சுக்கிரன் பெயர்ச்சி 2019: தனுசு ராசியில் காதல் நாயகன் சுக்கிரன் - 12 ராசிக்கும் பலன்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுக்கிரன் காதல் கிரகம். சுக்ரன் என்றால் இன்பம். மனித வாழ்க்கையில் அன்பு, பாசம், காதல் ஆகிய மூன்று இன்பங்களை அளிக்கக் கூடியவர். சுக்கிரன் சுக போகங்களின் அதிபதி. இதுநாள் வரை செவ்வாயின் வீடான விருச்சிகம் ராசியில் குடியிருந்த சுக்கிரன் இனி நெருப்பு ராசியான தனுசுவில் சனி, கேது, குரு உடன் இன்று முதல் குடியேறியுள்ளார். சுக்கிரன் மனிதர்களின் சிற்றின்பம், திருமணம் முதலான சுகத்தை ஆணுக்கு அளிப்பவர். அதே போல் பெண்களுக்கு நளினத் தன்மையையும் அழகான தோற்றம், கவர்ச்சி, வீரியசக்தி, அறிவாற்றல், மனத்துக்கிசைந்த கணவனை அடையும் தகுதியையும், சுக போகங்களில் திளைத்து மகிழும் ஆற்றலையும் வழங்குவார். டிசம்பர் 15 ஆம் தேதி வரை தனுசு ராசியில் இருக்கும் சுக்கிரனால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

கிரகங்களின் கூட்டணி, சஞ்சாரத்தை வைத்து ராசிக்காரர்களுக்கு நன்மையும் தீமையும் நடைபெறும். சுக்ரன் களத்திரகாரகன் இல்லற வாழ்வுக்குறியவர்.

சுக்ரன் மனைவி யோகம் தருபவர் ஆணுக்கு மனைவியைப்பற்றியும், பெண்ணுக்கு மண வாழ்க்கையைப் பற்றியும் சொல்லுகின்றவர். ஆகையால் சுக்கிரன் நமது ஜாதக கட்டத்தில் நல்ல யோக அம்சத்துடன் இருப்பது அவசியம்.

இவருடைய தசா காலமான 20 வருடங்களில் மிகப்பெரிய ராஜ யோக பலன்கள் உண்டாகும். ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் சனி சேர்க்கை பெற்றிருந்தால் அது கோடீஸ்வர யோகமாக அமைகிறது. யோக ஜாதகமாகும். வசதியான மனைவி அமைவார். நன்றாக சம்பாதிக்கும் மனைவி அமைவார். ஒருவரின் ஜனன ஜாதகத்தில் ஏழாம் வீட்டில் சுக்கிரன் சனி சேர்க்கை கண்டிப்பாக இருதாரயோகம் கொடுக்கும். சிலருக்கு கலப்பு திருமணம் நடைபெறும். இந்த சுக்கிர பெயர்ச்சி என்ன பலன்களை கொடுக்கும் என்று பார்க்கலாம்.

 மேஷம்

மேஷம்

சுக்கிரன் உங்க ராசிக்கு குடும்ப ஸ்தான அதிபதி களத்திர ஸ்தான அதிபதி. இன்று முதல் உங்க ராசிக்கு 9ஆவது வீடான பாக்ய ஸ்தானத்தில் அமர்கிறார். ஒன்பதால் வீட்டில் ஏற்கனவே சனி, குரு, கேது இணைந்திருக்கிறார்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உங்க வீட்டில் மனைவியின் அன்பான ஆதரவு கிடைக்கும். காதலி நண்பர்கள், உறவினர்களுடன் உற்சாகமாக இருக்கும் காலம் இது. காதலிப்பவர்களுக்கு இந்த மாதம் குதூகலமாக அமையும். வெளிநாடு யோகம் கைகூடி வருகிறது. பாஸ்போர்ட் எடுத்தவர்கள் விசாவிற்கு முயற்சி செய்யலாம். பணவரவும் அதிகரிக்கும். அப்பா வழியில் உதவி கிடைக்கும் சிவனுக்கு வெள்ளிக்கிழமைகளில் சந்தனம் அபிஷேகத்திற்கு வாங்கித்தர நன்மைகள் நடைபெறும்.

ரிஷபம்

ரிஷபம்

உங்கள் ராசி நாதன் சுக்கிரன் எட்டாம் இடத்தில் சுக்கிரன் மறைகிறார். எட்டில் மறைந்தாலும் உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டை ராசி அதிபதி பார்வையிடுகிறார். பணவரவு அதிகமாகும். எட்டாம் வீட்டில் ஏற்கனவே சனி, கேது, குரு அங்கே குடியிருக்கிறார்கள் கூடவே சுக்கிரன் இணைவதால் மனைவியின் உடல் நலத்தில் அக்கறை செலுத்தவும். இல்லாவிட்டால் மருத்துவ செலவுகள் எற்படும். இருவருமே கவனமாக இருந்தால் பொருள், நகை பாதிப்பை தவிர்க்கலாம். விலை உயர்ந்த பொருட்களை பத்திரப்படுத்துங்கள். பணத்தை பத்திரப்படுத்துங்கள் விலை உயர்ந்த நகைகளை யாருக்கும் இரவல் கொடுக்க வேண்டாம். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். வெள்ளிக்கிழமை அம்மாவிற்கு வெள்ளிப்பொருட்கள் வாங்கி பரிசளித்து ஆசிர்வாதம் பெறலாம்.

மிதுனம்

மிதுனம்

காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 7ஆம் இடத்தில் களத்திர ஸ்தானத்தில் சனி, குரு, கேது உடன் இணைந்துள்ளார். வீட்டில் வாழ்க்கை துணை உடனான காதல் உணர்வுகள் அதிகரிக்கும். சிலருக்கு காதல் கணிந்து திருமணத்திலும் முடிய வாய்ப்பு உள்ளது. தொழில் விசயத்தில் ஜாக்கிரதையாக இருக்கவும். சிறிய அளவில் உடல்நலக்குறைவு ஏற்படும். பெண்கள் விசயத்தில் சற்று கவனமாக இருக்கவும். இல்லை எனில் மதிப்பு மரியாதைக்கு பிரச்சினை ஏற்பட்டு விடும். சுக்கிரனின் அருட் பார்வை உங்க ராசிக்கு கிடைக்கிறது. காதல் வாழ்க்கையில் சந்தோஷம் கூடும். வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர ஓரையில் விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

கடகம்

கடகம்

சுக்கிரன் உங்கள் ராசிக்கு 6வது இடத்தில் மறைவதால் உங்கள் உடல் நலனையும் பாக்கெட்டில் உள்ள பணத்தையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளவும். வீட்டில் வாழ்க்கைத்துணையினால் சின்னச்சின்ன சச்சரவுகள், ஊடல்கள் ஏற்பட்டு அதனால் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படும். வேலை பார்க்கும் இடத்தில் கடும் உழைப்பை கொடுக்க வேண்டிய காலமிது. பணம் விசயத்தில் கவனமாக இருங்க. ஆறாம் வீட்டில் மறைந்துள்ள நான்கு கிரகங்களில் சனி தவிர வேறு எதுவுமே உங்களுக்கு நல்லது செய்யாது என்பதால் வேலை விசயத்தில் கவனமாக இருங்க. பணத்தையும் பத்திரமாக வைத்திருங்கள். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுத்து விட்டு அவதிப்பட வேண்டாம். உங்க உடல் ஆரோக்கியத்தில கவனமாக இருங்க மருத்துவ செலவுகள் வரும். கவலைகள், சங்கடங்கள் சூழும் காலம் என்பதால் ஸ்படிக மாலை அணிந்து கொள்வது நல்லது. வெள்ளிக்கிழமை அம்பிகையை விளக்கேற்றி வணங்கலாம் நன்மைகள் நடைபெறும்.

சிம்மம்

சிம்மம்

பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு சுக்கிரன் பெயர்ச்சி அடைவது நன்மை தரக்கூடியது ஏற்கனவே பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு ஆட்சி பெற்று அமர்ந்துள்ளார். கணவன் மனைவிக்குள் அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். வெற்றிகரமான கால கட்டம் இது. நண்பர்களுடன் கூட்டணி அமைத்து தொழில் செய்வீர்கள். பணவரவு அதிகரிக்கும். காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது. மனதில் மகிழ்ச்சி கொப்பளிக்கும். உங்களுக்கு கற்பனை வளமும் அழகுணர்ச்சியும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவர் உங்கள் மீது காதல் மழை பொழியும் நேரமிது. வீட்டில் மனைவி, குழந்தைகள் மீது அன்பும் பாசமும் அதிகரிக்கும். குழந்தைகளுக்கு நல்லது நடக்கும் . சுப காரியங்கள் கை கூடி வரும். குழந்தைகளுக்கு வேலைகள் கிடைக்கும். வாழ்க்கையில் செட்டில் ஆவார்கள். பொருளதார நிலை உயரும். படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். திருமணமாகாத பிள்ளைகளுக்கு நல்ல வரன் தேடி வரும். பூர்வீக சொத்துக்களின் பாக பிரிவினையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பெற்றோர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பெற்றவர்களின் மனதில் இருந்த கவலை நீங்கும். காரியங்கள் சாதகமாக முடியும். வெள்ளிக்கிழமை அம்மன் கோவில்களில் விளக்கேற்ற மேலும் நன்மைகள் நடக்கும்.

கன்னி

கன்னி

சுக்கிரன் நான்காம் வீடான சுகஸ்தானத்தில் முக்கிய கிரகங்களுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். தடைபட்ட காரியம் நிறைவேறும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். செயல்களால் புகழ் அடைவீர்கள். உதவும் மனப்பான்மை அதிகமாகும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அம்மா உடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். அம்மா உடன் நெருக்கம் கூடும். நேரத்தை மகிழ்ச்சியாக செலவு செய்வீர்கள். ஆண்கள் பெண்களுக்கு உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள் மருத்துவ செலவுகளுக்கு கடன்கள் ஏற்படும். பணியிடத்தில் இருந்த பிரச்சினை விலகும். வேலைப்பளு குறையும் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். வீட்டுக்குத் தேவையான அலங்கார பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். சிலர் வீடுகளை பராமரிப்பு செய்வீர்கள். அம்மாவின் உடல் நலத்தில் அக்கறை தேவை. வண்டி வாகனம் வாங்கும் போது மட்டும் கவனமாக வாங்க வேண்டும் இல்லை எனில் செலவு இழுத்து விட்டு விடும். வெள்ளிக்கிழமைகளில் சில ஆலயங்களில் அம்மனுக்கு மல்லிகை, முல்லை பூக்களை வாங்கித் தர பாதிப்புகள் மறையும்.

துலாம்

துலாம்

உங்க ராசி அதிபதி சுக்கிரன் ராசிக்கு 3ஆம் இடமான முயற்சி ஸ்தானத்தில் அமர்ந்து உள்ளார். செய்யும் முயற்சிகள் வெற்றி அடையும். உடன் பிறந்தவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். தங்கைகளுக்கு வரன் கூடி வரும் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள்.உங்களின் பேச்சுத்திறமையும், அழகியலும் அதிகரிக்கும். உங்கள் நட்பு வட்டம் அதிகரிக்கும். உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். சிறு பிரச்சினைகளையும் கவனியுங்கள். சிறு ஆன்மீகப் பயணம் செல்ல வேண்டியிருக்கும். தொலைந்த விலை உயர்ந்த பொருட்கள் கிடைக்கும். அண்டை அயலாருடன் இருந்த பிரச்சினைகள் தீரும். மகளின் திருமணத்தை சற்றே தள்ளிப்போடுவது நல்லது. பூர்வீக சொத்துக்களில் பாகப்பிரிவினைகள் ஏற்படும். தூக்கமின்மை பிரச்சினை ஏற்படும். நெருப்பு, இயந்திரங்களில் கவனம் தேவை. கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து போங்கள். வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயாரை விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

இதுநாள் வரை உங்கள் ராசியில் சூரியன் உடன் சஞ்சரித்து வந்த சுக்கிரன் இனி சனி, கேது, குரு உடன் 2வது வீட்டில் குடியேறப்போகிறார். தன ஸ்தான சுக்கிரனால் பண வருமானம் அதிகாிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். கணவன் மனைவிக்கு இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். திருமண வயதில் இருப்பவா்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும். சிலர் வீட்டில் குவா குவா சத்தம் கேட்கும். பெண்கள் விலை உயர்ந்த நகைகள் பணம் வாங்குவீர்கள். பிசினஸில் லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உற்சாகமாக இருப்பீர்கள். சிங்கிளாக இருந்தவர்கள் திருமண முயற்சிகளை செய்யலாம் காரணம் ஏற்கனவே குரு இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இனி எல்லாமே நல்லதாகவே நடக்கும். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று செந்தூரம் வாங்கி தந்து வழிபட மேலும் நன்மைகள் நடைபெறும்.

தனுசு

தனுசு

காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசியில் குடியேறப்போகிறார். முகத்தில் பொலிவு கூடும். சிலருக்கு வயிற்றில் பிரச்சினைகள் வரலாம் என்பதால் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். நல்ல வருமானம் வரும். பொன்னும் பொருளும் சேரும் நேரம் இது. தங்க நகைகள் வாங்கலாம். ஆடம்பரமான பொருட்களை வாங்குவதால் சுப செலவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு மேற்படிப்பு படிக்க வழி ஏற்படும். கணவன் மனைவி இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். உங்களுக்கு சிக்கலான நேரத்தில் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு சென்று சிவப்பு ரோஜா வைத்து வணங்கி வர மேலும் நன்மைகள் நடைபெறும்.

மகரம்

மகரம்

உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானமாக 12வது வீட்டில் சுக்கிரன் உங்கள் ராசி நாதனுடன் கூட்டணி அமைத்து குடியேறியுள்ளார். லாப ஸ்தானத்தில் நான்கு கிரகங்களின் சேர்க்கை உற்சாகத்தை தரும். சுப விரைய செலவு ஏற்படும். டிவி பிாிட்ஜ் ஏசி பொருட்கள் வாங்கலாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி கணவன் மனைவி மகிழ்ச்சியாய் இருப்பாா்கள். வாழ்க்கை துணையுடன் அந்நியோன்னியம் அதிகரிக்கும். பணவரவு சிலருக்கு உற்சாகத்தை தரும். பணம் வரும் போது பத்திரப்படுத்துங்கள். சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்பை எற்படுத்தி கொடுக்கும். படிப்புக்காக சிலர் வெளிநாடு செல்வார்கள். வெள்ளிக்கிழமைகளில் சிவ ஆலயத்திற்கு தயிரும் சர்க்கரையும் வாங்கித்தர மேலும் நன்மைகள் நடைபெறும்.

கும்பம்

கும்பம்

சுக்கிரன் ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் அமர்ந்து உள்ளார். லாப ஸ்தானத்தில் நான்கு கிரகங்களின் சேர்க்கையால் திருமண வாழ்க்கையில் உற்சாகமடையும் வகையில் பல செயல்கள் நடைபெறும் மாதம் இது. பண வருவாய் அதிகாிக்கும். பிள்ளைகள் வழியில் சிறப்பான பலன்களை எதிா்பாா்க்கலாம். வீடு நிலம் வகையில் ஆதாயம் கிடைக்கும். அரசனுக்கு இணையான வாழ்க்கை கிடைக்கும் காலமாகும். வாகன வசதி மேம்படும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுக்கிர ஓரையில் நெய் தீபம் ஏற்றி வணங்கலாம்

மீனம்

மீனம்

உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் சனி, குரு, கேது உடன் அமைந்துள்ளார். உங்கள் வேலையில், தொழிலில் உற்சாகத்தை ஏற்படுத்தும். பணி இடத்தில் வார்த்தைகளில் கவனம் தேவை. அமைதியாக நிதானமாக பேசவும். குடும்பத்தில் மனைவியுடனே அல்லது காதலியுடனே சின்னச் சின்ன ஊடல் ஏற்படலாம் சமாளியுங்கள். செய்யும் வேலையில் உற்சாகமாக இருப்பீர்கள். உங்க அலுவலகத்தில் நீங்க செய்யும் வேலையில் திறமை அதிகரிக்கும். அலுவலகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சில சவாலான காரியங்களை செய்ய வேண்டியிருக்கும் கவனமாக இருக்கவும். நன்மைகள் அதிகம் நடைபெற வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு போய் விளக்கேற்றி வழிபடவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+