Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சார்வரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் : சிம்மம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான ஆண்டு

விகாரி தமிழ் வருடம் முடியப்போகிறது சார்வரி தமிழ் புத்தாண்டு பிறக்கப் போகிறது. புதிய தமிழ் புத்தாண்டில் நமக்கு நல்லது நடக்குமா? வேலை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்குமே இருக்கும் சிம்மம் ராசிக

Subscribe to Oneindia Tamil

சென்னை: சார்வரி தமிழ் புத்தாண்டு வரும் ஏப்ரல் 14ஆம் தேதி 2020, செவ்வாய்கிழமை பிறக்கிறது. திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஆண்டு பிறக்கும் போது மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் சுக்கிரன், மிதுனத்தில் ராகு, மீனம் ராசியில் புதன், மகரத்தில் செவ்வாய்,குரு, சனி, தனுசு ராசியில் சந்திரன் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த சார்வரி ஆண்டுக்கு தமிழில் வீறியெழல் என்று பெயர். சார்வரி தமிழ் புத்தாண்டில் சிம்மம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

ஆண்டு கிரகங்களான குரு, சனி, ராகு கேது பெயர்ச்சிகள் சாதமான நிலையில் உள்ளது. சனி பகவான் மகரம் ராசியில் ஆட்சி பெற்றிருக்கிறார். குருவும் அதிசாரமாக சென்றாலும் பின்னர் தனுசு ராசியில் ஆட்சி பெற்று அமர்கிறார். ஆவணியில் மிதுனம் ராசியில் இருந்து ராகு ரிஷபம் ராசிக்கும் கேது பகவான் தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசியில் சஞ்சரிக்கிறார். மார்கழி மாதம் வாக்கிய பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி நடக்கிறது. இந்த கிரகங்களின் சஞ்சாரம் பார்வை பல ராசிக்காரர்களுக்கு சந்தோஷங்களை தரப்போகிறது.

நிகழும் மங்கலகரமான சார்வரி புது வருடம் உத்தராயணப் புண்ணிய காலம் நிறைந்த திங்கட்கிழமை 13.04.2020 இரவு மணி 7.20க்கு கிருஷ்ணபட்சத்தில் சஷ்டி திதி, மூலம் நட்சத்திரம் 4ம் பாதத்தில் தனுசு ராசி, துலாம் லக்னத்திலும், நவாம்சத்தில் கடகம் ராசி, கும்ப லக்னத்திலும், புதன் ஓரை, கேது மகா தசை சனி புத்தியில் பிறக்கிறது. ஆண்டு தொடங்கும் போது உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சந்திரன், கேது, ஆறாம் வீட்டில் குரு, சனி, செவ்வாய், எட்டாம் வீட்டில் புதன் பாக்ய ஸ்தானத்தில் சூரியன் உச்சம் பெற்று அமர்ந்திருக்கிறார்.

ஆரோக்கியத்தில் அற்புதம்

ஆரோக்கியத்தில் அற்புதம்

சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு எப்போதுமே உற்சாகமாக இருப்பது பிடிக்கும். ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். இந்த ஆண்டு உங்க ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். சுறுசுறுப்பாக இருப்பீங்க. மன அழுத்தம் வரும் போது நிறைய தியானம் பண்ணுங்க பிரச்சினைகள் தீரும், பிரச்சினைகள் விலகும். வேலையினால் நல்ல வருமானம் வரும். கடன் உதவி கிடைக்கும். ஆறாம் வீட்டில் குரு இருப்பதால் கடன் நிறைய கிடைக்கும். வங்கி கடன் உதவி கிடைக்கும். கடன் கிடைக்கிறதே என்பதற்காக நீங்க வாங்காதீங்க. ஆனி மாதம் முதல் கார்த்திகை வரை குருபகவான் மீண்டும் ஐந்தாம் வீட்டிற்கு திரும்பி கார்த்திகை வரை சஞ்சரிப்பதால் பொருளாதார மேன்மை அதிகரிக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். வீடு மனை வாங்கும் யோகம் வரும்.

வேலையில் இடமாற்றம்

வேலையில் இடமாற்றம்

சனிபகவான் உங்களுக்கு நிறைய நன்மைகளை செய்வார். பெரிய பதவிகள் தேடி வரும். தகவல் தொடர்புத்துறையில் இருப்பவர்களுக்கு வேலை மாற்றம் வரும். சிலருக்கு விரும்பி இடத்தில் இடமாற்றம் கிடைக்கும். குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்துங்கள். நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும் பயன்படுத்திக்கங்க. உயரதிகாரிகளிடம் பாராட்டுக்கள் கிடைக்கும். உங்க திறமைகளை வெளிப்படுத்தி புரமோசன் வாங்குவீங்க. சிலருக்கு வெளியூர், வெளிநாடு செல்வதற்கும் யோகம் வரும்.

சுபகாரியங்கள் வரும்

சுபகாரியங்கள் வரும்

பெண்களுக்கு ரொம்ப நல்ல யோகம். நல்ல வேலை கடைக்கும். சமூகத்தில் நல்ல மதிப்பு மரியாதை கிடைக்கும். வெற்றி மீது வெற்றிகள் தேடி வரப்போகிறது. உடல் ஆரோக்கியத்தில் சின்ன சின்ன பிரச்சினைகள் வரலாம். கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்தாலும் உறவு பலப்படும். சுபகாரியங்கள் கைகூடி வரும். பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். திருமண யோகம் கை கூடி வருகிறது. பேசி வைத்துக்கொள்ளுங்கள். வங்கித்துறையில் பணிபுரிபவர்கள், தங்க நகைகளில் முதலீடு செய்பவர்கள் கவனமாக இருங்க. வேலைப்பளு அதிகமாக இருப்பால் வேறு வேலை மாற நினைப்பார்கள். இல்லா புரமோசனில் சில தடைகள் வரலாம் உயரதிகாரிகளிடம் பேசும் போது நிதானமாக பேசுங்கள்.

உயர்கல்வி யோகம்

உயர்கல்வி யோகம்

சிம்மராசி மாணவர்கள் நல்லா கவனம் செலுத்துங்க. தேர்வுகளை நல்லா எழுதுவீங்க. நல்ல மதிப்பெண்களை வாங்குவீர்கள். உயர்கல்வி யோகம் தேடி வரப்போகிறது. மருத்துவ கல்வி, உயிரியல் கல்வி தேடி வரும். பேசும் வார்த்தைகளில் கவனமாக இருங்க அமைதியாக இருந்தாலே போது பிரச்சினைகள் வர வாய்ப்பே இல்லை. விட்டுக்கொடுத்து போங்க எந்த பிரச்சினையும் வராது.

வியாபாரத்தில் லாபம்

வியாபாரத்தில் லாபம்

வியாபாரிகளுக்கு ரொம்ப நல்ல மாதம், லாபம் வரும். வியாபாரத்தில் நேர்மையாக இருங்க. அதிகம் பேரம் பேசாதீங்க. நீண்ட நாட்களாக எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வியாழக்கிழமைகளில் நீங்க குரு ஸ்தலங்களுக்கு சென்று வாருங்கள். ராகவேந்திரரை வழிபடுங்க நன்மைகள் நடைபெறும். உங்க பணத்தை முதலீடு செய்யும் முன்பாக நிதானமாக யோசிங்க. சகோதர உறவுகளில் கவனமாக இருங்க. உங்களை விட்டு பிரிந்து சென்றவர்கள் தேடி வருவார்கள். இந்த சார்வரி வருடம் உங்களுக்கு சந்தோஷங்களும் அதிர்ஷ்டங்களும் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+