செப்டம்பர் மாத ராசி பலன் 2023.. 5 ராசிக்காரர்கள் வாழ்க்கையை புரட்டி போடப்போகும் குரு, சனி.. உஷார்
சென்னை: நவ கிரகங்களின் தலைவர் சூரியன் சிம்ம ராசியில் ஆட்சி பெற்ற நிலையில் பயணம் செய்யும் சிம்ம மாதமும் புதன் உச்சம் பெறும் கன்னி மாதமும் இணைந்த செப்டம்பர் மாதத்தில் புதாத்ய யோகம் சில ராசிக்காரர்களுக்கு தேடி வரப்போகிறது. குரு, சனி வக்ர நிலையில் பயணம் செய்வதால் துலாம், விருச்சிகம்,தனுசு,மகரம்,கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்னென்ன யோகங்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
நவ கிரகங்கள் பயணம்: செப்டம்பர் மாதம் கிரகங்களின் பயணத்தைப் பார்த்தால் மேஷத்தில் குரு, ராகு, கடகத்தில் சுக்கிரன், சிம்ம ராசியில் சூரியன், புதன், கன்னி ராசியில் செவ்வாய், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி பகவான் என கிரகங்கள் பயணம் செய்கின்றன. கிரகங்களின் வக்ர நிலையில் பலருக்கு அற்புதமான யோகங்கள் கிடைக்கப்போகிறது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களில் யாரெல்லாம் துன்பத்தை தொலைத்து இன்பத்தில் திளைக்கப்போகிறார்கள் யார் என்று பார்க்கலாம்.

துலாம்: உங்கள் ராசிக்கு நேர் எதிரே குரு பகவான வக்ர நிலையில் பயணம் செய்கிறார். சனி பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் வக்ரநிலையில் சஞ்சரிக்கிறார். செப்டம்பர் மாதத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு ராகு கேதுவினால் மனகுழப்பங்கள் வந்து நீங்கும். வேலையில் பளு அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டுக்கொண்டு செய்வீர்கள். அலுவலகத்தில் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. விட்டுக்கொடுத்து செல்லுங்கள். இந்த மாதம் பொறுமையும் நிதானமும் அவசியம். குடும்பத்தில் கார சார விவாதங்கள் வந்து செல்லும். வண்டி வாகனங்கள் வாங்குவதற்கு முயற்சி செய்வீர்கள் எனவே உங்களுடைய வாழ்க்கை துணையின் பெயரில் வாங்குவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம்.
விருச்சிகம்: செப்டம்பர் மாதத்தில் சுக ஸ்தானத்தில் வக்ர நிலையில் சனி பயணம் செய்கிறார். ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் குரு பகவான் பயணம் செய்கிறார். ராசி நாதன் 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் பயணம் செய்வது சிறப்பு. பத்தாம் வீட்டில் சூரியன் ஆட்சி பெற்று புதனுடன் பயணம் செய்வதால் புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திடீர் வருமானம் வரும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை கூடும். திருமண முயற்சிகள் கை கூடி வரும். காதல் இனிக்கும் உறவினர்கள் ஆசியுடன் திருமணத்தில் முடியும். பெண்களுக்கு பொன்நகை, ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி நிவர்த்தி அடையும். நீங்கள் நினைத்த காரியம் கைகூடி வரும் மாதமாக செப்டம்பர் மாதம் அமைந்துள்ளது.

தனுசு: குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே.. உங்கள் ராசிநாதன் குரு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் வக்ர நிலையில் பயணம் செய்தாலும் வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உங்களுடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புதிய வேலை நல்ல சம்பளத்தில் கிடைக்க வாய்ப்பு உள்ளது. திருமண சுபகாரியம் கை கூடி வரும். குடும்ப வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். குடும்ப வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும். நினைத்த காரியம் நிறைவேறும். வீடு கட்ட முயற்சி செய்யலாம். மாணவர்களுக்கு நினைத்த கல்லூரியில் இடம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உணவு விசயத்திலும் நிதானமாக இருப்பது அவசியம். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல காலம் கை கூடி வருகிறது. இல்லத்தரசிகள் நிதானம் தேவை. சமையல் அறையிலோ, வேலை செய்யும் இடத்திலோ விழிப்புணர்வு அவசியம். வெளியூர் பயணங்களில் கவனம் தேவை. தேவையற்ற கோபத்தை குறைக்கவும். மொத்தத்தில் செப்டம்பர் மாதம் யோகத்தை தரக்கூடிய மாதமாக அமைந்துள்ளது.
மகரம்: அற்புதமான பலன்கள் கிடைக்கப் போகிறது. எதற்காகவும் கவலைப்படாதீர்கள். ஆலய வழிபாட்டில் ஈடுபட்டு மன தைரியத்தை அதிகரித்துக்கொள்வீர்கள். ஏழரை சனி காலமாக உள்ளது. குரு பகவான் நான்காம் வீட்டில் ராகு உடன் பயணம் செய்கிறார். பயணங்கள் உண்டாகும். சொத்து சேர்க்கை ஏற்படும். மனதில் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். குடும்பத்தில் திடீர் பணத்தேவை ஏற்படும். சமூகத்தில் உங்களின் செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். குரு பகவானின் பார்வையால் பொருளாதார வளம் அதிகரிக்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பூர்வீக சொத்து பிரச்சினைகள் முடிவுக்கு வரும். திருமணமானவர்களுக்கு புத்திர பாக்கியம் கை கூடி வரும். அலுவலகத்தில் மதிப்பு மரியாதை கூடும். புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள். புதிய பதவிகள் வந்து சேரும்.

கும்பம்: செப்டம்பர் மாதத்தில் கும்ப ராசிக்காரர்கள் உங்கள் பயணங்களில் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும்.
களத்திர ஸ்தானத்தில் உள்ள புதனுடன் சூரியன் இணைந்து பயணம் செய்வது சிறப்பு. ராசியில் உள்ள சனிபகவான் ஏழாவது வீட்டினை பார்ப்பது சிறப்பு. நல்ல வேலை கிடைக்கும். வண்டி வாகனங்களில் கவனம் தேவை. குடும்பத்தில் சில நேரங்களில் போர்க்களமாக இருக்கும். கோபமான பேச்சுக்களைக் கட்டுப்படுத்தவும். குருபகவான் மூன்றாவது வீட்டில் ஆட்சி பெற்று பயணம செய்கிறார். பண விவகாரங்களில் கவனம் தேவை. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட்டு கடன் வாங்கித் தர வேண்டாம். புது வேலைக்கு முயற்சி செய்யாதீர்கள். வேலையில் பளு அதிகரிக்கும். இருக்கிற வேலையை கவனமாக செய்வது நல்லது. தொழிலில் புதிய அளவில் முதலீடுகள் செய்ய வேண்டாம். ஏழரை சனி கொடுக்கும் படிப்பினைகளை ஏற்க தயாராகுங்கள். புது வண்டி வாகனம் வாங்குவதை தவிர்க்கவும். அதே நேரத்தில் புதிய சொத்துக்கள் வாங்கலாம். வீடு கட்ட முயற்சி செய்யலாம். மாணவர்களுக்கு இது நல்ல மாதம், வெளியூர் சென்று படிக்கத் தயாராவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வண்டி வாகனங்களில் செல்லும் போது நிதானம் அவசியம். இந்த மாதம் அதிக விழிப்புணர்வுடனும் பாதுகாப்புடனும் இருப்பது அவசியம்.
மீனம்: உங்களுடைய ராசிநாதன் குரு பகவான் உங்கள் ராசிக்கு 2ஆம் வீட்டில் ராகு உடன் வக்ர நிலையில் பயணம் செய்கிறார். குருவின் பார்வையும் குடும்பத்தில் குதூகலத்தைத் தரும். உங்களின் தைரியம் தன்னம்பிக்கை கூடும். நிறைய பண வரவு வரும். செப்டம்பர் மாதத்தில் குரு வக்ரம், சனி வக்ரம், புதன், சுக்கிரன் வக்ரமடைந்து பயணம் செய்கின்றனர். கிரகங்கள் சாதகமாகவே உள்ளன. வேலை விசயத்தில் புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். புதிய தொழில் முயற்சிகளுக்கு லாபம் கிடைக்கும். உங்கள் வாழ்க்கையை சனி பகவான் புரட்டிப்போடப்போகிறார். காதல் திருமணத்திற்கு ஏற்ற காலம். செவ்வாய் பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. பெற்றோரின் ஆதரவுடன் திருமணம் கை கூடி வரும். வாக்கு ஸ்தானத்தில் ராகு இருப்பதால் தேவையின்றி வாக்கு தர வேண்டாம். தேவையில்லாத விசயத்தை பேச வேண்டாம் கவனம் தேவை.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்?












Click it and Unblock the Notifications