்வரி தமிழ் புத்தாண்டு அதிர்ஷ்மும் ஆசிர்வாதமும் நிறைந்த புத்தாண்டாக அமையப்போகிறது. இது மேஷம் ராசியில் பிறந்த அனைவருக்கமே பொதுவான பலன்தான் தனிப்பட்ட ஜாதகங்களைப் பொறுத்தும் தசாபுத்தி நடைபெறுவதை பொறுத்தும் பலன்கள் மாறுபடும்.

சார்வரி தமிழ் புத்தாண்டு 2020

சார்வரி தமிழ் புத்தாண்டு 2020

சார்வரி ஆண்டு உங்களுக்கு சந்தோஷமான ஆண்டாக அமையப்போகிறது. காரணம் கிரகங்களின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாகவே இருக்கிறது. ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கும் குருபகவான் பார்வை உங்க ராசிக்கு கிடைக்கிறது. கார்த்திகை மாதம் நிகழப்போகும் குரு பெயர்ச்சிக்குப் பின்னர் ராசிக்கு குடும்ப ஸ்தானத்தின் மீதும் சுக ஸ்தானத்தின் மீதும், ருண ரோக சத்ரு ஸ்தானத்தின் மீதும் விழுகிறது. எனவே இந்த ஆண்டில் உங்களுக்கு குருவினால் பண வருமானம் அதிகமாக கிடைக்கும். வீடு வண்டி வாகன சேர்க்கை அதிகமாகும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பிள்ளைகளுக்கு நல்ல விசயங்கள் அதிகம் நடைபெறும். உயர்கல்வி யோகம் தேடி வரும் திருமண முயற்சிகள் கை கூடி வரும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி

குடும்பத்தில் மகிழ்ச்சி

உடன்பிறந்தவர்கள், வாழ்க்கைத்துணையின் மூலம் சந்தோஷம் அதிகமாகும். நிறைய அதிர்ஷ்டங்கள் தேடி வரும். உங்க பிள்ளைகள் மூலம் மனதில் மகிழ்ச்சி அதிகமாகும். இந்த ஆண்டு திருமணம் நடைபெறாமல் இருப்பவர்களுக்கு திருமணம் கை கூடி வரும். நேர்மறை எண்ணங்கள் அதிகமாகும். வேலை செய்யும் இடத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் எட்டிப்பார்த்தாலும் அதை எல்லாம் எளிதில் சமாளிப்பீர்கள். உங்க வேலைகளை சிறப்பாக செய்வீர்கள்.

வங்கி சேமிப்பு அதிகமாகும்

வங்கி சேமிப்பு அதிகமாகும்

கடந்த 2 ஆண்டுகாலமாகவே குடும்பத்தில் நிறைய நல்ல விசயங்கள் சுப நிகழ்ச்சிகள் நடந்து வந்தாலும் பொருளாதார நிலைமை எதுவும் சொல்லிக்கிற மாதிரி இல்லையே என்று கவலையோடவே இருந்தீர்கள். பணம் வந்தாலும் பத்தாமல் போகிறதே என்ற மன உளைச்சலில் இருந்தீர்கள் இனி அந்த கவலைகள் மாறும் காலம் வந்து விட்டது. இந்த ஆண்டு உங்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. உங்களின் பணத்தேவைகள் நிறைவேறும். குடும்பத்தோடு சந்தோஷமாக இருப்பீர்கள். மார்கழி மாதத்திற்குப் பிறகு பொருளாதார முன்னேற்றம் அதிகமாகும். மனதில் அவ்வப்போது இனம்புரியாத பயமும் பதற்றம் ஏற்பட்டாலும் அதை சமாளித்து உங்கள் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவீர்கள்

குடும்பம் குழந்தை பாக்கியம்

குடும்பம் குழந்தை பாக்கியம்

பெற்றோர்கள் மீது பாசம் அதிகமாகும். அப்பாவின் மூலம் பணவரவு அதிகமாகும். அம்மாவின் உடலில் இருந்த இனம்புரியாத நோய்கள் தீரும் காலம் வந்து விட்டது. உடன் பிறந்தவர்கள் மூலம் சாதகமான விசயங்கள் நடைபெறும். உங்க மேல் பாசம் அதிகமாகும். குழந்தைகள் மீதான அன்பும் பாசமும் அதிகமாகும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். குடும்ப ஒற்றுமை அதிகமாகும். கணவன் மனைவி இடையேயான நேசமும் நெருக்கமும் அதிகமாகும். திருமணம் முடிந்து குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல சந்தோஷமான தகவல்கள் தேடி வரும் புத்திரபாக்கியம் கிடைக்கும்.

அதிக கடன் ஆபத்து

அதிக கடன் ஆபத்து

கடன் பிரச்சினைகள் தீரும். கடன் அதிகமாக வாங்காதீங்க. பூர்வீக சொத்துக்கள் மூலம் அதிர்ஷ்டங்கள் தேடி வரும். முன்னேற்றம் அதிகமாகும். மேற்கொண்டு புதிய கடன்கள் வாங்காதீர்கள். வண்டி வாகனம் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மார்கழி மாதத்திற்குப் பிறகு வாங்கலாம். சொத்து வாங்க விற்க டிசம்பர் மாதத்திற்கு பிறகு முயற்சி செய்யுங்கள். இந்த ஆண்டு நிறைய சொத்துக்கள் சேரும். உங்க வருமானமும் வங்கி சேமிப்பும் அதிகமாகும். புதிய கடன்களை வாங்கும் போதும் பிறருக்கு நீங்கள் கடன் கொடுக்கும் போதும் ரொம்ப கவனமாக இருங்க.

கல்வியில் முன்னேற்றம்

கல்வியில் முன்னேற்றம்

மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகமாகும் நன்றாக படித்து தேர்வுகளை எதிர்கொள்வீர்கள். உடலில் இருந்த நீண்ட நாள் பிரச்சினைகள் தீரும். உங்க ஆரோக்கியம் அதிகமாகும் முகத்தில் தேஜஸ் கூடும். உடல் நலத்தை நன்றாக கவனிங்க சோம்பேறித்தனம் வேண்டாம். ஆவணி மாதம் இரண்டாம் வீட்டிற்கு நகரும் ராகு எட்டாம் வீட்டிற்கு வரப்போகும் கேதுவினால் உங்களுக்கு நிறைய நன்மைகள் நடைபெறப்போகிறது. பிறர் பொறமைப்படும் அளவிற்கு அளவிற்கு திறமையாக படிப்பீர்கள்.

வேலையில் திறமை

வேலையில் திறமை

உங்களுக்கு புதிய தொழில் தொடங்கலாமா என்ற யோசனைகள் வரலாம். முயற்சிகள் வெற்றியாகும். லாபமும் வரும். வேலைக்காக அலைச்சல் அதிகமாகும். சிலருக்கு புதிய வேலை புரமோசன், சம்பள உயர்வு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களின் திறமை பளிச்சிடும். வெளியூர், வெளிநாடு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சாதகமான பலன்களே கிடைக்கும். சிலருக்கு வேலை செய்யும் இடத்தில் மனதில் சில வெறுப்பு ஏற்படும். சின்னச் சின்ன கஷ்டங்கள் வந்தாலும் அனைத்தையும் சமாளித்து விடுவீர்கள். வெறுப்புகளை ஒதுக்கி வைத்து விட்டு செய்யும் வேலையில் கவனமாக புத்தியை செலுத்த முயற்சி செய்யுங்கள். மொத்தத்தில் இந்த சார்வரி தமிழ் புத்தாண்டு மேஷம் ராசிக்கு சார்வரி புத்தாண்டில் அதிர்ஷ்டமும் ஆசிர்வாதமும் நிறைந்த ஆண்டாக இருக்கப் போகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+