கறுப்புதான் சனிக்கு பிடிச்ச கலரு... இது சனி பயோடேட்டா
சனிபகவானின் நிறம் கறுப்பு, பிடித்த மலர் கருங்குவளை, பிடித்த தானியம் எள். எனவேதான் சனிபகவானை கருங்குவளை மலர் சூடி எள், எண் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.
சென்னை: சனிபகவானுக்கு பிடித்த தானியம் எள். அந்த எள்ளில் இருந்து எடுக்கப்பட்ட நல்லெண்ணெய் தீபம் ஏற்றி அவரை மனதார வேண்டினால் நன்மையே நடக்கும்.
ஈஸ்வரப்பட்டம் பெற்றவர் சனீஸ்வரன். அவரவர் வினைக்கேற்ப பலன்கனை வழங்குவதில் நீதி தவறாதவர் சனீஸ்வரன். எனவேதான் மக்களுக்குச் சனிபகவானிடம் சற்று அச்சம் உண்டு.

தொழில் காரகன் கர்ம காரகன் ஆன சனி பகவான் ஆட்சி பெற்றால் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஆற்றல் உள்ளவர், கடும் உழைப்பினால் உயர்ந்த இடத்திற்கு வருபவர், நிலையான சொத்துக்கள், நிலம், வாகனம், வீடு ஆகியவற்றை சேர்ப்பவர், தீர்க்காயுள் உள்ளவர்.
சனிபகவானின் பயோடேட்டாவை படியுங்கள்:
நட்சத்திரங்கள் - பூசம், அனுஷம், உத்திரட்டாதி
பால் - அலி
நிறம் - கறுப்பு
தேவதை - யமன்
பிரத்தியதி தேவதை -பிரஜாபதி
இரத்தினம் - நீலக்கல்
மலர் - கருங்குவளை
குணம் - குருரன்
ஆசன வடிவம் - வில்
தேசம் - சௌராஷ்டிரம்
சமித்து - வன்னி
திக்கு - மேற்கு
சுவை - கசப்பு
உலோகம் - இரும்பு
வாகனம் - காகம்
பிணி - வாதம்,வாய்வு
தானியம் - எள்
காரகன் - ஆயுள்
ஆட்சி - மகரம், கும்பம்
உச்சம் - துலாம்
நீசம் - மேஷம்
மூலத்திரிகோணம் - கும்பம்
நட்பு - புதன், சுக்கிரன், இராகு, கேது
பகை - சூரியன், சந்திரன், செவ்வாய்
சமம் - வியாழன்
உபகிரகம் - குளிகன்
உறுப்பு - தொடை
திசை காலம் - 19 வருடங்கள்
கோசார காலம் - இரண்டரை வருடம்
ஸ்தலம் - திருநள்ளாறு, குச்சனூர்
சனி பகவான் உச்சம் ஆனால் தொழில் துறையில் சாதனை படைப்பவராகவும் மேலும் தொழில் துறை சார்ந்த சங்கங்களில் தலைமை பொறுப்புகளில் வருபவராகவும் ஆவார், கோயில் ஆன்மீக திருப்பணிகளில் செல்வாக்கு பெற்றவர், நீதிமானாக திகழ்வார், கர்ம வீரராக திகழ்வார், தன் இலட்சியத்தை நோக்கி பொறுமையாக நகர்ந்து வெற்றி அடைவார்.
சனியின் கோபப் பார்வையில் இருந்து தப்பிக்க காக்கைக்கு தினந்தோறும் சாதம் வைக்க வேண்டும். உளுந்து தானியத்தை தானம் செய்யலாம். சனிக் கிழமை அதிகாலை வேளைகளில் குளித்து விட்டு சனி பகவானுக்கு எள் எண்ணெய் தீபம் போடலாம்.
சுந்தர காண்டம் பாராயணம் செய்வதும் ஏழரைச் சனியின் தோஷம் குறைக்கும். பார்வையற்றோர், மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள், முதியோர்கள், ஆதரவற்றோர், கடின உழைப்பாளிகள், தொழிலாளிகள், பாரம் தூக்குவோர், துப்புரவு தொழிலாளிகள் போன்றவர்களுக்கு செய்யும் உதவியும், தொண்டும் சனீஸ்வரருக்கு மிகவும் பிடித்தமானதாகும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications