Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சார்வரி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2020-21 - ரிஷபம் ராசிக்கு சகல செல்வமும் கிடைக்கும்

விகாரி தமிழ் வருடம் முடியப்போகிறது சார்வரி தமிழ் புத்தாண்டு பிறக்கப் போகிறது. புதிய தமிழ் புத்தாண்டில் நமக்கு நல்லது நடக்குமா? வேலை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்குமே இருக்கும் மேஷம் ராசிக்கா

Subscribe to Oneindia Tamil

மதுரை: சார்வரி தமிழ் புத்தாண்டு வரும் ஏப்ரல் 14ஆம் தேதி 2020, செவ்வாய்கிழமை பிறக்கிறது. திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஆண்டு பிறக்கும் போது மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் சுக்கிரன், மிதுனத்தில் ராகு, மீனம் ராசியில் புதன், மகரத்தில் செவ்வாய்,குரு, சனி, தனுசு ராசியில் சந்திரன் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த சார்வரி ஆண்டுக்கு தமிழில் வீறியெழல் என்று பெயர். சார்வரி தமிழ் புத்தாண்டில் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

ஆண்டு கிரகங்களான குரு, சனி, ராகு கேது பெயர்ச்சிகள் சாதமான நிலையில் உள்ளது. சனி பகவான் மகரம் ராசியில் ஆட்சி பெற்றிருக்கிறார். குருவும் அதிசாரமாக சென்றாலும் பின்னர் தனுசு ராசியில் ஆட்சி பெற்று அமர்கிறார். ஆவணியில் மிதுனம் ராசியில் இருந்து ராகு ரிஷபம் ராசிக்கும் கேது பகவான் தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசியில் சஞ்சரிக்கிறார். மார்கழி மாதம் வாக்கிய பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி நடக்கிறது. இந்த கிரகங்களின் சஞ்சாரம் பார்வை பல ராசிக்காரர்களுக்கு சந்தோஷங்களை தரப்போகிறது. ரிஷபம் ராசிக்காரர்கள் சுக்கிரனின் ஆதிக்கம் கொண்டவர். கடவுளின் கருணை உங்களுக்கு இருக்கிறது. பிறக்கப் போகும் தமிழ் புத்தாண்டு என்ன பலன்கள் தரப்போகிறது என்று பார்க்கலாம்.

ரிஷபம் ராசிக்கு கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் சூரியன் 12 ஆம் வீடான மேஷம் ராசியில் தொடங்கி 11ஆம் வீடான லாப ஸ்தானமான மீனம் ராசி வரைக்கும் 12 மாதங்களில் சஞ்சரிப்பார். குரு பகவான் எட்டாம் வீடான தனுசுவில் இருந்து மகரம் ராசிக்கும் மகரம் ராசியில் இருந்து அதிசாரமாக கும்பம் ராசிக்கும் சஞ்சரிப்பார். இந்த ஆண்டு 8,9,10 ஆம் வீடுகளில் குரு செல்கிறார். சனிபகவான் ஒன்பதாம் வீட்டிலும் ராகு இரண்டாம் வீட்டில் இருந்து உங்க ராசிக்கு நகர்கிறார். கேது பகவான் எட்டாம் வீட்டில் இருந்து ஏழாம் வீட்டிற்கு நகர்ந்து உங்க ராசியை பார்க்கிறார். இந்த சார்வரி புத்தாண்டில் ரிஷபம் ராசிக்கு சர்வ வளங்களும் செல்வாக்கும் கிடைக்கப் போகிறது. இது பொதுவான பலன்கள்தான். சொந்த ஜாதகம், தசாபுத்தியை பொருத்து பலன்கள் மாறுபடும்.

ரிஷபம் ராசி

ரிஷபம் ராசி

இந்த ஆண்டு உங்க எதிர்பார்ப்புகள் அதிகமாகும். தாராள மனதுக்காரர்கள் நீங்கள் தைரியமாக இருப்பீர்கள். இந்த ஆண்டு வசதிகள் அதிகமாகும். தொட்டது துலங்கும் பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். சுப காரியங்கள் நடக்கும். தொழில் வளர்ச்சி அதிகமாகும். வியாபாரத்தில் லாபம் அதிகமாகும். கடன் நோய் எதிரிகள் தொல்லை நீங்கும். இந்த ஆண்டு தொடக்கத்தில் உங்களுக்கு ராசியில் ராசி நாதன் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். செய்யும் தொழிலில் லாபம் வரும். புதிய தொழில் தொடங்குவீர்கள். நடைபெற்று வரும் தொழிலை விரிவு செய்வீர்கள்.

குடும்பத்தில் சந்தோஷம்

குடும்பத்தில் சந்தோஷம்

குரு பகவான் அதிசாரமாகி உங்க ராசிக்கு ஒன்பதாம் வீட்டிற்கு வந்து சனியோடு அமர்ந்திருக்கிறார். கூடவே செவ்வாயும் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சாரம் ரிஷப ராசிக்காரர்களுக்கு ராஜயோகத்தை தருகிறது. அப்பாவிற்கு மருத்துவ செலவுகள் ஏற்படும். அரசு துறையில் இருப்பவர்கள் அரசியல்வாதிகள் எச்சரிக்கையாக இருங்கள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சினைகள் விலகும். ராகு பகவான் இரண்டாம் வீட்டில் இருப்பதால் குடும்பத்தில் சில பிரச்சினைகள் வரலாம், ஆவணி மாதம் ராகு பெயர்ச்சியாகி உங்க ராசிக்கு வருகிறார். சின்னச் சின்ன குழப்பங்கள் வந்தாலும் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். நிறைய பயன் கிடைக்கும் சர்வ சக்தி வல்லமை கிடைக்கும்.

தகவல் தொடர்பு யோகம்

தகவல் தொடர்பு யோகம்

செல்போனால் அதிக செலவு வரும். புது போன் வாங்குவீர்கள். ஆடம்பர செலவுதான் வாங்குவீர்கள். செல்போன் காரகத்துவமே ராகுதான். கலைத்துறையினருக்கு சாதகமான அம்சம். ஆசிரியர்கள், மத குருமார்கள், பத்திரிகை துறையில் இருப்பவர்களுக்கு நல்லதே நடக்கும்.
கணவன் மனைவி உறவில் இணக்கம் அதிகமாகும். சுப செலவுகள் அதிகம் ஏற்படும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். வெளிநாடு பயணம் ஏற்படும். உடல் நிலையில் கவனம் தேவை. சகோதர சகோதரிகளிடம் அனுசரித்து போங்க.

உயர்கல்வி யோகம்

உயர்கல்வி யோகம்

வருட துவக்கத்திலேயே புதனின் சஞ்சாரத்தினால் மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் வருகிறது. மாணவர்களுக்கு அற்புதமான ஆண்டாக அமைகிறது.
மாணவர்கள் படிப்பில் கவனமாக இருங்க. அப்போதுதான் தேர்வில் நல்ல மார்க் எடுத்து ஜெயிக்க முடியும். பெண்களுக்கு இந்த தமிழ் புத்தாண்டு சிறப்பானதாக இருக்கும். உடல் ரீதியாக மனரீதியாக பிரச்சினைகள் ஏற்படலாம். அக்கம் பக்கத்தினருடன் கவனமாக பேசி பழகுங்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் எச்சரிக்கை தேவை. கர்ப்பிணிகள் கவனமாக இருங்க.

வியாபாரத்தில் லாபம்

வியாபாரத்தில் லாபம்

வியாபாரம் செய்பவர்களுக்கு அதிக லாபம் வரும். பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்வர்களுக்கு நல்ல லாபம் வரும். சொந்தமாக வீடு நிலம் வாங்கலாம். நோய்கள் நிவர்த்தியாகும் எதிரிகள் தொல்லை நீங்கும். நீங்க வார்த்தை ஜாலக்காரர்கள். பேசியே காரியம் சாதிப்பீர்கள். யாரையும் திட்ட வேண்டாம். காயப்படுத்தும் விதமாக பேச வேண்டாம். அலுலகத்தில் வேலைப்பளு குறையும். வீடு வாகன யோகம், பூமியால் யோகம் வரும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு செப்டம்பர் மாதத்திற்கு மேல் யோகம் கை கூடி வரும். காதல் திருமணம் நிச்சயிக்கப்பட்ட திருமணமாக மாறலாம். அரசு தொடர்பான வேலைகளை உடனே முடித்து விடுங்கள்.

மகாலட்சுமி வழிபாடு

மகாலட்சுமி வழிபாடு

ஆன்மீக பயணங்கள் மனதில் அமைதியை தரும். சார்வரி தமிழ் புத்தாண்டு ரிஷபம் ராசிக்காரர்களுக்கு அற்புதங்களை நிகழ்த்தக்கூடிய ஆண்டாக அமைந்துள்ளது. அன்னை மகாலட்சுமியை வணங்கி வெள்ளிக்கிழமை தவறாது விரதம் கடைபிடித்தால் சந்தோஷங்கள் அதிகமாகும்.
ராகுவினால் ஐஸ்வர்யம் கிடைக்கும். மகாலட்சுமிக்கு நிகராக செல்வம் கிடைக்கும். சுக்கிரனைப் போன்றவர் ராகு. ராகுவைப் போல அதிகமாக கொடுப்பவர் யாருமில்லை. நல்லா சாப்பிடுங்க நல்லா அனுபவிங்க. வீட்டில் அடிக்கடி மகாலட்சுமி பூஜை பண்ணுங்க. வெண் சங்கில் பால் வைத்து பூஜை பண்ணுங்க. மகாலட்சுமி மந்திரங்களை சொல்லுங்க.

துர்க்கை வழிபாடு

துர்க்கை வழிபாடு

ஞாயிறுகிழமைகளில் ராகு காலத்தில் விளக்கேற்றுங்கள். குல தெய்வ வழிபாடு தவறாம பண்ணுங்க. ஏழை மக்களுக்கு கல்விக்காக உதவி பண்ணுங்க. குடும்பத்தோட ராமேஸ்வரம் போய் வாருங்கள் நன்மைகள் அதிகம் நடைபெறும். வஸ்திர தானம், அன்னதானம் பண்ணுங்க. தேவிப்பட்டிணம் போய் நவகிரக வழிபாடு பண்ணுங்க. தடைகள் நீங்கும், திட்டமிட்ட பணிகள் சந்தோஷமாக நிறைவேறும். புதன்கிழமைகளில் பச்சைப்பயிறு தானம் பண்ணுங்க. பெருமாளுக்கு பச்சை வஸ்திரம் சாற்றுங்கள். திருவெண்காடு போய் தரிசனம் பண்ணிட்டு வாங்க.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+