தனுசு ராசியில் குரு சனி கேது கூட்டணி- நாட்டில் என்ன நடக்கும் பொருளாதாரம் எப்படி இருக்கும்

தனுசு ராசியில் இப்போது சனி கேது கூட்டணியாக இருக்கும் நிலையில் நவம்பர் முதல் குரு கூட்டணி சேருகிறார். இதனால் நாட்டில் என்ன நடக்கும். ஒருவரின் ஜாதகத்தில் இதேபோல கிரகங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுசு ராசி குருவின் வீடு. இந்த வீட்டில் இப்போது கர்ம காரகன் சனியோடு ஞானகாரகன் கேது இணைந்திருக்கிறார். நவம்பர் முதல் ஆன்மீக காரகர் குருவும் இணையப்போகிறார். இந்த கிரகங்களின் கூட்டணி 2020 ஜனவரி வரை இணைந்திருக்கும். இந்த காலகட்டத்தில் நாட்டில் என்னென்ன மாற்றங்கள் நிகழும், யாருக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் பலன்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

தனுசு ராசி ராசி சக்கரத்தில் ஒன்பதாவது ராசி. அந்த ராசியில் கடந்த மார்ச் முதல் கேது சனி இணைந்திருக்க வரும் நவம்பர் முதல் குருவும் கூட்டணி அமைக்கிறார். இந்த அமைப்பு இருக்கும் போது பிறக்கும் குழந்தைகள் யோகக் காரர்களாக இருப்பார்கள் எப்படி என்று கேட்கிறீர்களா? ஜாதகத்தில் ஆன்மீக கிரகங்கள் கேது, சனி அப்புறம் குரு. கேது ஒருவருக்கு விரக்தியை தருவார் என்னடா வாழ்க்கை என்று நினைக்க வைத்து வாழ்க்கையில் ஒருவித பக்குவத்தை தருவார். சனி கர்மங்களை அனுபவிக்க வைப்பார். இந்த இரண்டிற்கும் பிறகு குரு ஒரு வழி துணையாக ஆன்மீக வழியை காட்டுவார்.

ஒருவரின் ஜாதகத்தில் தனுசு ராசியில் சனியும், கேதுவும் சேர்க்கை பெற்றிருந்தால் ஆன்மிகத்தையே விஞ்ஞானப் பார்வையாக பார்க்கும் விவேகம் இருக்கும். நிறைய சொத்து சுகங்கள் இருந்தாலும் எதிலும் ஒட்ட மாட்டார்கள். மணிக்கணக்கில் பேசினாலும் அடிமனதை அவ்வளவு எளிதில் வெளிக்காட்டமாட்டார்கள். கூடவே குருவும் சேர்ந்தால் கேட்கவா வேண்டும் நாட்டில் நிறைய நல்ல விசயங்கள் நடக்கும் ஆன்மீக நிகழ்வுகள் அதிகரிக்கும்.

குருவும் சனியும் ஒன்று சேர்ந்தாலே வழக்கறிஞராகத் திகழ்வார்கள். எல்லா விஷயங்களையும் அலசி ஆராய்வார்கள். மடங்கள், கோயில்களில் தர்மகர்த்தா, பொக்கிஷத்தை பாதுகாக்கும் அதிகாரி, இந்து அறநிலையத்துறை அதிகாரி போன்ற பதவிகளில் அமர்வார்கள். குரு-சனி சேர்க்கை பெற்றவர்கள் அனைத்திலும் திறமையானவர்களாகத் திகழ்வர்.

ஆன்மீக விசயங்கள்

ஆன்மீக விசயங்கள்

குருபகவான் தேவர்களின் குருவாக திகழ்பவர் பிரகஸ்பதி. ஜோதிடத்தைப் பொருத்த வரை சனி, குருவுக்கு மட்டுமே ராஜ கிரகங்கத்திற்கான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. குரு பார்க்க கோடி நன்மை. குருவினால் குடும்பம், குழந்தைகள் தொழில் வளர்ச்சி ஏற்படும். அரசு வேலையாக இருந்தாலும் அடிமைத் தொழிலாக இருந்தாலும் சனிபகவான் தயவு நிச்சயம் தேவை. கேது நிற்கும் ஸ்தானத்தில் தடைகளை தருவார். தனுசு ராசியில் குரு பகவான் சனி, கேது உடன் இணைந்திருக்கும் நேரத்தில் பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு நிறைய நன்மைகள் ஏற்படும்.

குரு சண்டாள யோகம்

குரு சண்டாள யோகம்

குரு சனி சேர்க்கை நிகழும் போதெல்லாம் நாட்டில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். ஜாதகத்தில் ஒரு ராசியில் குருவும் சனியும் இணைந்து கூட்டணி அமைத்திருந்தால் அதனை குரு சண்டாள யோகம் என்று சொல்வார்கள். இப்போது தனுசு ராசியில் சனி பகவான் அமர்ந்துள்ளார். 2020 ஆம் ஆண்டு வரை தனுசுவில் சஞ்சாரம் செய்வார். விருச்சிகம் ராசியில் உள்ள குருபகவான் நவம்பர் முதல் தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.

பலன்கள் எப்போது வரும்

பலன்கள் எப்போது வரும்

ஜோதிடத்தில் குரு முன்னோர்களின் புண்ணியத்தை குறிப்பவராக போற்றப்படுகிறார். சனி முன்னோர்களின் கர்ம பலனை குறிபவராக போற்றபடுகிறார். குரு சனி இருவரின் சேர்க்கை ஜீவ கர்ம யோகம் என்ற நிலையை வழங்குகிறது. தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய லக்னங்களுக்கு குரு-சனி சேர்க்கை மிகப் பெரிய முன்னேற்றத்தை அளிக்கும். இவர்களுக்கு குரு அல்லது சனி தசை நடக்கும் போது ராஜ யோகத்தின் பலன்களை அனுபவிப்பார்கள்.

என்னென்ன நடக்கும்

என்னென்ன நடக்கும்

ஜாதகத்தில் லக்னத்தில் - ஒன்றாம் இடத்திலேயே குருவும், சனியும் சேர்ந்திருந்தால் இரக்க உணர்வோடு விளங்குவார்கள். எந்த விஷயத்திற்கும் அக்கறையோடு ஆலோசனைகள் கூறுவார்கள். இரண்டாம் இடத்தில் குரு, சனியோடு சேர்ந்து இருந்தால் பல மொழிகளை அறிந்த பண்டிதர்களாகவும் விளங்குவார்கள். மூன்றாம் இடத்தில் குருவும் சனியும் இணைந்திருந்தால் போராளியாகத் திகழ்வார்கள். நாலு வார்த்தை பாராட்டிப் பேசினால் மயங்கி விடுவார்கள். நான்காம் இடத்தில் குருவும் சனியும் இணைந்தால் பங்குச் சந்தையில் கொடிகட்டிப் பறப்பார்கள்.

கடன் வம்பு வழக்கு

கடன் வம்பு வழக்கு

ஐந்தாம் இடத்தில் குருவும் சனியும் சேர்ந்திருந்தால் பூர்வீகச் சொத்தில் ஏதேனும் பிரச்னை வந்தபடியே இருக்கும். திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும். ஆறாம் இடத்தில் இவ்விருவரும் அமர்ந்தால் கடன்பட்டு, மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். ஏழாம் இடத்தில் குருவும் சனியும் அமர்வதால் திருமணம் தடை ஏற்படும். எட்டாமிடத்தில் குரு சனி சேர்க்கையால் செய்யும் தொழிலில் தனி முத்திரை பதிப்பார்கள். ஒன்பதாம் இடத்தில் குருவும் சனியும் அமர்ந்தவர்கள் அரசாங்கத்திற்கே ஆலோசனை கூறுவார்கள். பதினோராம் இடத்தில் குரு சனி சேர்ந்தால் செய்யும் தொழிலில் முன்னேறுவார்கள். பன்னிரெண்டாம் இடத்தில் குருவும் சனியும் இணைந்திருப்பது மோட்ச ஸ்தானத்தைக் குறிக்கும்.

மிகப்பெரிய யோகம்

மிகப்பெரிய யோகம்

ராசி சக்கரத்திற்கு ஒன்பதாம் பாவகத்தில் 3 கிரகங்கள் இணைகின்றன. யோக பிராப்தம். பாக்ய ஸ்தானத்தில் 3 கிரகங்கள் நிற்பது அதீத நன்மை செய்யும். நம்முடைய ஜாதகத்தில் சனீஸ்வரன் உச்சம் பெற்றவர்கள் குரு நல்ல நிலையில் இருப்பவர்கள், கேது வலிமையாக இருப்பவர்களுக்கு மிகப்பெரிய யோகத்தை தரும். கேது நிற்கும் இடத்தில் சின்ன தடையை ஏற்படுத்தும். கேதுவிற்கு வீடு கொடுத்தவர் வலிமையாக இருந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மூன்று கிரகங்களின் கூட்டணி

மூன்று கிரகங்களின் கூட்டணி

கேது ஒருவரின் ஜாதகத்தில் 1,3,6,8,10ல் அமர்ந்திருந்தால் நல்லது நடக்கும். குரு ஆட்சி பெற்று அமர்கிறார். சனி பரிவர்த்தனை பெருகிறார். ஒன்பதாம் இடமான யோக ஸ்தானத்தில் மூன்று கிரகங்களின் சங்கமம் ஏற்படுவது சுலபத்தில் ஏற்படாது. கர்மா, விரக்தி, ஆன்மீகம். பலருக்கு அதீத ஆன்மீக நம்பிக்கையை ஏற்படுத்தும்.

ஆன்மீக அலைகள் நிரம்பும்

ஆன்மீக அலைகள் நிரம்பும்

இந்த கிரகங்களின் கூட்டணியால் நாட்டில் புதிய மாற்றங்களும் ஏற்படும். நாட்டில் அதிகமான ஆன்மீக காரியங்கள் நடக்கும். நாத்தீகவாதிகள் கூட ஆத்திகர்களாக மாறும் உள்ளது. கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கூட கடவுளை நம்ப ஆரம்பிப்பார்கள். ராசி சக்கரத்தில் மூன்றாம் வீட்டில் ராகு இருக்கிறார். அது தகவல் தொடர்பு இடம். கம்யூனிகேசன் துறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.

பொருளாதாரம் வலுப்படும்

பொருளாதாரம் வலுப்படும்

சனி கேது கூட்டணியாக இருக்கும் நாட்டின் பொருளாதாரத்தில் சிறிய ஊசலாட்டம் ஏற்படுகிறது. இது இன்னும் சில மாதங்கள்தான். குரு இணைந்த பின்னர் இந்த ஊசலாட்டம் மாறி விடும். பொருளாதார நிலையில் ஸ்திரத்தன்மை ஏற்படும்.

பார்வையால் பலன்

பார்வையால் பலன்

மூன்றாம் வீட்டில் உள்ள ராகு நம்முடைய தேவையை பணத்தைக் கொண்டு நிவர்த்தி செய்வார். ராகு ஏழாம் பார்வையாக சனி, கேது, குருவை பார்க்கிறார். குரு சனி கேது இணைந்து ராகு மேல பார்வையை செலுத்துகின்றனர். இதனால் ராகு அதீதமான ஆசைகளை தருவார். ஜனன ஜாதகத்தில் சனி, கேது குரு நன்றாக இருப்பவர்களுக்கு இந்த கிரகங்களின் கூட்டணியால் பாதிப்பு அதிகம் இருக்காது. சனி கேது குரு எதுவுமே பலமில்லை என்பவர்களுக்கு இந்த கோச்சாரம் சேரும் போது அதீதமான பிரச்சினைகள் ஏற்படும். இதனால் நல்லவை என்ன கெட்டவை என்ன என்பதை புரிந்து கொள்ள முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+