ஐப்பசி சதயம்... இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள்
ஐப்பசி சதயம் மாமன்னர் ராஜ ராஜனின் பிறந்தநாள் விழவாகக் கொண்டாடப்படுகிறது. சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எப்படியிருப்பார்கள் என்று பார்க்கலாம்.
சென்னை: மாமன்னர் ராஜ ராஜசோழன் பிறந்த நட்சத்திரம் ஐப்பசி சதயம் இன்றைய தினம் தஞ்சாவூரில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், வணங்க வேண்டிய தெய்வம், செய்ய வேண்டிய பரிகாரம் பற்றி தெரிந்து கொள்வோம்.
27 நட்சத்திரங்களின் வரிசையில் 24வது நட்சத்திரம் சதயம். ராகுபகவான் சதயம் நட்சத்திரத்தின் அதிபதி. உடல் வலிமை கொண்ட இந்த நட்சத்திரக்காரர்கள் கடும் உழைப்பாளிகள்.

சதயம் நட்சத்திரக்காரர்கள் வசீகரமானவர்கள், செல்வந்தராகவும், பொறுமைசாலிகளாகவும் இருப்பார்கள். எதையும் முன்யோசனையுடன் செயல்படும் இவர்கள் திறமைசாலிகள், ஒழுக்கமானவர்கள். நேர்மையான வழியில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நீங்கள்.
எதிரிகளை தெறிக்க விடுவீர்கள். பகைவர்களை மன்னிக்கும் சுபாவம் கொண்டவர்களாக இருந்தாலும் தவறு செய்பவர்களை தண்டிப்பவர்களாகவும் இருப்பீர்கள். அன்பானவர், அசராதவர், அடங்காதவர் நீங்கள்.
உடன் பிறந்தவர்களுக்காகவும், பெற்றோருக்காகவும் உற்றார் உறவினர்களுக்காகவும் எதையும் தியாகம் செய்வார்கள். 18 வயது வரை வாழ்வில் பிரச்சனைகளை சந்தித்தாலும் படிப்படியாக முன்னேறி வாழ்வின் உச்சியை அடைவார்கள்.
பலமொழி பண்டிதர்களாகவும், அனைவராலும், குறிப்பாக பெண்களால் விரும்பப்படுகிறவர்களாவும் இருப்பார்கள். புத்திசாலிகளாகவும், அரசர், அந்தணர், பசுக்களை விரும்புபவர்கள் என்றும் ஜாதக அலங்காரம் என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.
சதய நட்சத்திர தெய்வம் மிருத்யுஞ்சேஸ்வரர். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் ஸ்தல விருட்சம் கடம்ப மரமாகும். இம்மரமுள்ள ஸ்தலங்களை வழிபாடு செய்வது நல்லது. திருமணம், குழந்தைக்கு பெயர் வைத்தல், கல்வி கற்க ஆரம்பித்தல், கிரக பிரவேசம் செய்தல், வீடு கட்டுதல், ஆடு மாடு வாங்குதல், விதை விதைத்தல், தானியம் வாங்குதல் ஆகிய காரியங்களை சதயம் நட்சத்திரத்தில் செய்யலாம்.
சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு ரோகிணி, அஸ்தம், திருவோணம், திருவாதிரை, சுவாதி ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications