Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செப்டம்பர் மாத ராசிபலன் 2019: கடகம் ராசிக்காரர்களுக்கு கல்யாணம் கைகூடும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: செப்டம்பர் மாதத்தில் சூரியன் சிம்ம மாதத்திலும் கன்னி மாதத்திலும் சஞ்சரிக்கிறார். மாத முற்பகுதியில் சிம்ம ராசியில் சூரியன், சுக்கிரன், செவ்வாய், புதன், மிதுனத்தில் ராகு, விருச்சிகத்தில் குரு, தனுசு ராசியில் சனி கேது என கிரகங்கள் சஞ்சாரம் உள்ளது. மாத பிற்பகுதியில் கன்னியில் கிரகங்கள் கூட்டணி அமைக்கின்றன. செப்டம்பர் பிற்பகுதியில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கும் குரு, ஆறாம் இடத்து சனியால் கடகம் ராசிக்கு செப்டம்பரில் என்ன பலன்கள் என்று பார்க்கலாம்.

கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பார்த்தால் செப்டம்பர் 10,11 தேதிகளில் சுக்கிரன், புதன் கிரகங்கள் கன்னி ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகின்றன. மாத பிற்பகுதியில் சூரியனும் கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். 25ஆம் தேதி செவ்வாய் கன்னி ராசிக்கு நகர்கிறார். சனிபகவானும் நேர்கதியில் சஞ்சரிப்பது கடகத்திற்கு சாதகமான அம்சம்.

கடகம் ராசிக்காரர்களுக்க மாத முற்பகுதியில் மூன்றாம் வீடான சிம்மம் ராசியில் இணைந்திருந்த நான்கு கிரகங்கள் மாத இறுதியில் மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானமான கன்னி ராசியில் சேருகின்றன. இந்த கிரகங்களின் கூட்டணி மற்றும் மாற்றத்தினால் கடகம் ராசிக்காரர்களுக்கு என்னென்ன நடக்கும் பணவருமானம், கல்வி, வேலை வாய்ப்பு எப்படி என்று பார்க்கலாம்.

அற்புதமான கூட்டணி

அற்புதமான கூட்டணி

செப்டம்பர் மாதம் முதற்பகுதியில் கடகம் ராசிக்கு குடும்ப ஸ்தானத்தில் கோள்கள் இணைந்திருப்பதால் நன்மைகள் நடைபெறும் அற்புதமான கூட்டணி. யோகமான காலகட்டம். வெற்றிகரமான மாதம். தொழிலில் முன்னேற்றகரமான மாற்றம் நடக்கும். வளர்ச்சிகளை ஏற்படுத்தும். புதிய வேலை புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும். சுயமாக தொழில் தொடங்கலாம்.

வருமானம் கூடும்

வருமானம் கூடும்

சுக்கிரன் புதன் கூட்டணி கன்னி ராசியில் இணைகின்றனர். மூன்றாம் வீட்டில் புது கூட்டணி சேருவதால் 10 ஆம் தேதிக்கு மேல் வளர்ச்சி அதிகரிக்கும். வருமானம் கூடும். குரு பார்வை வக்ர நிவர்த்தி அடைந்து முழுமையாக கிடைக்கிறது. சுப பலன்கள் கொடுப்பார். பாசிட்டிவ் எனர்ஜியை தருவார். செயல்பாடுகள் அதிகரிக்கும். கடகம் செப்டம்பர் மாதம் நிறைய பாசிட்டிவ் எனர்ஜி தருகிறார்.

கடன்கள் விலகும்

கடன்கள் விலகும்

சனி ஆறாம் வீட்டில் வக்ர நிவர்த்தி அடைகிறார். சூரியன் செவ்வாய் கூட்டணி 17ஆம் தேதி பிரிகிறது. 17ஆம் தேதிக்கு முன்பாக நிறைய நல்ல விசயங்களை செய்து முடியுங்கள். 18ஆம் தேதி சனி வக்ர நிவர்த்தி அடைவதால் எதிரிகள் விலகி ஓடுவார்கள். கடன்கள் விலகும் நல்லது தேடி வரும். சுக்கிரன் புதன் சூரியன் செவ்வாய் கிரகங்களின் கூட்டணியால் அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். அனைத்து வயதினருக்கும் முயற்சிகளில் வெற்றியும் நன்மையும் நடக்கும்.

நல்ல காரியம் நடக்கும்

நல்ல காரியம் நடக்கும்

கடக ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் இரண்டாம் வீட்டில் சூரியன், செவ்வாய் புதன், சுக்கிரன் என இணைந்திருக்கின்றன. வருமானத்தை அதிகம் கொடுக்கும் குடும்பத்திற்காக அதிக செலவு செய்வீர்கள். செப்டம்பர் 10ஆம் தேதிக்கு மேல் லாப ஸ்தான அதிபதி 3 ஆம் வீட்டில் கன்னி ராசியில் நீசமடைகிறார் என்றாலும் புதன் உச்சமடைவதால் சுக்கிரன் நீசமடைவதால் வருமானம் அதிகரிக்கும். குரு பார்வை உங்க ராசிக்கு கிடைப்பதால் திருமணம் கை கூடி வரும்.

வாக்கு செவ்வாய் நாக்கில் கவனம்

வாக்கு செவ்வாய் நாக்கில் கவனம்

ஐந்தில் குரு அமர்திருப்பதால் படிப்பில் கவனம் தேவை. நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் பணம் வரும். ஆறாமிட சனி அற்புத மாற்றங்களை ஏற்படுத்துவார். கடக ராசி தன காரகன் தனத்தில் இருப்பதால் செல்வம் பெருகும். வாக்கில் செவ்வாய் சூரியன் இணைந்திருப்பதால் பேச்சில் கவனம் தேவை. பலமான கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது. சகோதர ஒற்றுமை சிறப்பாக இருக்கும். வண்டி வாகன வசதி ஏற்படும். சகோதர சகோதரிகளின் உறவுகள் மேம்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+