செப்டம்பர் மாத ராசி பலன் 2023.. குரு,சனியின் வக்ர பயணம்.. சாதிக்கப்போகும் ராசிக்காரர்கள் யார்?
சென்னை: செப்டம்பர் மாதம் பிறந்து விட்டது. நவ கிரகங்களின் தலைவர் சூரியன் ஆட்சி பெற்ற நிலையில் பயணம் செய்யும் சிம்ம மாதமும் புதன் உச்சம் பெறும் கன்னி மாதமும் இணைந்த செப்டம்பர் மாதத்தில் புதாத்ய யோகம் சில ராசிக்காரர்களுக்கு தேடி வரப்போகிறது. குரு, சனி வக்ர நிலையில் பயணம் செய்வதால் சில ராசிக்காரர்களுக்கு மகாலட்சுமியின் அருளால் அற்புத யோகங்கள் தேடி வரப்போகிறது.
நவ கிரகங்கள் பயணம்: செப்டம்பர் மாதம் கிரகங்களின் பயணத்தைப் பார்த்தால் மேஷத்தில் குரு, ராகு, கடகத்தில் சுக்கிரன், சிம்ம ராசியில் சூரியன், புதன், கன்னி ராசியில் செவ்வாய், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி பகவான் என கிரகங்கள் பயணம் செய்கின்றன. கிரகங்களின் வக்ர நிலையில் பலருக்கு அற்புதமான யோகங்கள் கிடைக்கப்போகிறது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களில் யாரெல்லாம் துன்பத்தை தொலைத்து இன்பத்தில் திளைக்கப்போகிறார்கள் யார் என்று பார்க்கலாம்.

மேஷம்: உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் புதன் சூரியன் சேர்க்கை அற்புதத்தை ஏற்படுத்த போகிறது. வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பெரிய அளவில் மாற்றங்களை எதிர்பார்க்க வேண்டாம். குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். புது வீடு குடி போக கிரகப்பிரவேசம் செய்ய இது நல்ல மாதம். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். எலும்பு தொடர்பான நோய்கள் உடல் ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட்டிருந்தாலும் இந்த மாதம் நோய் பாதிப்புகள் நீங்க வாய்ப்பு உள்ளது. திருமணம் கைகூடி வரும். திருமணமான தம்பதியினருக்கு புத்திரபாக்கியம் கைகூடி வரும். நல்ல செய்தி தேடி வரும் மாதமாகும்.
ரிஷபம்: குரு 12ஆம் வீட்டில் வக்ரமடைந்து இருப்பதால் வீண் விரைய செலவாகிவிடும். சனி பத்தாம் வீட்டில் வக்ரமடைந்திருப்பதால் பெரிய அளவில் தொழில் முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலை தவிர்ப்பது நல்லது. யாருக்கும் பணம் கடனாக கொடுக்க வேண்டாம். பிட்காயின்,பங்குச்சந்தை போன்றவைகளில் முதலீடு செய்து பணத்தை இழக்காதீர்கள்.புதன் வக்ரமடைந்தாலும் கவலையில்லை. நினைத்த காரியம் நிறைவேறும். திருமண சுப காரியம் தொடர்பாக பேசலாம். வரன்கள் பேசி முடிக்கலாம். காதலிப்பவர்களுக்கு அற்புதமான மாதம். திருமணம் கை கூடி வரும். பெண்களுக்கு பரிசு பொருட்கள் தேடி வரும். பெண்களுக்கு வீட்டிலும் அலுவலகத்திலும் மதிப்பு மரியாதை கூடும். உங்களை நீங்களே அழகுப்படுத்திக்கொள்ள அதிக பொருட்களை வாங்குவீர்கள். மொத்தத்தில் செப்டம்பர் மாதம் அற்புதங்கள் நிறைந்த மாதமாக ரிஷப ராசிக்காரர்களுக்கு அமைந்துள்ளது.
மிதுனம்: சனி பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் வக்ர நிலையில் பயணம் செய்வதால் சாதகமான பலன்களைத் தருவார். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். குரு லாப ஸ்தானத்தில் இருக்கிறார். உங்களுக்கு இப்போது பெரிய அளவில் மாற்றங்கள் எதுவும் வேண்டாம். முயற்சி செய்யும் சிலருக்கு புது வேலை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. தொழிலில் எந்த மாற்றமும் இல்லை. குரு பார்வையில் ராசி நாதன் புதன் அமர்ந்திருப்பது சிறப்பு. வக்ரமடைந்த குரு மீது சனியின் பார்வை கிடைக்கிறது. உடல் ஆரோக்கியத்தில் இருந்த தொந்தரவுகள் நீங்கும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது.

கடகம்: செப்டம்பர் மாதத்தில் குரு, சனி வக்ர நிலையில் பயணம் செய்வதால் எந்த விதமான தடைகளும் இன்றி காரிய வெற்றி உண்டாகும். புதிய வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான மாதம். கூட்டுத் தொழில் செய்பவர்கள் தொழில் மூலம் ஆதாயம் காண்பார்கள். சுப காரியங்கள் நடைபெறும். காதலிப்பவர்களுக்கு குடும்பத்தினர் ஆதரவுடன் திருமணம் கை கூடி வரும். புத்திரபாக்கியம் கைகூடி வரும். பெண்களுக்கு செல்வாக்கும் சொல்வாக்கும் அதிகரிக்கும். கணவரின் ஆதரவும் கிடைக்கும். வண்டி வாகனம் வாங்கலாம். வீடு வாங்கவும் புது வீடு மாறவும் நல்ல காலம். நண்பர்கள், உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். பண வருமானம் அதிகரிக்கும். இரண்டாம் வீட்டில் சூரியன் புதனோடு இணைந்து புதாத்திய யோகம் பெறுகிறார். மாணவர்களுக்கு சிறப்பான மாதம். வெளியூர் வெளிநாடு சென்று படிக்க நல்ல நேரம். சின்னச் சின்ன உடல் நலத்தொந்தரவுகள் வந்து போகும். உணவு விசயத்தில் கவனமாக இருப்பது நல்லது. உங்கள் ஆரோக்கியம் இந்த மாதம் சீராக இருக்கும் என்றாலும் அஜீரணக் கோளாறு மற்றும் குடல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வரலாம். நேரம் தவறாமல் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது நல்லது. உங்கள் பெற்றோரின் உடல் நலனில் அக்கறை தேவை. மொத்தத்தில் செப்டம்பர் மாதம் உடம்பும் மனதும் உற்சாகமாக இருக்கும் மாதமாக அமைந்துள்ளது.
சிம்மம்: உங்கள் ராசியில் ஆட்சி பெற்ற சூரியன் உடன் கூடவே புதன் பயணம் செய்கிறார். இரண்டாம் வீட்டில் ஆட்சி உச்சம் பெற்ற புதன், மூன்றாம் வீட்டில் கேது, 6ல் சனி வக்ரம், எட்டாம் வீட்டில் குரு ஒன்பதாம் வீட்டில் ராகு, செவ்வாய் பகவான் பத்தாம் வீட்டில் என கிரகங்கள் பயணம் செய்கின்றன. உங்களுக்கு இந்த மாதம் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். நல்ல காரியங்கள் அதிகம் நடைபெறப்போகிறது. ஆட்சி பெற்ற கிரகங்களினால் உங்களின் பலம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை, தைரியம் கைகூடும். தொழில் வேலை விசயமாக எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும், அதிகார பதவி கிடைக்கும். புரமோசன் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். உங்களின் எதிர்கால செலவுகளுக்குப் பயன்படும். பணம் கொடுக்கல் வாங்கல் விசயத்தில் கவனம் தேவை. யாருக்கும் கடன் கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம்.

கன்னி: செப்டம்பர் மாதத்தில் குரு, சனி வக்ர நிலையில் பயணம் செய்வதால் கன்னி ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்கள் ஏற்படப்போகிறது. இடமாற்றங்கள் ஏற்படும். செவ்வாய் பகவான் ராசியில் பயணம் செய்வதால் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கப்போகிறது. ராசிநாதன் புதன் 12ஆம் வீட்டில் சூரியனுடன் இணைந்து பயணம் செய்கிறார். புதாத்திய யோகம் கிடைத்துள்ளது. நல்ல வேலையில் இருப்பவர்கள் இதே வேலையில் தொடருங்கள் புதிய வேலை மாற்றத்திற்கு முயற்சிகள் வேண்டாம். குடும்பத்தில் இருந்த சின்னச் சின்ன பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. புத்திரபாக்கியம் கை கூடி வரப்போகிறது. தடைகளைத் தாண்டி முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு நல்ல மாதம் நினைத்த கல்லூரியில் இடம் கிடைக்கும். புதிய முயற்சிகளை ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications