Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செப்டம்பர் மாத ராசிபலன் 2019: மிதுனம் ராசிக்கு வேலை வாய்ப்பு வருமானம் எப்படி

செப்டம்பர் மாதம் பிறக்கப் போகிறது. ஆவணி புரட்டாசி பாதி பாதி நாட்கள் இணைந்த இந்த மாதத்தில் மிதுனம் ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    24-08-2019 இன்றைய ராசி பலன்- வீடியோ

    சென்னை: செப்டம்பர் மாதத்தில் சூரியன் சிம்ம மாதத்திலும் கன்னி மாதத்திலும் சஞ்சரிக்கிறார். மாத முற்பகுதியில் சிம்ம ராசியில் சூரியன், சுக்கிரன், செவ்வாய், புதன், மிதுனத்தில் ராகு, விருச்சிகத்தில் குரு, தனுசு ராசியில் சனி கேது என கிரகங்கள் சஞ்சாரம் உள்ளது. மாத பிற்பகுதியில் கன்னியில் கிரகங்கள் கூட்டணி அமைக்கின்றன. செப்டம்பர் பிற்பகுதியில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். கண்ட சனி, ஆறாம் இடத்து குருவினால் மிதுனம் ராசிக்கு செப்டம்பரில் என்ன பலன்கள் என்று பார்க்கலாம்.

    கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பார்த்தால் செப்டம்பர் 10,11 தேதிகளில் சுக்கிரன், புதன் கிரகங்கள் கன்னி ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகின்றன. மாத பிற்பகுதியில் சூரியனும் கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். 25ஆம் தேதி செவ்வாய் கன்னி ராசிக்கு நகர்கிறார். சனிபகவானும் நேர்கதியில் சஞ்சரிப்பது சாதகமான அம்சம்.

    மிதுனம் ராசிக்காரர்களுக்க மாத முற்பகுதியில் மூன்றாம் வீடான சிம்மம் ராசியில் இணைந்திருந்த 4 கிரகங்கள் மாத இறுதியில் நான்காம் வீடான சுக ஸ்தானமான கன்னி ராசியில் சேருகின்றன. இந்த கிரகங்களின் கூட்டணி மற்றும் மாற்றத்தினால் மிதுனம் ராசிக்காரர்களுக்கு என்னென்ன நடக்கும் பணவருமானம், கல்வி, வேலை வாய்ப்பு எப்படி என்று பார்க்கலாம்.

    காரியங்களில் வெற்றி

    காரியங்களில் வெற்றி

    மிதுன ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் 3ஆம் வீட்டில் நான்கு கிரகங்கள் கூட்டணி சேர்ந்துள்ளனர். ஏழாம் வீட்டில் சனி கேது. ஆறாம் வீட்டில் குரு என மாத முற்பகுதியில் சஞ்சரிக்கின்றனர். மாத பிற்பகுதியில் 4 கிரகங்கள் நான்காம் வீட்டில் சேருகின்றனர். காரியங்களில் வெற்றி கிடைக்கும். செப்டம்பர் முற்பகுதியிலேயே கன்னி ராசியில் உங்க ராசி நாதன் ஆட்சி உச்சம் பெறப்போகிறார். மனதை மகிழ்ச்சியாக கொண்டு செல்லும் மாதம் இது. குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

    உடல்நிலையில் கவனம்

    உடல்நிலையில் கவனம்

    மூன்றாம் வீட்டில் சூரியன் செவ்வாய் மூன்றாம் வீட்டில் இருந்தாலும் சுக்கிரன் புதன் இருக்கின்றனர். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. மாத மத்தியில் அதாவது 10, 11ஆம் தேதி கிரகங்களின் சஞ்சாரத்தில் முக்கிய மாற்றம் வருகிறது. அதாவது 10ஆம் தேதி சுக்கிரன் கன்னி ராசியில் நீசமடைகிறார். 11ஆம் தேதி கன்னி ராசியில புதன் ஆட்சி உச்சம் பெறுகிறார். சனி வக்ர நிவர்த்தி அடைவதால் 18ஆம் தேதி முதல் கண்டச்சனியால் கவனம் தேவை.

    இடமாற்றத்தால் லாபம்

    இடமாற்றத்தால் லாபம்

    பணியிடத்தில் தற்காலிக இட மாற்றம் தருவார்கள். ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். மனநிலை அற்புதமாக இருக்கும். எந்த காரியத்திலும் தைரியமாக இறங்கலாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். சகோதர சகோதரிகளிடையே கருத்து வேறுபாடுகள் மறையும். நன்மைகள் அதிகம் நடைபெறும் மாதம் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பண உதவி கிடைக்கும். தாய் வழி உறவுகளிடையே இணக்கமான நிலை ஏற்படும்.

    பகை விலகும்

    பகை விலகும்

    குழந்தைகள் உங்களை புரிந்து கொண்டு நடப்பார்கள். சில சமயங்களில் எதிர்ப்புகள், பகை இருந்தாலும் மாத பிற்பகுதியில் உங்களுக்கு சாதகமாக மாறும். காதலர்கள் சண்டை போட்டுக்கொண்டிருந்தாலும் இந்த மாதம் பிரிந்தவர்கள் கூடுவதற்கான வாய்ப்பு உள்ளது. கிரகங்கள் சரியான நிலையில் சஞ்சரிக்கின்றன. எச்சரிக்கையுடன் உறவுகளை தேர்வு செய்யவும்.

    திருமணத்தில் ஜாக்கிரதை

    திருமணத்தில் ஜாக்கிரதை

    17ஆம் முதல் நான்காம் வீட்டில் சூரியன் இணைகிறார். மிதுனம் திருமண வாழ்க்கையில் சுமார்தான். எனவே இப்போது திருமண முயற்சிகளை செய்ய வேண்டாம். பாதிப்பு உங்களுக்கு வரும். வாழ்க்கைத்துணையை பார்த்து முடிவு பண்ணுங்கள். இழுபறியான நிலைகளை ஏற்படுத்துவார்கள். 25ஆம் தேதிக்கு மேல் செவ்வாயும் நான்கில் இணைகிறார் சுக ஸ்தானத்தில் சுக்கிரன் புதன் செவ்வாய் இணைவினால் சுறுசுறுப்பு ஏற்படும் பயணங்கள் வெற்றியடையும். மன மகிழ்ச்சியை தரும்.

    பிரச்சினைகள் விலகும்

    பிரச்சினைகள் விலகும்

    தம்பதியர் இடையே இணக்கமான நிலை ஏற்படும். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகள் விலகும். தொழில் ரீதியான முன்னேற்றம் ஏற்படும். முதலீடு செய்து வெற்றி பெறலாம். புத ஆதிபத்ய யோகத்தோடு இருக்கும் கிரகங்களினால் மாணவர்கள் கல்வியில் மாற்றம் வரும். தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+