செப்டம்பர் மாத ராசிபலன் 2019: கன்னி ராசிக்கு காதல் மலரும் காலம்
கன்னி ராசிக்காரர்களே... செப்டம்பர் மாதம் காதல் கனியும் கல்யாண களை கட்டும் என்று சொல்லும் அளவிற்கு கிரகங்களின் கூட்டணியும் சஞ்சாரமும் அமைந்துள்ளது.
Recommended Video
சென்னை: செப்டம்பர் மாதத்தில் சூரியன் சிம்ம மாதத்தில் பாதி நாட்களும் கன்னி மாதத்தில் பாதி நாட்களும் சஞ்சரிக்கிறார். மாத முற்பகுதியில் சிம்ம ராசியில் சூரியன், சுக்கிரன், செவ்வாய், புதன், என நான்கு கிரகங்களின் கூட்டணி அமைந்துள்ளது. மிதுனத்தில் ராகு, விருச்சிகத்தில் குரு, தனுசு ராசியில் சனி கேது என கிரகங்கள் சஞ்சாரம் உள்ளது. மாத பிற்பகுதியில் கன்னியில் நான்கு கிரகங்கள் கூட்டணி அமைக்கின்றன. செப்டம்பர் பிற்பகுதியில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். நான்காம் வீட்டில் சஞ்சரிக்கும் சனி, மூன்றாம் வீட்டில் சஞ்சரிக்கும் குருவினால் கன்னி ராசிக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.
கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பார்த்தால் செப்டம்பர் 10,11 தேதிகளில் சுக்கிரன், புதன் கிரகங்கள் கன்னி ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகின்றன. மாத பிற்பகுதியில் சூரியனும் கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். 25ஆம் தேதி செவ்வாய் கன்னி ராசிக்கு நகர்கிறார். சனிபகவானும் நேர்கதியில் சஞ்சரிப்பது கன்னி ராசிக்கு பாதிப்புகள் குறையும் தொல்லைகள் தீரும்.
கன்னி ராசிக்காரர்களுக்கு மாத முற்பகுதியில் விரைய ஸ்தானத்தில் இணைந்திருக்கும் நான்கு கிரகங்கள் மாத இறுதியில் சொந்த வீடான கன்னி ராசியில் கூட்டணி சேருகின்றன. இந்த கிரகங்களின் கூட்டணி மற்றும் மாற்றங்களினால் கன்னி ராசிக்காரர்களுக்கு என்னென்ன நடக்கும் பணவருமானம், கல்வி, வேலை வாய்ப்பு திருமண முயற்சி எப்படி என்று பார்க்கலாம்.

கிரகங்களின் கூட்டணி
புதனை ஆட்சி நாதனாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் குரு, நான்காம் வீட்டில் சனி கேது, தொழில் ஸ்தானமான 10ஆம் வீட்டில் ராகு 12ஆம் வீட்டில் சூரியன், சுக்கிரன், புதன், செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. 10 ஆம் தேதி சுக்கிரன் உங்க ராசிக்கு வந்து நீச்சமடைகிறார். 11ஆம் தேதிக்கு மேல் உங்க ராசியில் சுக்கிரனும் புதனும் இணைந்து மாத இறுதி வரை இணைந்து சஞ்சரிப்பதால் உற்சாகம் கூடும். மனதளவில் ஆரோக்கியமும் தெம்பும் கூடும். அதே நேரத்தில் மூன்றாம் இட குருவும் நான்காம் இடத்து சனியும் உங்களுக்கு தடைகளை ஏற்படுத்துவார்கள்.

சுப விரைய செலவுகள்
உங்க ராசி நாதன் புதன் விரைய ஸ்தானத்தில் இருந்து 11 ஆம் தேதிக்கு மேல் உங்க ராசியில் ஆட்சி உச்சமடைகிறார். மாத முற்பகுதியில் விரைய ஸ்தானத்தில் கிரகங்கள் இருப்பதால் செலவுகள் அதிகம் இருக்கும். சுப செலவுகளாக மாற்றுங்கள். சகோதர சகோதரிகளுக்கு அதிக செலவுகளை செய்வீர்கள். அம்மாவிற்கு இருந்து வந்த பாதிப்புகள் விலகும். சனி வக்ர நிவர்த்தி அமைந்து சுப பார்வை பார்க்கிறார். கடன் பிரச்சினைகள் தொல்லைகள் தீரப்போகிறது.

காதல் கனியும்
தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். சுக்கிரன் ராசியில் நீச பங்கம் பெற்று அமர்ந்திருப்பதால் முகத்தில் பொலிவு கூடும். இந்த மாதத்தில் இருந்து கஷ்டங்கள் நீங்கும் விடிவு காலம் பிறக்கப் போகிறது. பிரச்சினைகள் குறையும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை ஏற்படும். திருமண பேச்சுவார்த்தை சுபமாக முடியும். ராசிக்குள் சுக்கிரனும் செவ்வாயும் இணைவதால் காதல் திருமணம் செய்வதற்கு ஏற்ற மாதம் காதல் வசப்படுவீர்கள். மனதில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். இன்பமும் மகிழ்ச்சியும் ஏற்படும்.

முன்னேற்றம் வரும்
தொழிலில் லாபம் அதிகம் கிடைத்தாலும் விரைய ஸ்தானாதிபதி 17ஆம் தேதி வரை விரைய ஸ்தானத்தில் இருப்பதால் செலவுகள் வரும். சொந்த பந்தங்கள் உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும் ஆனால் வயதானவர்கள் கவனமாக இருக்கவும். பூர்வீக சொத்துக்கள் உங்கள் கைக்கு வரும். தடைகள் விலகி முயற்சியும் முன்னேற்றமும் கிடைக்கும். வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.

வெற்றிகள் குவியும்
சனிபகவான் 18ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைவது பெரிய ரிலீப். பாதிப்புகளும் தடைகளும் நீங்கும். இந்த மாதத்தில் மன உளைச்சல் நீங்கும். இந்த மாதம் தன்னம்பிக்கையோடு செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். புதிய திட்டங்களை தீட்டுவீர்கள், வெளிநாடு செல்வது விசயமாக முடிவு செய்வீர்கள். நல்ல நேரம் நெருங்கி விட்டது. இந்த மாதம் நினைத்ததை சாதிப்பீர்கள். மாத பிற்பகுதியில் நன்மைகள் நடைபெறும்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications