செப்டம்பர் மாத ராசி பலன் 2022.. நவ கிரகங்களும் சாதகம்.. யாருக்கு வருமானம் குவியப்போகிறது தெரியுமா?
சென்னை: செப்டம்பர் மாதம் நவ கிரகங்களின் சஞ்சாரத்தினால் சில ராசிக்காரர்களின் வாழ்வில் ஜாக்பாட் அடிக்கப்போகிறது. திடீர் வருமானம் வந்து திக்குமுக்காட வைக்கப்போகிறது. சூரியன் சிம்மம், கன்னி ராசிகளில் பயணம் செய்வார். புதன் உச்சம் பெற்று கன்னி ராசியில் பயணம் செய்வார். மாத பிற்பகுதியில் சூரியனும் உச்சம் பெற்ற புதனும் இணைந்து புதாத்திய யோகத்தை தரப்போகின்றனர். செப்டம்பர் மாதத்தில் கடக ராசியில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கப் போகிறது என்று பார்க்கலாம்.
செப்டம்பர் மாதம் கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பார்த்தால் ரிஷப ராசியில் செவ்வாய், சூரியன் 17ஆம் தேதி கன்னி ராசிக்கு சென்று உச்சம் பெற்ற புதனோடு இணைகிறார். சுக்கிரன் சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். குரு மீன ராசியிலும் சனி பகவான் மகர ராசியிலும் வக்ரமடைந்து பயணம் செய்கின்றனர்.
கன்னி ராசியில் உச்சம் பெற்றிருக்கும் புதன் செப்டம்பர் 10 ஆம் தேதி வக்ரமடைகிறார். மாத இறுதியில் சுக்கிரன் கன்னி ராசியில் புதன், சூரியனுடன் இணைகிறார். இது புதுவித யோகத்தை தரப்போகிறது. நவகிரகங்களினால் கடக ராசியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் இரண்டாம் வீட்டில் சூரியன், சுக்கிரன், மூன்றாம் வீட்டில் உச்சம் பெற்ற புதன் நான்காம் வீட்டில் கேது, ஏழாம் வீட்டில் சனி ஒன்பதாம் வீட்டில் குரு பத்தாம் வீட்டில் ராகு லாப ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் பயணம் செய்கின்றன. உங்களுக்கு கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. எந்த விதமான தடைகளும் இன்றி காரிய வெற்றி உண்டாகும். புதிய வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான மாதம். கூட்டுத் தொழில் செய்பவர்கள் தொழில் மூலம் ஆதாயம் காண்பார்கள். கட்டிடத் துறையில் தொழில் செய்யும் ரியல் எஸ்டேட் செய்பவர்கள் அதிக லாபத்தை எதிர்பார்க்கலாம்.

திருமணம் கைகூடி வரும்
சனியின் பார்வையால் சில பிரச்சினைகள் இருந்தாலும் குருவின் பார்வையும் கிடைப்பதால் அற்புதங்கள் நிகழும். திருமண சுப காரியம் நன்றாக நடைபெறும். வரன் பார்க்க ஆரம்பியுங்கள் கை கூடி வரும். குரு பலன் உள்ளதால் சுப காரியங்கள் நடைபெற உள்ளது. காதலிப்பவர்களுக்கு குடும்பத்தினர் ஆதரவுடன் திருமணம் கை கூடி வரும். புத்திரபாக்கியம் கைகூடி வரும்.

வீடு இடம் மாற்றம்
பெண்களுக்கு செல்வாக்கும் சொல்வாக்கும் அதிகரிக்கும். கணவரின் ஆதரவும் கிடைக்கும். வண்டி வாகனம் வாங்கலாம். வீடு வாங்கவும் புது வீடு மாறவும் நல்ல காலம். நண்பர்கள், உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். பண வருமானம் அதிகரிக்கும். மாத பிற்பகுதியில் சூரியன் புதனோடு இணைந்து புதாத்திய யோகம் பெறுகிறார். மாணவர்களுக்கு சிறப்பான மாதம். வெளியூர் வெளிநாடு சென்று படிக்க நல்ல நேரம்.

உடல் ஆரோக்கியம்
சின்னச் சின்ன உடல் நலத்தொந்தரவுகள் வந்து போகும். உணவு விசயத்தில் கவனமாக இருப்பது நல்லது. உங்கள் ஆரோக்கியம் இந்த மாதம் சீராக இருக்கும் என்றாலும் அஜீரணக் கோளாறு மற்றும் குடல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வரலாம். நேரம் தவறாமல் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது நல்லது. உங்கள் பெற்றோரின் உடல் நலனில் அக்கறை தேவை. மொத்தத்தில் செப்டம்பர் மாதம் உடம்பும் மனதும் உற்சாகமாக இருக்கும் மாதமாக அமைந்துள்ளது.
-
ஜூன் மாத பலன்: மேஷ ராசிக்கு ஜூனில் வரப்போகும் சூப்பர் மாற்றம்.. நினைத்தது நிறைவேறும் யோகம் -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கும்ப ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கும் குரு, புதன், சுக்கிரன்.. இந்த விஷயங்களில் மட்டும் கவனம் -
Viruchigam: விருச்சிக ராசிக்கு ராஜயோகம்.. சொல்லி அடிக்கும் யோக காலகட்டம் -
குருப்பெயர்ச்சியால் வரப்போகும் மாற்றம்.. மகர ராசிக்கு இந்த வாரம் அடிக்கும் லக்கி ஜாக்பாட் -
குருவின் அருளால் தனுசு ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 3 அதிர்ஷ்ட நாட்களில் கொட்டும் பணம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications