சனிப்பெயர்ச்சி 2017: 12 ராசிகாரர்களுக்கும் பரிகாரங்கள்
சனிபகவானை சாந்திப்படுத்த தானம் செய்ய வேண்டும் என்றும் அதற்கான பரிகாரங்களையும் பார்க்கலாம்.
Recommended Video

சென்னை: கறுப்பு வஸ்திரம் சனி பகவானின் வஸ்திரம் ஆகும். இதனை தானம் கொடுத்தால் வெற்றியைத் தருவார்.தொல்லை தரும் பிரச்சனைகள் விலகும் என்று வேத சிவாகம வித்யா பூஷணம் ஜோதிடர் குருஜி ஸ்ரீ ராஜீவ் சிவம்
டிசம்பர் 19ஆம் தேதி செவ்வாய் கிழமை காலை சனி பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
சுப பலன்கள் பெரும் ராசிக்காரர்கள் மேஷம்,கடகம்,துலாம்,கும்பம்,மீனம். அவசியம் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள்.ரிஷபம்,மிதுனம்,சிம்மம்,கன்னி, விருச்சிகம்,தனுசு, மகரம்.

சனிபகவானுக்கு ப்ரீதி
கருப்பு நிறம் உள்ளவர்களுக்கு உதவி செய்தால் சனி பகவானுக்கு ப்ரீதியாகும்
சனி திசை அல்லது பூசம் அனுஷம் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உதவி செய்தால் சனி பகவான் அருள் முழுவதும் கிடைக்கும்.

சனிதோஷம் விலகும்
கரு நீல கல் பதித்த வெள்ளி மோதிரம் கல் விரலில் படும் படி அணிய சனி பகவான் தோஷங்கள் விலகும்.7 -1/2 சனி , அர்த்தாஷ்டம சனி,அஷ்டமச் சனி தோஷங்களும் விலகும் அற்புதமான பலன்கள் உண்டாகும்.

சனிபகவானுக்கு எள் தீபம்
கருப்பு நிறமுள்ள காகத்திற்கு உணவு வைத்தாலும் சனி பகவானுக்கு ப்ரீதியாகும்.
சனிக்கிழமை எள்ளு சாதம் செய்து நவக்கிரக சன்னதியில் சனி பகவானுக்கு படைத்து விட்டு,பிறருக்கு தரலாம். காகத்திற்கு வைக்கலாம்.

செருப்பு தானம்
தன் வயதளவு எள்ளுருண்டையை வாங்கி ,சனிக்கிழமையன்று சனி பகவானை வழிபட்டு விட்டு அங்கிருப்பவர்களுக்கு கொடுக்க ப்ரீதியாகும். சனிக்கிழமைகளில் பிறருக்கு செருப்பை வாங்கிக் கொடுத்தால் சனிப் ப்ரீதியாகும்.

கருங்குவளை மலர் மாலை
சனிக்கிழமை காலை 6-7 சனி ஹோரையில் சனிஸ்வர காயத்ரி 108 முறை சொல்லவும்.நிச்சயம் சனி தசை முழுவதும் நல்ல பலனைத் தரும். சனி தசை சனி புத்தி முழுவதும் செய்யவும். சனிக்கிழமையன்று சனி பகவானுக்கு கருங்குவளைப் புஷ்பத்தால் அர்ச்சனை செய்து வர சனிப் ப்ரீதியாகும்.

வன்னி மரத்தை வலம் வரலாம்
சனிக்கிழமை அன்று உடல் ஊனமுற்றவர்களுக்கு அன்னதானம் செய்யவும்.ப்ரீதியாகும்.
தங்களின் நட்சத்திரம் அன்று வன்னிமரத்திற்கு தேங்காய் பழம் வைத்து தூபம்,தீபம் காண்பித்து வழிப்படவும். தொடர்ந்து வன்னி மரத்தை 27 தடவை வலம் வரவும்.இப்படி ஒவ்வொரு மாதத்திலும் தங்களின் நட்சத்திரம் அன்று வழிபடவும். சனியின் நட்சத்திரம் பூசம்,அனுஷம், உத்திரட்டாதியில் பிறந்தவர்கள் ,சனி மகாதசை, சனி புத்தி நடப்பவர்களுக்கும் நல்ல பலன் நிச்சயமாக நடக்கும்.

சனிப்பெயர்ச்சி யாக பொருட்களும் மற்றும் பலன்கள்
நவக்கிரக தோஷங்கள் நீங்க_அன்னதான பொருட்கள்
திருமண தடை விலக -மஞ்சள்-குங்குமம்சந்தனம்-விபூதி
கஷ்டங்கள் நீங்க-கற்பூரம்
மன நிம்மதி உண்டாக -ஊதவத்தி
சனி தோஷம் விலகிட-நல்லெண்ணெய்
வேலை வாய்ப்பு மற்றும் சந்தான பிராப்தம் ஏற்பட -நெய்
நோய் நீங்க- ஹோம திரவியம் (மூலிகை)
ஏழரை சனி கஷ்டங்கள் குறைய- எள்ளு
நன்மைகள் ஏற்பட- நவதான்யம்
ஐஸ்வர்யம் பெருக -கொப்பரைபூர்ணாஹுதி பட்டு
குடும்ப ஒற்றுமை ஏற்பட- புஷ்ப கைங்கர்யம்
ஆரோக்யம் ஏற்பட-நிவேதன பழங்கள்
அஷ்ட லட்சுமி கடாட்சம் உண்டாக-உற்சவர் அலங்காரம் கைங்கர்யம்

ராசி நட்சத்திரம்
பொருட்கள் வாங்கி அனுப்பும் பக்தர்கள் . தங்கள் பெயர் நக்ஷத்திரம் ராசி கோத்ரம் பிரார்த்தனை அனைத்தும் எழுதி அனுப்பினால் யாகத்தில் சங்கல்பம் செய்யபடும். மேற்கண்ட பொருட்கள் அனைத்தும் சனிப்பெயர்ச்சி பரிகார யாகத்தில் ஆஹுதியாக ஹோமத்தில் சேர்க்கபடும் சுபம். கொரியர் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி ஜோதிடர் குருஜி ஸ்ரீ ராஜீவ் சிவம், அருள்மிகு வீர ஆஞ்சநேயர் கோவில் காமாட்சி நகர், B D O ஆபிஸ் பின்புறம் வாலாஜா பேட்டை-632513 . வேலூர் மாவட்டம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications