சனி பெயர்ச்சி 2020-23: சனி தரும் சச யோகம்: எந்த ராசி லக்னகாரர்களுக்கு கிடைக்கும்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    08-09-2019 இன்றைய ராசி பலன்-வீடியோ

    சென்னை: சச யோகம் என்பது பஞ்சமகா புருஷ யோகத்தில் முக்கியமானது. சனிபகவான் சஞ்சாரத்தினால் இந்த சச யோகம் அமைகிறது. சசயோகம் அமைந்தால் அரசனுக்கு சமமான வாழ்வு சமுதாய அந்தஸ்து உண்டாகும் என பண்டை ஜோதிட நூல்கள் கூறுகின்றன. ஒருவருடைய ஜனன கால ஜாதகத்தில் சனி பகவான் துலாம், மகரம் மற்றும் கும்பம் ஆகிய வீடுகளில் அமர்ந்துள்ள நிலையில், அந்த வீடுகள் லக்னம் அல்லது ராசி ஆகியவற்றுக்கு 1,4,7,10 என்ற கேந்திர ஸ்தானங்களாக அமைந்திருந்தால் இந்த யோகம் ஏற்படுகிறது. அந்த நிலையில் சூரியன், செவ்வாய் ஆகிய கிரகங்களுடன் சனி சேர்ந்து அமராமல் இருந்தால் இந்த யோகம் நல்ல பலன்களை அளிக்கும். 2020ஆம் ஆண்டு நிகழப்போகும் சனிப்பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சச யோக அமைப்பு உண்டாகிறது என்று பார்க்கலாம்.

    ஆயுள் காரகனான சனியால் சச யோகம் உண்டாகுவதால் ஜாதகர் நீண்ட ஆயுள் நிலையான செல்வம், செல்வாக்கு அடைவார். அது மட்டுமின்றி சமுதாயத்தில் கௌரவம் மிக்க பதவிகளை அடையும் உண்டாகும். இந்த யோகம் முழுமையாக செயல்பட வேண்டும் என்றால் சனி கேந்திரத்தில் தனித்து சுபர் அல்லது அசுபர் பார்வை சேர்க்கை பெறாமல் இருக்க வேண்டும்.

    சச யோகம் பெறுவது அரிதான யோகம். சனிபகவான் 12 ராசிகளை கடக்க 30 ஆண்டுகாலம் ஆகிறது. இதில் துலாம், மகரம், கும்பம் ஆகிய மூன்று ராசிகளில் சஞ்சரிக்கும் காலத்தில் பிறந்தால் மட்டுமே கிடைக்கும். சசயோகத்தில் பிறந்தவர்களுக்கு ஆயுளை தீர்க்கமாக கொடுத்து விடுவார் சனி பகவான். இந்த யோகம் மிக அரிது என்பதால் இது அரிய பஞ்ச மகா புருஷ யோகம் ஆகும். 2020 முதல் 2025 வரை பிறக்கும் குழந்தைகள் பலருக்கு பஞ்சமாக புருஷ யோகமான சசமகாயோகம் அமையப்போகிறது.

    சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020

    சனி பகவான் தரும் யோகம்

    சனி பகவான் தரும் யோகம்

    சனி பகவான் ஒருவரின் ஜாதகத்தில் மேஷ லக்கினத்திற்கு 7,10 ல் இருந்தால், ரிஷபத்திற்கு 10ல் இருந்தால்,கடகத்திற்கு 4,7 ல் இருந்தால், சிம்மத்திற்கு 7ல் இருந்தால் துலாத்திற்கு லக்கினம் மற்றும் 4ல் இருந்தால் விருச்சிகத்திற்கு 4ல் இருந்தால் கும்பத்திற்கு லக்கினத்தில் இருந்தால் அது சச யோகம். மகரத்திற்கு ராசிநாதன் 10ஆம் வீடான துலாம் வி இருந்தால் அது சச யோகம்.மகரத்திற்கு 10ல் தனித்து எவர் சேர்க்கை பார்வை பெறாமல் உச்சம் பெறும் சனி முழுமையான சச யோகம் தர போகிறது என்று உணர்ந்து கொள்ள வேண்டும்.

    தலைமைப் பண்பு

    தலைமைப் பண்பு

    சச யோகத்தில் பிறந்தவர்கள் அரசு அதிகாரம், தலைமைப் பண்பு, புகழ், நல்ல வேலையாட்கள், செல்வம் ஆகியவற்றை உடையவர்கள். மக்களிடையே உள்ள செல்வாக்கு காரணமாக ஒரு கிராமம் அல்லது நகரத்திற்கு தலைவராக பதவி வகித்து வருவார்கள். தன்னைப் பெற்ற தாயிடம் எப்போதும் பணிவாக நடந்து கொள்வார்கள்.

    மேஷ லக்னம்

    மேஷ லக்னம்

    2020 ஆண்டு ஜனவரி மாதம் முதல் சனி பகவான் மகரம் ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். இது மேஷம் ராசி லக்னத்திற்கு பத்தாவது இடமாகும். 2020 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மேஷ ராசி லக்னத்தில் பிறக்கும் பிள்ளைகளுக்கு சசயோகமாக அமையப்போகிறது. கேந்திரத்தில் சனி பகவான் ஆட்சி பெற்று அமர்வது அற்புதமான யோகமாகும். நல்ல வேலை கிடைக்கும். கோச்சார ரீதியாக சனி பகவான் நல்ல யோகத்தை தருவார். ஆளுமை தன்மையுடன் இருப்பார்கள். கடல் கடந்து செல்லும் யோகம் வரும். படிப்பு வேலைக்காக வெளிநாடு செல்வார்கள். பெண்களுக்கு புதிய வேலை கிடைக்கும். தொழில் தொடங்குவார்கள். சுறுசுறுப்பாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.

    கடகம் லக்னம்

    கடகம் லக்னம்

    கடக ராசிக்காரர்களுக்கு சனி யோக காரகர் இல்லாவிட்டாலும் இந்த சனிப்பெயர்ச்சி சசமகா யோகத்தை தரப்போகிறது. கடகம் ராசி, கடக லக்னகாரர்களுக்கு சனி ஏழாம் வீட்டில் அமைவது கண்டச்சனி காலம் என்றாலும் சனி பகவான் தனது வீட்டில் ஆட்சி பெற்று அமரப்போவதால் இது சசமகாயோகமாக அமைகிறது. 2020 ஜனவரி சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு கடக ராசி கடக லக்னத்தில் பிறக்கப்போகும் குழந்தைகளுக்கு அற்புதமான தருணமாக அமையும். நிர்வாகத்திறன், தலைமை பதவியை ஏற்க வைப்பார். கோச்சாரரீதியாக சனி வருபவர்களுக்கும் உயர்பதவிகள் தேடி வரும். அரசியல்வாதிகளுக்கு தலைமைப் பதவி, அரசருக்கு ஒப்பான பதவியையும் யோகத்தையும் தேடித் தரும்.

    துலாம் லக்னம்

    துலாம் லக்னம்

    சனிபகவான் துலாம் ராசி லக்னத்திற்கு நான்காம் வீட்டில் அமரப்போகிறார். இது சசமகாயோகம் அமைப்பாகும். சனிபகவானின் பத்தாவது பார்வை துலாம் ராசியின் மீது விழுகிறது. நினைத்தது நிறைவேறும். இதுநாள்வரை வம்பு வழக்குகள் என்று இருந்தவர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி அற்புதமான பல நல்ல பலன்களைத் தரப்போகிறார். எதிரிகள், கடன்கள், நோய்கள் பிரச்சினைகள் தீரும். ஆட்சி பெற்ற சனியால் பலம் கூடும். வேலை, தொழிலில் முன்னேற்றமும் மாற்றங்களும் ஏற்படும். இந்த காலகட்டத்தில் பிறக்கப்போகும் குழந்தைகளுக்கு யோக ஜாதகமாக அமையும். துலாம் ராசி, லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி நீதித்துறையில் தலைமைப் பதவி தேடி வரும். அரசியல் அரசாங்க துறையில் நல்ல பதவியில் அமரும் அளவிற்கு வளர்ச்சி அடைவார்கள். மாணவர்கள் பலர் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல்மாணவராக தேர்ச்சியடையும் யோகம் வரும். வேலை, தொழில் அற்புதமாக அமையும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+