Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனிபகவான் பார்வையால் பாதிப்பா? - 12 ராசிக்கும் பலன்கள் எப்படி ?

சனி பகவான் ஒரு ராசியில் தனது பயணத்தைச் சுமார் இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்கிறார் சனி பகவான். அவர் 3,7,10ஆம் பார்வையாக பிற ராசிகளை பார்க்கிறார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சனி பெயர்ச்சி..எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்?- வீடியோ

    சென்னை: சனிபகவானின் பார்வை தான் இருக்கும் இடத்தில் இடத்தில் இருந்து 3 ராசிகளின் மீது படுகிறது. தனுசு ராசியில் அமர்ந்துள்ள சனிபகவான், கும்பம், மிதுனம், கன்னி ராசிகளை பார்வையிடுகிறார்.

    சூரிய புத்திரன் சனீஸ்வர பகவானின் பார்வையில் ஓர் அபார சக்தி உள்ளது. அவரது பார்வை பட்ட மாத்திரத்திலேயே பல விபரீதங்கள் ஏற்படும்!. அவரது அம்மா சாயாதேவி, குழந்தை சனீஸ்வரனின் நிலை கண்டு கண் கலங்கினாள்.

    தனது மகனால் மற்றவர்களுக்குத் துன்பம் ஏதும் வர வேண்டாம் என்பதற்காக, சனீஸ்வரரை எங்கும் அனுப்பாமல், தனது கண்காணிப்பில் தனது லோகத்திலேயே வைத்துக் கொண்டிருந்தாள்.

    விருச்சிகம், தனுசு, மகரம் ராசிக்காரர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி ஏழரை சனி காலமாகும். ரிஷபம் ராசிக்காரர்களுக்கு அட்டம சனியாகவும், மிதுனம் ராசிக்காரர்களுக்கு கண்டச்சனியாகவும், கன்னி ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனியாகவும் இருக்கிறார் சனிபகவான் எனவேதான் தோஷ நிவர்த்திக்காக சனிபகவானை சரணடைகின்றனர். சனிபகவானின் பார்வை மூலம் என்ன பலன் கிடைக்கும் என்பதை அறியலாம்.

    நல்லதே நடக்கும்

    நல்லதே நடக்கும்

    சனி பகவான் உங்கள் ராசிக்கு 9ம் இடமான தனுசு ராசியில் அமர்ந்து 3ம் பார்வையாக 11ம் இடமான கும்ப ராசியையும் 7ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 3ம் இடமான மிதுன ராசியை பார்க்கிறார். 3ம் இடம் முயற்சி ஸ்தானம் என்பதால் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். 10ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 6ம் இடமான கன்னி ராசியை பார்ப்பது மிகவும் நன்மையாகும். 3ஆம் பார்வையாக 11ம் இடமான லாபஸ்தானத்தை பார்ப்பது சிறப்பு வாய்ந்தது.

    படிப்பில் கவனம்

    படிப்பில் கவனம்

    சனிபகவான் அஷ்டமத்து சனியாக மாறுகிறார். சனி 3ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 10ம் இடமான தொழில் ஸ்தானத்தை பார்க்கிறார். இதனால் புதிய வேலைகள் கிடைக்கும். 7ம் பார்வையாக உங்கள் 2ம் இடமான தன ஸ்தானத்தையும் பார்ப்பது குடும்ப ஸ்தானத்தையும் பார்ப்பது உங்களுக்கு எதிர்பாரவிதமாக பணம் கிடைக்கும். சனிபகவான் தனது 10வது பார்வையாக உங்கள் ராசிக்கு 5வது இடத்தை பார்க்கிறார். இது பூர்வ புண்ணிய ஸ்தானம் என்பதால் உங்கள் குழந்தைகள் இடத்தில் எச்சரிக்கை தேவை. ஆஞ்சநேயரை வழிபடுவதன் மூலம் துன்பங்களில் இருந்து விடுபடலாம்.

    வெளிநாடு யோகம்

    வெளிநாடு யோகம்

    சனிபகவான் இதுநாள் வரை 6 வது இடத்தில் இருந்தார். இனி கண்டச்சனியாக 7வது இடத்திற்கு வருகிறார். அவரது 7வது பார்வை உங்கள் ராசியின் மீது விழுகிறது. சனி 3ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 9ம் இடத்தைப் பார்ப்பதால் வேலையில் மாற்றம் ஏற்படும். ஒரு சிலருக்கு வேலை காரணமாக வெளிநாடு செல்ல வாய்ப்பு அமையும். சனி 10ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 4ம் இடத்தை பார்ப்பதால் இதுவரை வராத சொத்துக்கள் வந்து சேரும். ஒரு சிலருக்கு இடம், வீடு, வண்டி, வாகனங்கள் வாங்குவதில் ஆரம்பத்தில் இருந்து வந்த தடை நீங்கும்.

    ஹெல்மெட் அவசியம்

    ஹெல்மெட் அவசியம்

    ராசிக்கு 6வது இடத்தில் உள்ள சனிபகவான் 7ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 12ம் இடத்தை பார்ப்பது சற்று சுமாரான பலன்தான். 3ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 8வது இடத்தை பார்க்கிறார்.வண்டி வாகனங்களில் செல்லும் போது ஹெல்மெட் அவசியம். சனி பகவான் 10ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 3ம் இடத்தை பார்ப்பது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

    பண வரவு

    பண வரவு

    சனி பகவான் 3ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு 7ஆம் இடத்தை பார்ப்பதால் திருமணம் சற்று தாமதமானாலும் எல்லாமே நன்மையாக முடியும். உங்கள் ராசிக்கு 7ம் பார்வையாக 11ம் இடத்தை பார்ப்பதால் உங்களுடைய ஆசைகள் நிறைவேறும். மூத்த சகோதர சகோதரிகள் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.10ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு 2ஆம் இடத்தை பார்ப்பதால் இதுவரை நிலுவையில் இருந்து வந்த வராத பணம், நகை, பொருட்கள் எல்லாம் கிடைக்கும்.

    சோம்பேறித்தனம்

    சோம்பேறித்தனம்

    ராசியின் 3வது இடத்தில் இருந்து ராசிக்கு 4வது இடத்திற்கு அர்த்தாஸ்டம சனியாக அமர்ந்துள்ளார். 3ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 6ஆம் இடத்தைப் பார்ப்பதால் வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு அமையும். 7ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 10ம் இடத்தை பார்ப்பதால் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். 10ம் பார்வையாக உங்கள் ராசியை பார்ப்பதால் சோம்பேறித்தனத்தை விரட்ட வேண்டும்.

    உறக்கம் கெடும்

    உறக்கம் கெடும்

    சனி பகவான் 3ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 5ஆம் இடத்தை பார்வையிடுவதால் காதல் உற்சாகமாக இருக்கும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் கிடைக்கச் செய்வார். 7ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு 9ஆம் இடத்தை பார்வை செய்வதால் உயர்கல்வி பயிலுவதில் இதுவரை இருந்து வந்த தடைகள் நிவர்த்தியடையும். 12ஆம் இடத்தை பார்ப்பதால் வெளிநாடு செல்வதில் உள்ள தடை விலகும். உறக்கம் கெடும்.

    விருச்சிகம் கவனம் தேவை

    விருச்சிகம் கவனம் தேவை

    ஏழரை சனியின் கடைசி கட்டத்தில் இருக்கும் உங்களுக்கு இனி பாத சனியாக இரண்டரை ஆண்டுகள் பயணிக்கப் போகிறார். சனிபகவான் உங்கள் ராசிக்கு 4வது ஸ்தானத்தை பார்ப்பதால் படிப்பில் கவனம் தேவை. பண வரவுகள் வந்து சேரும். தாயாரின் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தை பார்ப்பதால் வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. வார்த்தைகளில் கவனம் தேவை. 10ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு 11ஆம் இடத்தை பார்ப்பது நன்மை.

    தனுசு ராசி

    தனுசு ராசி

    ராசிக்கு ஜென்மத்தில் அமர்கிறார் சனிபகவான். சனிபகவான் ஜென்மசனியாக தொடர்கிறார். 11வது இடத்தில் இருக்கும் குரு பகவானால் நன்மையே கிடைக்கும். தைரிய ஸ்தானதிபதி சனிபகவான் உங்கள் ராசிக்கு வந்திருக்கிறார். எனவே பயம் வேண்டாம். சனி பகவான் 7ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு 7ஆம் இடத்தை பார்ப்பதால் சுபகாரியங்கள் நல்லபடியாக நடக்கும். புதிய தொழில் தொடங்க வாய்ப்பு அமையும். 10ஆம் பார்வையாக ராசிக்கு 10ஆம் இடத்தை பார்ப்பதால் தொழில் விருத்தியடையும்.

    வம்பு வழக்குகள்

    வம்பு வழக்குகள்

    சனிபகவான் 12வது இடத்தில் விரைய சனியாக அமைகிறார். சனி பகவான் இரண்டாவது ஸ்தானத்தை பார்க்கிறார் சனி. நாக்குல சனி என்பார்கள். வாயினால் வம்பு வழக்குகள் வரலாம். ராசிக்கு 6வது ஸ்தானத்தை சனி பகவான் பார்க்கிறார். எனவே நோய் நொடிகள் எட்டிப்பார்க்கும். 10 ஆம் பார்வையாக ராசிக்கு 9வது இடத்தை பார்ப்பதால் பார்க்கும் வேலையை விட வேண்டி வரும். வேலை நிமித்தமாக ஒரு சிலர் வெளிநாடு செல்வர். கும்பகோணம் அருகில் திருக்கோடிக்காவலில் சனிபகவானை வணங்கினால் நன்மை கிடைக்கும்.

    தன்னம்பிக்கை அதிகரிக்கும்

    தன்னம்பிக்கை அதிகரிக்கும்

    சனி பகவான் 3ம் பார்வையாக உங்கள் ராசியைப் பார்ப்பதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தள்ளிப் போன சுபகாரியங்கள் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். சனி பகவான் 10ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு 8ஆம் இடத்தை பார்ப்பதால் வண்டி வாகனங்களில் கவனம் தேவை. 7ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு 5ஆம் இடத்தைப் பார்ப்பதால் காதல் விஷயங்கள் கைகூடும்.

    கருமசனியில் கவனம்

    கருமசனியில் கவனம்

    ராசிக்கு 9வது இடத்தில் இருந்து சனிபகவான் 10வது இடத்திற்கு வருகிறார். 3ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 12ஆம் இடத்தைப் பார்க்கிறார். இது உறக்கத்தை கெடுக்கும். 7ம் பார்வையாக 4ம் இடத்தைப் பார்ப்பதால் ஒரு சிலருக்கு சொத்துக்கள் வாங்க வாய்ப்புகள் அமையும். 10ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 7ம் இடத்தை பார்ப்பதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். மலைபோல் வரும் துன்பங்கள் பனிபோல விலக காக்கைக்கு எள் சாதம் வைக்க வேண்டும்.

    விநாயகரை சரணடையுங்கள்

    விநாயகரை சரணடையுங்கள்

    12 ராசிக்காரர்களுக்கும் பலவித நன்மை, தீமைகள் கலந்த பலன்களே கூறப்பட்டாலும் சனி பகவானின் பார்வை படும் இடத்தைப் பொறுத்து யாருக்கு எப்படி என அறியலாம். இந்த பலன்கள் பொது பலன்கள்தான். ராசிக்காரர்களுக்கு நடைபெறும் தசாபுத்தியைப் பொறுத்து பலன்கள் மாறுபடலாம். பாதக பலன் என்று அஞ்ச வேண்டாம் ஆஞ்சநேயரையும், முழுமுதற்கடவுள் விநாயகரையும் வணங்கவும்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+